Home /News /lifestyle /

நீரிழிவு ரெட்டினோபதியில் வளர்சிதை மாற்றக் கட்டுப்பாடு - உங்கள் சொந்த உடல் நலனில் அக்கறை காட்டுங்கள்

நீரிழிவு ரெட்டினோபதியில் வளர்சிதை மாற்றக் கட்டுப்பாடு - உங்கள் சொந்த உடல் நலனில் அக்கறை காட்டுங்கள்

நீரிழிவு ரெட்டினோபதி

நீரிழிவு ரெட்டினோபதி

Diabetic Retinopathy | உங்கள் சர்க்கரை அளவின் ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்துவது என்பது ஒரு நீரிழிவு நோயாளியாக நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டிய ஒன்று. இதிலடங்கிய நல்ல விஷயம் என்னவென்றால், இது DR உருவாகும் அபாயத்தையும் அதன் முன்னேற்றத்தையும் குறைக்க உதவுகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 6 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பார்வைக் கோளாறுகள் வயதாவதால் ஏற்படும் பொதுவான பக்க விளைவுகள்தான், ஆனால், நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவராக இருந்தால், அவை பிற சிக்கல்களுக்கான அறிகுறிகளாகும். நீரிழிவு நோய் வகைகளில் குறைவாக அறியப்பட்ட சிக்கல்களில் ஒன்று நீரிழிவு ரெட்டினோபதி (DR) ஆகும் - இது நீரிழிவு நோயால் விழித்திரையில் ஏற்படும் அனைத்து கோளாறுகளுக்கும் பொதுவான சொல்லாக அறியப்படுகிறது. கவனிக்கப்படாமல் விட்டால், DR நிரந்தர பார்வை இழப்பிற்கு வழிவகுக்கும். 

    பல அறிகுறிகள் பொதுவான வயது தொடர்பான சரிவை ஒத்திருப்பதால், நீரிழிவு ரெட்டினோபதியைக் கண்டறிவது சவாலானது. இருப்பினும், நீரிழிவு நோயாளிகள் மற்றும் அவர்களை கவனித்துக்கொள்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய குறிப்பிட்ட அறிகுறிகள் உள்ளன. நீங்களோ உங்கள் அன்புக்குரியவர்களோ இந்த அறிகுறிகளை உணர்ந்தால், மருத்துவரைப் பார்க்க வேண்டிய நேரம் இது

    ஒருவேளை உங்களுக்கு DR நோய்ப்பரவல் இருப்பதாகக் கண்டறியப்பட்டாலும், அதை மேற்கொண்டு பரவ விடாமல் தடுக்க நீங்கள் நிறைய விஷயங்களை செய்யலாம். நமது உடலினுள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளும் பல உறுப்பு மண்டலங்கள் உள்ளன. உங்கள் சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்பு உங்கள் விழித்திரையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது, இந்த இரு உறுப்புகளுக்கும் என்ன தொடர்பு என்பதை நாம் அறியாவிட்டாலும் கூட. பல ஆண்டுகளாக, DR தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சியானது இந்த நோயிற்கும் உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, நீரிழிவு சிறுநீரக நோய், உயர் இரத்த சர்க்கரை, வைட்டமின் மற்றும் தாது குறைபாடுகள், உடற்பயிற்சி ஆகியவற்றிற்கும் இடையே உள்ள பல தொடர்புகளைக் காட்டுகிறது.

    சர்க்கரை அளவின் ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்துதல்

    உங்கள் சர்க்கரை அளவின் ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்துவது என்பது ஒரு நீரிழிவு நோயாளியாக நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டிய ஒன்று. இதிலடங்கிய நல்ல விஷயம் என்னவென்றால், இது DR உருவாகும் அபாயத்தையும் அதன் முன்னேற்றத்தையும் குறைக்க உதவுகிறது. HbA1c யில் ஏற்படும் 1% வீழ்ச்சி கூட நீரிழிவு தொடர்பான சிக்கல்களில் (DR) உருவாகும் வாய்ப்பை 35% வரைக்கும், நோயின் முன்னேற்றத்தை 15-25% வரைக்கும், பார்வைத் திறன் இழப்பை 25% வரைக்கும் மற்றும் திடீர் குருட்டுத்தன்மையை 15% வரைக்கும் குறைக்கலாம்

    அளவுகள் மாறுபடும் என்பதால், ஒரு நாளில் பலமுறை சர்க்கரை அளவைச் சரிபார்க்குமாறு NHS UK பரிந்துரைக்கிறது. உங்கள் இரத்த சர்க்கரை அளவை வீட்டில் பரிசோதிக்கிறீர்கள் என்றால், அது 4 முதல் 7mmol/l வரை இருக்க வேண்டும். நீரிழிவு நோயாளியாக, உங்கள் சராசரி இரத்த சர்க்கரை அளவு, அல்லது HbA1c, 48mmol/mol அல்லது 6.5% ஆக இருக்க வேண்டும்

    இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தல் 

    உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், கண் பாதிப்பு போன்ற நீரிழிவு சிக்கல்கள் இருந்தால், 140/80mmHgக்கு அதிகமாகவோ அல்லது 130/80mmHgக்குக் குறைவாகவோ இரத்த அழுத்த அளவீடுகளை இலக்காகக் கொள்ளுமாறு NHS பரிந்துரைக்கிறது. இரண்டாம் வகையில், BP 180/100 mmHg உள்ள நோயாளிகளுடன் ஒப்பிடுகையில் BP 150/85 mmHg உள்ள நபர்கள் 33% குறைவான DR பரவலையும் 50% குறைவான பார்வை இழப்பையும் கொண்டுள்ளனர்.

    இரத்த ஓட்டத்தில் லிப்பிட்களைக் கட்டுப்படுத்தல் 

    'லிப்பிடுகள்' என்று கூறும்போது, அதில் பொதுவாக கொலஸ்ட்ரால் அளவுகள், லிப்போபுரோட்டின்கள், கைலோமிக்ரான்கள், VLDL, LDL, அபோலிப்போபுரோட்டின்கள் மற்றும் HDL ஆகியவை அடங்கும். 4mmol/lக்கு கீழே உள்ள அளவை ஆரோக்கியமான மொத்த கொலஸ்ட்ரால் அளவாக NHS பரிந்துரைக்கிறது

    அதிகரிக்கப்பட்ட சீரம் லிப்பிட் செறிவுகள் 'ஹார்டு எக்ஸுடேட்ஸ்' எனப்படும் DR சிக்கலின் ஒரு குறிப்பிட்ட அபாயத்துடன் தொடர்புடையவை. நீரிழிவு ரெட்டினோபதி நோய் உள்ளவர்களில், உயர் சீரம் லிப்பிட் அளவைக் குறைப்பது கடினமான எக்ஸுடேட்களின் அபாயத்தைக் குறைப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. உங்களுக்கு இப்போது சீரம் லிப்பிட்கள் அதிகமாக இருந்தாலும், இன்றே சரியான நடவடிக்கை எடுப்பதன் மூலம் உங்கள் கண்பார்வையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்

    உடல் பருமன், உடல் செயல்பாடு மற்றும் DR 

    உடல் பருமனும் நீரிழிவு நோயும் ஒன்றோடொன்று சேர்ந்து வரும் என்பது அனைவரும் அறிந்ததே. இப்போது அறிவியலும் இதை ஆதரிக்கிறது. உடல் பருமனானது டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் DR உருவாக்கத்தை அதிகரிக்கிறது என்று ஒரு மெட்டா பகுப்பாய்வு காட்டுகிறது.

    நல்ல விஷயம் என்னவென்றால், உடல் இயக்கங்களை அதிகரித்தால் அது DR வளரும் அபாயத்தைக் குறைக்கும்! அதிக அளவிலான உடல் இயக்கங்கள் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்களுக்கு DR சுயாதீனமாகக் குறைப்பது மட்டுமல்லாமல், வாரத்தில் 5 நாட்களுக்கு குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யும்போது, DR வளர்ச்சியின் அபாயத்தை 40% குறைக்கிறது.

    DR உள்ளவர்களுக்கு பயனளிப்பதாக நிரூபிக்கப்பட்ட உணவுமுறைகள் மற்றும் உணவுகள் 

    உணவில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் DR எதிர்த்துப் போராட விரும்பும் அனைவருக்கும் பல தீர்வுகள் கிடைக்கின்றன. பலவிதமான பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள், தானியங்கள் மற்றும் பிற உணவு வகைகளை உள்ளடக்கிய சீரான உணவை நாம் அனைவரும் விரும்பினாலும், சில உணவு முறைகள் மற்றும் உணவுகள் DR மற்றும் பிற நாட்பட்ட கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் வெற்றிகரமானதாக நிரூபிக்கப்பட்டுள்ளன

    • ஒரு ஆய்வின் படி, கூடுதல் விர்ஜின் ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாமால் செறிவூட்டப்பட்ட குறைந்த கொழுப்புள்ள மெடிட்டேரியன் டையட், ரெட்டினோபதியின் பாதிப்பை 40% க்கும் மேல் குறைக்கிறது!

    • வாரத்திற்கு இரண்டு முறையாவது எண்ணெய் மீன்களை உட்கொள்வது ரெட்டினோபதியின் அபாயத்தை 60% குறைக்கிறது.

    • பல்வேறு காய்கறிகள், பழங்கள் மற்றும் விதைகளில் தாதுக்கள், பாலிபினால்கள் மற்றும் பிற பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன, அவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தம், வீக்கம் மற்றும் இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கின்றன. உண்மையைச் சொல்லப்போனால், ஃபிளாவனாய்டுகள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்ளுதல் ரெட்டினோபதி ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.


    • வைட்டமின் மற்றும் தாது குறைபாடுகள் 

      நாம் அனைவரும் நன்றாக சாப்பிட முயற்சி செய்கிறோம். அன்றாடம் சமைத்து உண்பதில் ஏற்படும் சிரமங்கள், நமது நகரங்களில் கிடைக்கும் விளைபொருட்களின் தரம் மற்றும் குறிப்பிட்ட உணவுகளுக்கான நமது விருப்பத்தேர்வுகள் காரணமாக நாம் உண்ணும் உணவுப்பொருட்களில் சிறு பற்றாக்குறைகள் உருவாகலாம். வழக்கமான இரத்த பரிசோதனைகள் மற்றும் மருத்துவரைச் சந்திப்பதன் மூலம் இந்த குறைபாடுகளை நீங்கள் தவிர்க்கலாம் மற்றும் உங்கள் பார்வையை மட்டுமல்லாமல் உடலில் உள்ள பல்வேறு உறுப்பு அமைப்புகளையும் பாதுகாக்கலாம்

      வைட்டமின் B1 (தியாமின்): அதிக அளவுகளில் (50-100 mg/நாள்) தியாமின் சேர்ப்பது பாதுகாப்பானது. மேலும் இது நரம்பியல் பாதுகாப்பு, சிகிச்சை மற்றும் DR மற்றும் நீரிழிவு நெஃப்ரோபதி உட்பட இறுதி உறுப்பு காயங்களைத் தடுப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும்.

      வைட்டமின் D: உகந்த அளவு வைட்டமின் Dஐப் பராமரிப்பது DRயின் ஆபத்து மற்றும் தீவிரத்தன்மையைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அது மட்டுமல்லாமல், கணையத்தின் சரியான செயல்பாட்டிற்கு உதவுகிறது, மேலும் பெருந்தமனி தடிப்பு, இருதய நோய், டைப் 2 நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றிற்கு உதவுகிறது.

      வைட்டமின் E: டைப் 1 நீரிழிவு நோயாளிகளிடையே நடத்தப்பட்ட 10 ஆண்டு ஆய்வில், 1800 IU அளவில் தினசரி வைட்டமின் E சிகிச்சையானது விழித்திரையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்தது. மேலும் இது DR யினால் அதிகரிக்கப்படும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தையும் குறைத்தது

      துத்தநாகம்: வளர்சிதை மாற்ற நோய்க்குறி, நீரிழிவு நோய், நீரிழிவு மைக்ரோவாஸ்குலர் பிரச்சினைகள் மற்றும் DR போன்ற நாள்பட்ட நோய்கள் துத்தநாகக் குறைபாட்டின் காரணமாக ஏற்படுபவை

      பார்வை இழப்பிற்கு எதிரான மிகவும் சக்திவாய்ந்த பாதுகாப்பு: வழக்கமான பரிசோதனை 

      நல்ல ஆரோக்கியத்திற்கான பயணம், குறிப்பாக நீரிழிவு மற்றும் DR என்று வரும்போது, சரியான நோயறிதலுடன் தொடங்குகிறது. பொதுவாக நீரிழிவு நோயானது இன்சுலின் அல்லது உயர் இரத்த சர்க்கரை அளவுகளுடன் தொடர்பில்லாத விளைவுகளை அடிக்கடி விளைவிக்கிறது. ஏனெனில் நீரிழிவு நோய் உடலில் உள்ள பல உறுப்பு அமைப்புகளின் செயல்பாட்டை பாதிக்கிறது; எனவே சிக்கல் என்ன என்பதைப் புரிந்துகொள்வதே சரியான நடவடிக்கை எடுப்பதற்கான முதல் படியாகும்

      நோய் முன்னேறியவுடன் மட்டுமே DR அறிகுறிகள் கவனிக்கப்படுவதால், DR-க்கான முன்கூட்டிய தடுப்பு பரிசோதனை செய்வது முக்கியம். உலகளவில் 1980 மற்றும் 2008 க்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட 35 ஆய்வுகளின் பகுப்பாய்வின் அடிப்படையில், விழித்திரைப் படங்களைப் பயன்படுத்தி நீரிழிவு நோயாளிகளில் DRயின் ஒட்டுமொத்த பாதிப்பு 35% என மதிப்பிடப்பட்டுள்ளது, அதில் பார்வைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் DR 12% ஆக உள்ளது. இந்தியாவில் 2045ஆம் ஆண்டிற்குள் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 134 மில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது DR ஒரு குறிப்பிடத்தக்க பொது ஆரோக்கிய சவாலாக உருவாக்கும்

      இருப்பினும், உங்களுக்கு DR இருப்பதாக அடையாளம் காணப்பட்டால், உங்கள் ஆரோக்கியத்தை நிர்வகிப்பதற்கும் பார்வை இழப்பைத் தடுப்பதற்கும் நீங்கள் பின்பற்ற வேண்டிய திட்டத்தை நீங்களும் உங்கள் மருத்துவரும் இணைந்து உருவாக்கலாம். DR உள்ளது மற்றும் அதைத் தவறாமல் பரிசோதித்துக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு மட்டுமே இதற்குத் தேவை

      2021 ஆம் ஆண்டில் Novartis நிறுவனத்துடன் இணைந்து Network18 ஆனது 'Netra Suraksha' - நீரிழிவு நோய்க்கு எதிரான இந்தியா எனும் முன்முயற்சியை அறிமுகப்படுத்தியதன் பின்னணியில் உள்ள உந்துதல் இதுதான். முதல் சீசனில், இந்த முயற்சியானது மருத்துவம், கொள்கை உருவாக்கம் மற்றும் DR பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகச் சிறந்த சிந்தனையாளர்களை ஒன்றிணைத்தது. இந்த ஆண்டு, நாடு முழுவதும் உள்ள தனிநபர் சுகாதார முகாம்களில் நுழைவதன் மூலம் இந்த முன்முயற்சி ஒரு மகத்தான முன்னேற்றத்தை எடுத்து வருகிறது

      Netra Suraksha இணையதளத்தில் https://www.news18.com/netrasuraksha/ உள்ள சீசன் 1யில் அறிந்துக்கொள்ளுதல் கட்டுரைகள், விளக்கமளிக்கும் வீடியோக்கள், குழு விவாதங்கள் மற்றும் சுகாதார முகாம்கள் எப்போது, எங்கு நடத்தப்படுகின்றன என்பது குறித்த சமீபத்திய தகவல்களை நீங்கள் காணலாம். நீரிழிவு நோயை எதிர்கொள்ளும் மற்றவர்களுக்குச் செய்தியைப் பரப்பவும், அனைத்து விவரங்களைத் தெரிந்துகொள்ளவும் எங்களுடன் இணைந்திடுங்கள்

      DRயினால் ஏற்படும் பார்வை இழப்பை முற்றிலுமாக தடுக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளவும். உங்கள் உடல்நலம் தொடர்பான எதையும் நீங்கள் செய்வது போலவே, உங்கள் மருத்துவருடன் கலந்தாலோசித்த பிறகே உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்களைச் செய்யுங்கள். விவேகமே வெற்றியைத் தரும்

      குறிப்பு:

      • Diabetic Retinopathy. Available [online] at URL: https://www.nei.nih.gov/learn-about-eye-health/eye-conditions-and-diseases/diabetic-retinopathy. Accessed on August 3rd 2022.

      • Saini DC, Kochar A, Poonia R. Clinical correlation of diabetic retinopathy with nephropathy and neuropathy. Indian J Ophthalmol 2021;69:3364-8. 

      • Bryl A, Mrugacz M, Falkowski M, Zorena K. The Effect of Diet and Lifestyle on the Course of Diabetic Retinopathy-A Review of the Literature. Nutrients. 2022 Mar 16;14(6):1252.

      • Diabetic Retinopathy Prevention. Available [online] at URL: https://www.nhs.uk/conditions/diabetic-retinopathy/prevention/. Accessed on August 3rd 2022.

      • Chew EY, Klein ML, Ferris FL, et al. Association of Elevated Serum Lipid Levels With Retinal Hard Exudate in Diabetic Retinopathy: Early Treatment Diabetic Retinopathy Study (ETDRS) Report 22Arch Ophthalmol.1996;114(9):1079–1084.

      • Yau JW, et al. Meta-Analysis for Eye Disease (META-EYE) Study Group. Global prevalence and major risk factors of diabetic retinopathy. Diabetes Care. 2012 Mar;35(3):556-64.

      • Nanditha A, et al. Secular TRends in DiabEtes in India (STRiDE–I): Change in Prevalence in 10 Years Among Urban and Rural Populations in Tamil Nadu.Diabetes Care 2019;42:476–485

    Published by:Selvi M
    First published:

    Tags: Diabetics, Eye care, Netra Suraksha

    அடுத்த செய்தி