Home /News /lifestyle /

இந்தியாவில் நீரிழிவு ரெட்டினோபதி நோயைக் கையாளுதல் மிகவும் கடினமான ஒன்று அல்ல.!

இந்தியாவில் நீரிழிவு ரெட்டினோபதி நோயைக் கையாளுதல் மிகவும் கடினமான ஒன்று அல்ல.!

நீரிழிவு ரெட்டினோபதி

நீரிழிவு ரெட்டினோபதி

Diabetic Retinopathy | இந்தியாவில், 2019 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 77 மில்லியன் மக்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது, அவர்களில் 43.9 மில்லியன் நபர்கள் நோயறிதல் செயல்முறைக்கு உட்படுத்தப்படவில்லை.

  • News18 Tamil
  • 7 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    இந்தியாவின் நிலையான பொருளாதார வளர்ச்சி, ஒட்டுமொத்தமாக, அதன் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளது. குறிப்பாகநகரங்கள் மற்றும் பெருநகரப் பகுதிகள் செழிப்பாக மாறியுள்ளன, மேலும் நகரவாசிகளின் வாழ்க்கை முறைகள் மேற்கத்திய நாடுகளில் உள்ள மக்களின் வாழ்க்கை முறைகளுடன் பொருந்தத் தொடங்கியுள்ளன. இந்த செழுமையுடனும் வளர்ச்சியுடனும் ஊட்டச்சத்து குறைபாடு, மோசமான சுகாதாரம், சுகாதாரமற்ற உணவு மற்றும் நீர் ஆகியவற்றால் எழுந்த பல நோய்களை ஒழிக்கும் செயல்முறையும் கைக்கோர்த்துள்ளது. 

    ஆனால், இதற்கு எதிரான மறுபக்கமும் உள்ளது. அதிகரித்த செல்வச் செழிப்பு, வளர்ச்சியடைந்த நகரமயமாக்கல், உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் மேலைநாட்டு உணவுமுறை ஆகியவை பல வகையான நோய்களைக் கொண்டு வருகின்றன - குறிப்பாக உடல் பருமன், பெரும்பாலும் குழந்தைகளில் உடல் பருமன் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயுக்கு வழிவகுக்குகிறது

    இந்தியாவில், 2019 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 77 மில்லியன் மக்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது, அவர்களில் 43.9 மில்லியன் நபர்கள் நோயறிதல் செயல்முறைக்கு உட்படுத்தப்படவில்லை. உலகளவில், வயது வந்தோரில் இருவரில் ஒருவர் நீரிழிவு நோயுடன் வாழ்கிறார், (பெரும்பாலும் டைப் 2 நீரிழிவு நோயுடன், 20-79 வயதுடையவர்கள்) அவர்கள் தங்களுக்கு இப்படியொரு நோய் இருப்பதை அறிந்திருக்கவில்லை.

    இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இன்டர்நேஷனல் டையபட்டீஸ் ஃபெடரேஷன் அட்லஸ் 2019 கணிப்பின் படி, நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 2030ஆம் ஆண்டில் 101 மில்லியனாகவும், 2045ஆம் ஆண்டில் 134 மில்லியனாகவும் உயரும். மருத்துவ சேவைகள் ஏற்கனவே அதிக சுமையாக இருக்கும் ஒரு நாட்டிற்கு இது ஒரு சவாலான கடமையாக இருக்கலாம். உடலில் உள்ள அனைத்து உறுப்பு அமைப்புகளையும் பாதிக்கக்கூடிய வகையில் நீரிழிவு நோய் பல சிக்கல்களைக் கொண்டுவருகிறது - நீரிழிவு நோயாளிகளுக்கு அவர்களின் சிறுநீரகங்கள், கீழ் மூட்டுகள் மற்றும் கண்களில் கூட சிக்கல்கள் உருவாகின்றன

    உலகில் குருட்டுத்தன்மைக்கு ஐந்தாவது முக்கிய காரணமாக நீரிழிவு நோய் மாறியுள்ளது. உலகளவில் நீரிழிவு நோயாளிகளிடையே காணப்படும் பார்வைக் குறைபாடு மற்றும் குருட்டுத்தன்மைக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக நீரிழிவு ரெட்டினோபதி நோய் உள்ளது. பேரழிவு தரும் தனிப்பட்ட மற்றும் சமூக-பொருளாதார விளைவுகளுடன் உழைக்கும் வயதுடைய மக்களிடையே ஏற்படும் குருட்டுத்தன்மைக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக DR அங்கீகரிக்கப்பட்டுள்ளது

    இது கண்பார்வையைத் தாக்கும் மௌனத் திருடன் என்றும் அழைக்கப்படுகிறது: வலி ஏற்படுத்தாது. பார்வைத் திறனில் மாற்றம் இருக்காது. எந்த அறிகுறியும் தென்படாது. உண்மையில், ரெடினா சொசைட்டி ஆஃப் இந்தியாவின் இணைச் செயலாளரான டாக்டர் மனிஷா அகர்வாலின் கூற்றுப்படி, கண்ணாடியை மாற்றிய பிறகும் தொடர்ந்து படிப்பதில் சிக்கல் ஏற்படுவது ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாகும். இதற்கு நீங்கள் அறிகுறிகளைக் காணத் தொடங்கும் நேரத்தில், பார்வைக்கு சரிசெய்ய முடியாத சேதம் ஏற்கனவே ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். இருப்பினும், DR காரணமாக ஏற்படும் பார்வை இழப்பைக் கண்டறிந்தவுடன் சரியான சிகிச்சையின் மூலம் அதைப் பாதியிலேயே தடுத்து நிறுத்த முடியும். நோயறிதல் செயல்முறையில் ஒரு கண் மருத்துவரால் மேற்கொள்ளப்படும் DR கண் பரிசோதனை அடங்கும். நீரிழிவு நோயாளிகள் ஆண்டுதோறும் DR பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    விழிப்புணர்வு இடைவெளி 

    இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளில் 18% நபர்களை DR பாதிக்கிறது. அதாவது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 5 நபர்களில் 1 நபரை Netra Suraksha முன்முயற்சியின் சீசன் 1 யில் நடைபெற்ற  வட்டமேசை விவாதத்தின்போது, புது தில்லியின் சென்டர் ஃபார் சைட் மருத்துவமனையில் உள்ள விட்ரோரெட்டினல் மற்றும் கண்குழற் கோளாறுகளுக்கான இயக்குநர் டாக்டர். தினேஷ் தல்வார், வழக்கமான DR பரிசோதனையின் அவசியம் குறித்த மக்களின் அறியாமையை எடுத்துரைத்தார். இந்த அறியாமை சமூக மட்டத்தில் DR எதிர்த்துப் போராடுவதை கடினமாக்குகிறது என்று கூறினார். உங்கள் குடும்பம் மற்றும் சமூக வட்டங்களில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி சிந்தியுங்கள் - நீங்கள் எப்போதாவது நீரிழிவு ரெட்டினோபதி பற்றி அவர்களுடன் பேசியிருக்கிறீர்களா

    இது அலட்சியப்படுத்த முடியாத ஒன்று. பெரும்பாலும் 20-70 வயதிற்குட்பட்ட பணிபுரியும் வயதினரை DR பெரிதும் தாக்குகிறது, அதாவது DR நோயால் அதிகளவு பாதிக்கப்படுபவர்கள்தான் அவர்கள் குடும்பங்களில் சம்பளம் ஈட்டும் முதன்மையான நபர்கள் என்பதால் அவர்களின் குடும்பங்களும் நிதி ரீதியாக பாதிக்கப்படுகின்றன. நற்செய்தி என்னவெனில், நோயை முன்கூட்டியே கண்டறிந்து மருத்துவரின் ஒத்துழைப்புடன் முறையான சிகிச்சையை மேற்கொண்டால் DR மூலம் ஏற்படக்கூடிய பார்வை இழப்பை பெரும்பாலும் தடுக்க முடியும்

    Network18 ஆனது Novartis உடன் இணைந்து, 'Netra Suraksha' - நீரிழிவு நோய்க்கு எதிரான இந்தியா முன்முயற்சியைத் தொடங்கியுள்ளது, இது DR நோயால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. தகவல் கட்டுரைகள் மூலமாகவும், நேரடி சோதனை முகாம்கள் மூலமாகவும் DR பற்றிய விழிப்புணர்வை பரப்புவதை இந்த முன்முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களிடையே இந்த பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினால், அவர்கள் அடிக்கடி DR மற்றும் நீரிழிவு நோய் பரிசோதனை செய்து கொள்ள நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம்

    மருத்துவர் இடைவெளி 

    இருப்பினும், தகுதிவாய்ந்த கண் மருத்துவர்களின் பற்றாக்குறை, DR நோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் அடுத்த தடையாக உள்ளது. இந்தியாவில் சுமார் 12,000 கண் மருத்துவர்கள் உள்ளனர் (தோராயமாக, பயிற்சி பெற்ற 3500 விழித்திரை நிபுணர்கள்). ஒவ்வொரு 1.26 மில்லியன் நபர்களுக்கும் 1 விழித்திரை நிபுணர் மட்டுமே இருக்கிறார், இதனால் விழித்திரை நிபுணர்களின் பற்றாக்குறை மிகவும் மோசமான நிலைமையில் உள்ளது. கண் மருத்துவர்களின் எண்ணிக்கையை (12000) நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது (2030 ஆம் ஆண்டில் 100 மில்லியனுக்கும் அதிகமான நீரிழிவு நோயாளிகள் இருப்பார்கள்), இந்த விகிதம் நீரிழிவு நோயாளிகளில் ஒவ்வொரு 8,333 பேருக்கும் 1 கண் மருத்துவர் என உயரும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆண்டுதோறும் DR நோய்க்கு எதிராகத் தங்கள் கண்களைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ளும்போது, இந்தியாவில் மருத்துவர்களின் பற்றாக்குறை மிகவும் மோசமாக உள்ளது

    இது அனைத்து வகையிலும் தீர்வு காணப்பட வேண்டிய ஒரு சிக்கலாகும், ஏனெனில் இங்கு தேவைக்கும் வழங்கலுக்கும் இடையிலான இடைவெளி காலப்போக்கில் விரிவடையும். AI-இயங்கும் ஃபண்டஸ் கேமராக்களைப் பயன்படுத்தி DR நோய்க்கான தானியங்கு பரிசோதனை சில குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. இத்தொழில்நுட்பம் பரவலாகப் பயன்படுத்தப்படுவதால் மருத்துவர் இடைவெளி குறைக்கப்பட வேண்டும்

    நோய்ப் பொருளாதாரம் 

    இளைஞர்களிடையே நீரிழிவு நோய் (குறிப்பாக டைப் 2) அதிகரித்து வருவதால், அவர்களை DR நோய் பெருமளவில் தாக்குகிறது. ஒருவருக்கு பார்வை இழப்பு எந்த வயதிலும் நிகழ்ந்தாலும் அது அவர்களின் சம்பாதிக்கும் திறனைப் பாதிக்கும், ஆனால் அதுவே இளம் வயதில் ஏற்படும்போது, அவர்களது குடும்பத்தினரும் இளமையானவர்களாக இருந்து (குழந்தைகள் இன்னும் பள்ளியில் இருக்கிறார்கள்), அவர்களின் வருமானமும் குறைவாக இருக்கும் பட்சத்தில், இது அவர்களின் ஓய்வூதிய நிதியைக் குவிக்கும் திறனைத் தடுக்கும். பார்வை இழப்பு ஏற்படும்போது அது உதவியாளரின் செலவு, மறுவாழ்வு பராமரிப்பு, பயிற்சி மற்றும் மறுபயிற்சி போன்ற பல எதிர்பாராத செலவுகளுக்கு வழிவகுக்குகிறது

    இருப்பினும், மருத்துவச் செலவுகள் நேரடியாக ஏற்படுகின்றன. DR பார்வைக்கு அச்சுறுத்தலானது என்பதால் அதன் அறிகுறிகளை புறக்கணிக்கக் கூடாது. அறிகுறிகளைக் கண்டறிந்தவுடன் அடிக்கடி மருத்துவரைச் சந்தித்தல், பரிசோதனை செய்துகொள்ளல், சிகிச்சை பெறுதல், மருந்துகளை உட்கொள்ளல் என அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நோயாளிகள் இருக்கும் இடத்தைப் பொறுத்து, செலவுகள் வேறுபடலாம். பெருநகரத்தில் வசிக்கும் நோயாளிகளுக்கு மருத்துவ செலவுகள் கடினமானதாக இருக்கும். ஒரு நபர் சிறிய நகரம் அல்லது நாட்டின் கிராமப்புற பகுதியில் வசித்தால், அவர் அருகிலிருக்கும் ஒரு பெரிய நகரத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும், மேலும் அவரது மருத்துவக் கட்டணங்களுடன் சேர்த்து பயணம், உணவு மற்றும் தங்குவதிற்கும் செலவிட வேண்டியிருக்கும்

    காத்திருப்பு காலத்தின் போது நீரிழிவு அல்லது DR காரணமாக எந்த பிரச்சனையும் ஏற்படாத பட்சத்தில், காப்பீடு பயனுள்ளதாக இருக்கும். பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள் நீரிழிவு நோயால் ஏற்படும் சிக்கல்களுக்கு நீண்ட காத்திருப்பு நேரத்தை (பொதுவாக நீடிக்கும் ஆண்டுகள்) நிர்ணயிக்கின்றன. நீரிழிவு நோயாளிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பாலிசிகளுக்குக் காத்திருக்கும் காலங்கள் இல்லை, இருப்பினும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதாவது, அந்த நபரிடம் நீரிழிவு நோய்க்கான காப்பீட்டுத் திட்டம் இருந்தாலும், அது அனைத்து செலவுகளையும் முழுமையாக ஈடுசெய்யாது

    மாறாக, நீரிழிவு நோயாளிகளுக்கான காப்பீட்டு பிரீமியங்கள் தொடர்ந்து அதிகரிக்கும். 2016 மற்றும் 2019 க்கு இடைப்பட்ட காலத்தில் நீரிழிவு நோய் தொடர்பான கோரிக்கைகளின் எண்ணிக்கை 120% அதிகரித்துள்ளது. கூர்ந்து கவனித்தால், 20-30 வயதுப் பிரிவினர் மிகப்பெரிய அதிகரிப்பைக் கண்டுள்ளனர்8. இந்த போக்குகளை நாம் பார்க்கும் இடங்களில், காப்பீட்டு பிரீமியங்களின் விலை அதிகரிக்கின்றது.

    வருமுன் காப்பதே சிறந்தது 

    இந்த காரணிகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனது கண்பார்வையைச் சிறப்பாகப் பராமரிக்க என்ன செய்யலாம்? ஆரம்பநிலையில் உள்ளவர்களுக்கு: உங்கள் இரத்த சர்க்கரையை பரிசோதிக்கத் தொடங்குங்கள், மேலும் சிறந்த வளர்சிதை மாற்றக் கட்டுப்பாட்டைப் பெற உங்கள் மருத்துவர் சொல்வதைப் பின்பற்றுங்கள். இது உங்கள் இரத்த அழுத்தம், சீரம் லிப்பிட் அளவுகள், தாது மற்றும் வைட்டமின் குறைபாடு, அத்துடன் உணவு, உடற்பயிற்சி மற்றும் எடை மேலாண்மை முக்கோணம் உள்ளிட்ட பல விஷயங்களைக் கவனித்துக்கொள்வதைக் குறிக்கிறது

    இரண்டாவதாக, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு காப்பீட்டுப் பாலிசியை வாங்குங்கள். பின்னர், அந்த காப்பீட்டில் உள்ள சேர்க்கைகள் மற்றும் விலக்குகள் குறித்து அறிந்துகொள்ளுங்கள். காத்திருப்பு காலத்தைப் புரிந்துகொள்வதோடு அதிலுள்ள அனைத்து விவரங்களையும் சரியாகப் படித்து புரிந்துகொள்ளுங்கள். இப்போது உங்களுக்கு விவரங்கள் எந்த அளவிற்கு அதிகமாக தெரியுமோ அந்த அளவிற்குச் சிறப்பான முடிவுகளை எடுக்க முடியும்

    மூன்றாவதாக, ஆண்டுதறும் தவறாமல் DR பரிசோதனை செய்துகொள்ள வருடாந்திர கண் மருத்துவர் சந்திப்பை அமைக்கவும், அதை தவறவிடாதீர்கள். ஆரம்பகாலகட்டங்களில் DR அறிகுறியற்றதாக இருக்கும், மேலும் நீங்கள் எவ்வளவு விரைவாக அதைக் கண்டறிகிறீர்களோ, அவ்வளவு சிறப்பாக அதை முன்கூட்டியே தடுக்க முடியும்

    இறுதியாக, DR நோய் கண்டறியப்பட்டால் செய்ய வேண்டிய அனைத்து நடவடிக்கைகள் பற்றியும் நீங்களே கற்றுக் கொள்ளுங்கள். தொடங்குவதற்கு ஒரு நல்ல இடம் Netra Suraksha முன்முயற்சி இணையதளம் ஆகும், அங்கே நீங்கள் தெளிவான குழு விவாதங்கள், வீடியோக்கள் மற்றும் தகவல் கட்டுரைகளைப் பார்க்கலாம். சாம்பியனாக இருங்கள், உங்கள் வட்டத்தில் உள்ள மற்றவர்களை அவர்களின் பார்வைத்திறனின் சிறந்த சாம்பியனாக இருக்க ஊக்குவித்திடுங்கள்https://www.news18.com/netrasuraksha/

    குறிப்பு:
    Published by:Selvi M
    First published:

    Tags: Diabetes, Eye care, Netra Suraksha

    அடுத்த செய்தி