பசலைக்கீரை மற்றும் பனீர் காம்போதான் சைவ உணவுப்பிரியர்களின் ஃபேவரட் உணவாக இருக்கிறது. கெட்டுகெதர், பார்டி என எந்த இடத்திலும் இந்த உணவை தவிர்க்கமுடிவதில்லை. இவை இல்லாத அந்த விருந்து என்பது முழுமையடையாது என்று சொல்லும் அளவிற்கு இதன் சுவை கட்டிப்போட்டுள்ளது.
இப்படி அனைவரின் ஃபேவரட் காம்போவான பாலக் பனீர் கலவையை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு கேடு தரும் என்கிறார் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிமாமி அகர்வால்.
இஸ்டாகிராமில் அவருடைய பதிவில் “இவை இரண்டும் தனித்தனியே சாப்பிடுவது ஆரோக்கியமானதுதான் என்றாலும் ஒன்றாக சேர்த்து சாப்பிவதுதான் கேடு தரும்” என்கிறார். இதற்கு காரணங்களையும் விளக்கியுள்ளார்.
பொதுவாகவே சில உணவுகளை ஒன்று சேர சாப்பிடக்கூடாது என்பார்கள். அதற்காக அந்த உணவுகளை எந்த உணவுடனும் சேர்த்து சாப்பிடக்கூடாது என்று அர்த்தமில்லை. அதை சரியான கலவையுடன் சேர்த்து சாப்பிட வேண்டும் என்பதேயாகும்.
அந்த வகையில் பசலைக்கீரையையும் பனீரையும் ஒன்றாக கலக்கும்போது ஊட்டச்சத்து உறிஞ்சுதலை கட்டுப்படுத்துகிறது. இதனால் அந்த உணவின் ஊட்டச்சத்தை முழுமையாக பெற முடியாது என்கிறார். அதாவது பசலைக்கீரை இரும்புச்சத்து நிறைந்தது. பனீர் கால்சியம் சத்து நிறைந்தது. இந்த இரண்டு சத்துக்களும் ஒன்றோடு ஒன்று இணையாது. குறிப்பாக கால்சியம் சத்துக்கு இரும்புச்சத்தை உறிஞ்சும் ஆற்றல் குறைவு என்கிறார் நிமாமி.
Also Read : ஆன்டிபயாடிக்ஸ் அதிகமா எடுத்துக்கிறீங்களா..? அதன் ஆபத்தான பக்கவிளைவுகளையும் தெரிஞ்சுக்கோங்க..!
பனீருடன் கீரையை சேர்த்து சாப்பிடும்போது 5 சதவீதத்திற்கும் குறைவான இரும்புச்சத்து மட்டுமே உடலால் உறிஞ்சப்படுகிறது. இதனால் உடலுக்கு குறைவான இரும்புச்சத்தே கிடைக்கிறது. கீரையில் உள்ள ஆன்டி-நியூட்ரியண்ட் மூலக்கூறானது, கால்சியத்தை உறிஞ்சுவதில் இருந்து உடலைத் தடுக்கிறது மற்றும் இரும்பை மிகவும் குறைவாக உறிஞ்சுவதற்கு வழிவகுக்கிறது.
எனவே பாலக் கீரையுடன் பனீரை இணைத்து சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு புதிய காம்போக்களை முயற்சி செய்யலாம். உதாரணத்திற்கு பாலக்கீரையுடன் உருளைக்கிழங்கு, சோளம், போன்றவற்றை சேர்க்கலாம். இதனால் எந்த பாதிப்பும் இருக்காது என்கிறார் நிமாமி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.