Home /News /lifestyle /

கர்ப்பம், நீரிழிவு மற்றும் கண்களுக்கு இடையே உள்ள வினோதமான தொடர்பு.!

கர்ப்பம், நீரிழிவு மற்றும் கண்களுக்கு இடையே உள்ள வினோதமான தொடர்பு.!

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய்

Diabetic Retinopathy | டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் பெண்களுக்கு அதிக ஆபத்து இருப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது. இந்தியன் ஜர்னல் ஆஃப் ஆஃப்தல்மாலஜி இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, முதல் பரிசோதனையின் முடிவில் நீரிழிவு ரெட்டினோபதியின் பாதிப்பு டைப் 1 நீரிழிவு நோய் உள்ள பெண்களுக்கு 57%-62% ஆகவும், டைப் 2 நீரிழிவு நோய் உள்ள பெண்களுக்கு 17% -28% ஆகவும் இருந்தது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நீங்கள் மருத்துவரிடம் செல்லும் போதெல்லாம், அவர் எப்போதுமே உங்களுக்கு நீரிழிவு அல்லது உயர் இரத்த அழுத்தம் உள்ளதா என்று கேட்பார். அவர் இதைக் கேட்பதற்குக் காரணம், இது ஏறத்தாழ உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் பாதிக்கிறது என்பதால். இன்டர்நேஷனல் டையபட்டீஸ் ஃபெடரேஷன் அட்லஸ் 2019 ஆனது 2019ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் உள்ள வயது வந்தோரில் சுமார் 77 மில்லியன் நபர்கள் நீரிழிவு நோயால்  பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளது.

    ஆனால் பெரும்பாலான மக்கள் நீரிழிவு நோய் பற்றி நினைக்கும் போது, அவர்கள் டைப் 1 (ஆட்டோ இம்யூன்) நீரிழிவு மற்றும் டைப் 2 (வயது வந்தோர் அல்லது உணவு தொடர்பான) நீரிழிவு நோய்களைப் பற்றி நினைக்கிறார்கள். ஆனால் மூன்றாவது வகையைச் சார்ந்த நீரிழிவு நோய் ஒன்று உள்ளது, அது பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லைஅதுதான் கர்ப்பகால நீரிழிவு நோய். கர்ப்பகால நீரிழிவு நோய் என்பது, இதற்கு முன் நீரிழிவு நோயைக் கொண்டிராத ஒரு பெண்ணுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் நீரிழிவு நோயாகும்

    கர்ப்பகால நீரிழிவு நோய் மற்றும் நீரிழிவு ரெட்டினோபதி 

    கர்ப்ப காலத்தில், ஒரு பெண்ணின் உடலில் நிறைய மாற்றங்கள் நிகழ்கின்றன. அந்தச் சமயத்தில் இந்த நீரிழிவு நோய் உடல் ஒழுங்குபடுத்தப்படும் விதத்தைப் பாதிக்கிறது. இதைக் கவனிக்காவிட்டால் அல்லது இதற்குச் சிகிச்சையளிக்காமல் போனால், கர்ப்பகால நீரிழிவு நோயானது தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் கர்ப்ப காலத்திலும் அதற்குப் பிறகு தீங்கு விளைவிக்கும். உதாரணமாக, கர்ப்ப காலத்தில் கர்ப்பகால நீரிழிவு நோய் உயர் இரத்த அழுத்தத்துடன் இணைகிறது, இது பிரசவத்தின் போது ஒரு பெண்ணுக்கு பக்கவாதம் அல்லது இரத்த உறைவு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. கவனிக்கப்படாத கர்ப்பகால நீரிழிவு நோய் பிறந்த குழந்தைக்கு குறைந்த இரத்த சர்க்கரையை ஏற்படுத்தும்.

    கவலைக்குரிய மற்றொரு பாதிப்பு என்னவென்றால் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் நீரிழிவு ரெட்டினோபதி நோய். நீரிழிவு ரெட்டினோபதி என்பது கண்களைப் பாதிக்கும் ஒரு நோயாகும். இது கண்பார்வையை இழக்கச் செய்யும் மற்றும் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் முழுமையான குருட்டுத்தன்மையையும் கூட ஏற்படுத்தும். நீரிழிவு நோயின் இயக்கியாகச் செயல்படும் உயர் இரத்த சக்கரை உங்கள் கண்ணின் பின்புறத்தில் உள்ள விழித்திரையை ஆதரிக்கும் சிறிய இரத்த நாளங்களை சேதப்படுத்துவதால் நீரிழிவு ரெட்டினோபதி நோய் ஏற்படுகிறது. காலப்போக்கில், இந்தச் சேதம் இரத்த நாளங்களில் இரத்தப்போக்கு, திரவக் கசிவு மற்றும் அடைப்பை ஏற்படுத்தலாம். மோசமான விஷயம் என்னவெனில், கர்ப்பகால நீரிழிவு நோயில் நீரிழிவு ரெட்டினோபதியின் பாதிப்பு 10% முதல் 27% வரை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பயமாக இருக்கிறது, அல்லவா? ஒருவேளை நீங்கள் டைப் 1 அல்லது டைப் II நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி என்றால் என்னவாகும்? 1922ஆம் ஆண்டில் இன்சுலின் கிடைக்கும் முன், நீரிழிவு நோயாளிகளுக்கு கர்ப்ப காலத்தில் அதிகச் சிக்கல்கள் ஏற்படும் ஆபத்து இருந்தது. கர்ப்பகாலத்தில் நீரிழிவு ரெட்டினோபதி நோய் நீண்ட கால விளைவைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், 50%-70% பாதிப்புகளில் ரெட்டினோபதி மாற்றங்கள் ஏற்படுகின்றன. மோசமடைவதன் மிகப்பெரிய ஆபத்துநிலை இரண்டாவது மூன்று மாதங்களில் ஏற்படுகிறது மற்றும் பிரசவத்திற்குப் பிறகு 12 மாதங்கள் வரை நீடிக்கிறது.

    யாருக்கு ஆபத்து

    டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் பெண்களுக்கு அதிக ஆபத்து இருப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது. இந்தியன் ஜர்னல் ஆஃப் ஆஃப்தல்மாலஜி இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, முதல் பரிசோதனையின் முடிவில் நீரிழிவு ரெட்டினோபதியின் பாதிப்பு டைப் 1 நீரிழிவு நோய் உள்ள பெண்களுக்கு 57%-62% ஆகவும், டைப் 2 நீரிழிவு நோய் உள்ள பெண்களுக்கு 17% -28% ஆகவும் இருந்தது.

    ஆரம்பகால கர்ப்பத்தில் DRயின் பரவல் டைப் 2 நீரிழிவு நோயில் 14% ஆகவும், டைப் 1 நீரிழிவு நோயில் 34% முதல் 72% வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண் எனில், உங்கள் கர்ப்பத்தின் பல்வேறு கட்டங்களில் DRஐப் பரிசோதிக்குமாறு உங்கள் மருத்துவரிடம் கேளுங்கள்

    இன்று, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நபர்கள் நீரிழிவு நோய் இல்லாத நபர்களைப் போலவே பாதுகாப்பான கர்ப்பகாலம் மற்றும் பிரசவத்தைப் பெற முடியும். இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாக விளங்குவது நல்ல இரத்த குளுக்கோஸ் (சர்க்கரை) அளவை நிர்வகிப்பது, இதற்கு உணவுக் கட்டுப்பாடு, தினசரி அடிக்கடி இரத்த குளுக்கோஸ் கண்காணிப்பு மற்றும் அடிக்கடி இன்சுலின் சரிசெய்தல் தேவைப்படுகிறது.

    நீரிழிவு ரெட்டினோபதி நோயால் தாக்கப்படும் அபாயத்தை எவ்வாறு நிர்வகிக்கலாம்

    பெரும்பாலான நோய்களைப் போலவே, நீரிழிவு ரெட்டினோபதி நோயினைத் தடுக்கவும் அதற்குச் சிகிச்சையளிக்கவும் தடுப்பு பரிசோதனைகளைத் தொடங்க வேண்டும். உங்கள் முதன்மை பராமரிப்பு மருத்துவர் அல்லது OB/GYN உங்களுக்கு கர்ப்பகால நீரிழிவு நோய் இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்க வேண்டும். சோதனை முடிவுகளில் நீரிழிவு நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டால், விரிவான கண் பரிசோதனைக்கு உங்கள் கண் மருத்துவரைப் பார்க்க வேண்டும்.

    நீரிழிவு ரெட்டினோபதி பொதுவாக ஆரம்ப கட்டங்களில் அறிகுறிகளையோ குறிப்புகளையோ காட்டாது, ஆனால் அதை முன்கூட்டியே கண்டறிவதே சிறந்த மற்றும் ஒரே வழி. இதன்மூலம் அதனை மேற்கொண்டு முன்னேற விடாமல் தடுக்க முடியும்.

    இந்த ஆபத்தைப் பற்றி மக்கள் அதிகளவில் அறியாமல் இருப்பதால், Network18 ஆனது Novartis உடன் இணைந்து 'Netra Suraksh' - நீரிழிவு நோய்க்கு எதிரான இந்தியா எனும் முன்முயற்சியை அறிமுகப்படுத்தியது, இது நீரிழிவு ரெட்டினோபதி நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இந்த முன்முயற்சியானது நீரிழிவு ரெட்டினோபதி நோய் உங்கள் கண்பார்வைக்கு ஏற்படுத்தும் ஆபத்து குறித்தும், கண்பார்வை இழப்பைத் தடுப்பதற்கான பல வழிகள் குறித்தும் அறிந்துகொள்ள உங்களுக்கு உதவுகிறது. இம்முயற்சியின் மூலம் நாடு முழுவதும் தரைவழி விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும்

    நீரிழிவு ரெட்டினோபதி நோய் என்றால் என்ன மற்றும் அது உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றி மேலும் அறிய, இந்த இணைப்பைப் பார்வையிடவும் https://www.news18.com/netrasuraksha/. Netra Suraksha முன்முயற்சியைப் பற்றிய கூடுதல் அறிவிப்புகளுக்கு News18.comஐப் பின்தொடரவும், மேலும் நீரிழிவு ரெட்டினோபதி நோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் உங்களை ஈடுபடுத்தத் தயாராகுங்கள்

    குறிப்பு:
    Published by:Selvi M
    First published:

    Tags: Diabetes, Eye care, Netra Suraksha, Pregnancy care

    அடுத்த செய்தி