Home /News /lifestyle /

இளம் இந்திய மக்களிடையே அதிகரித்து வரும் நீரிழிவு நோய்..!

இளம் இந்திய மக்களிடையே அதிகரித்து வரும் நீரிழிவு நோய்..!

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய்

Diabetic Retinopathy | டைப் 1 நீரிழிவு நோய் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே பிரத்தியேகமாக கண்டறியப்படுகிறது, இது டைப் 2 நீரிழிவு நோயைப் போல் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் மிகவும் ஆபத்தானது.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஒரு காலத்தில் நீரிழிவு நோய் என்பது மிகவும் அரிதானது என்பதால் நமக்கு மிகவும் நெருக்கமான ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டால், அது ஒரு பெரிய விஷயமாக கருதப்பட்டது. இன்றோ, நீரிழிவு நோயால் பாதிக்கப்படாத குடும்பத்தைக் காண்பது அரிது. 

    இன்டர்நேஷனல் டையபட்டீஸ் ஃபெடரேஷன் அட்லஸ் 2019 ஆனது 2019ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் உள்ள வயது வந்தோரில் சுமார் 77 மில்லியன் நபர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 2030ஆம் ஆண்டில் 101 மில்லியனாகவும், 2045ஆம் ஆண்டில் 134 மில்லியனாகவும் உயரும் என்றும் கணித்துள்ளது. அதுமட்டுமல்ல. மற்றொரு குழப்பமான போக்கு என்னவென்றால், அதிகமான இளைஞர்களும் குழந்தைகளும் நீரிழிவு நோய்க்கு ஆளாகி வருகின்றனர். இந்த எண்ணிக்கை உயர்வுக்கு பல ஆபத்து காரணிகள் உள்ளன: அவை சுறுசுறுப்பு குறைந்த வாழ்க்கை முறை, அதிக பதப்படுத்தப்பட்ட உணவு போன்றவை ஆகும்

    டைப் 1 நீரிழிவு நோய் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே பிரத்தியேகமாக கண்டறியப்படுகிறது, இது டைப் 2 நீரிழிவு நோயைப் போல் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் மிகவும் ஆபத்தானது. உலகளவில், 20 வயதிற்குட்பட்ட 1,110,100 குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு டைப் 1 நீரிழிவு நோய் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே காணப்படும் டைப் 1 நீரிழிவு நோய் ஒவ்வொரு ஆண்டும் 3% அதிகரித்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    டைப் 1 நீரிழிவு நோய் என்றால் என்ன, அது டைப் 2 வகையிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது

    டைப் 1 நீரிழிவு நோயில், நோய் எதிர்ப்பு அமைப்பு கணையத்தைத் தாக்கி இன்சுலின் உற்பத்தி செய்யும் திறனை பாதிக்கிறதுஇந்த வகை நீரிழிவு நோய் பொதுவாக மரபணு காரணிகளால் உருவாகிறது. டைப் 2 நீரிழிவு நோயில், கணையம் இன்சுலினை உருவாக்குகிறது, ஆனால் உடல் இன்சுலின் உற்பத்தியை எதிர்க்கிறது. கணையம் மேலும் மேலும் இன்சுலினை உற்பத்தி செய்து இறுதியில் சோர்வடைகிறது. விஷயம் தீவிரமடையும்போது கணையம் இன்சுலின் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்துகிறது

    டைப் 2 நீரிழிவு நோய், சில சமயங்களில் "வயது வந்தோருக்கான" நீரிழிவு நோய் என்று அழைக்கப்படுகிறது, இது வயதானவர்களை மட்டுமே பாதிக்கும் என்ற தவறான கருத்து பரவலாக இருந்து வருகிறது. துரதிர்ஷ்டவசமாக, அது அப்படியில்லை. இந்தியாவில் நீரிழிவு நோயால் (25.3%) பாதிக்கப்பட்ட 25 வயதிற்குட்பட்ட நபர்களில் நான்கு பேரில் ஒருவருக்கு வயது வந்தோருக்கான டைப் 2 நீரிழிவு நோய் உள்ளது

    உணவு, குறைந்த உடல் உழைப்பு அல்லது மரபணு முன்கணிப்பு போன்ற பல்வேறு காரணிகளால் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படலாம். நிபுணர்களின் கூற்றுப்படி, சிறார்களுக்கு மத்தியில் டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் திடீர் அதிகரிப்புக்குப் பின்னால் உள்ள காரணங்களில் ஒன்று, குழந்தை பருவத்தில் உடல் பருமனின் அதிகரிப்பு ஆகும்

    நற்செய்தி என்னவென்றால், டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு கூடுதல் இன்சுலின் தேவைப்படாது, குறிப்பாக முன்கூட்டியே கண்டறியப்பட்டால். ஆரம்ப கட்டத்திலேயே கூட, நீரிழிவு நோய்க்குச் சிகிச்சையளிப்பதற்கு பல வாழ்க்கை முறை மாற்றங்களும் மருந்துகளும் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், நீரிழிவு நோய் இளம் வயதிலேயே உருவாகிறது என்றால், அது நீண்ட காலத்திற்கு உடலில் இருக்கும் மற்றும் நீரிழிவு நோய் சம்பந்தப்பட்ட நீண்ட கால பிரச்சனைகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். இவை பல உறுப்பு மண்டலங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும், ஆனால் நீரிழிவு மற்றும் நீரிழிவு ரெட்டினோபதி தொடர்பான பார்வை இழப்பு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மிகவும் குறைவாகவே அறியப்படுகிறது (DR). 

    நீரிழிவு நோய் மற்றும் கண்களில் அதன் தாக்கம்

    நீரிழிவு ரெட்டினோபதி என்பது விழித்திரையைப் பாதிக்கும் கண் தொடர்பான நீரிழிவு நோய்ச் சிக்கலாகும். உயர் இரத்த குளுக்கோஸ் அளவுகள் கண்ணில் உள்ள இரத்த நாளங்களில் வெடிப்பு, வீக்கம் அல்லது கசிவை ஏற்படுத்தும்; கண்களைச் சேதப்படுத்தும். ஆரம்ப கட்டங்களில் DR எந்த அறிகுறிகளையும் தோற்றுவிப்பதில்லை, ஆனால் நோய் மோசமடையும்போது, வாசிப்பதில் சிரமம், மங்கலான பார்வை, மிதக்கும் புள்ளிகள் மற்றும் பிற பார்வை சிக்கல்களை ஏற்படுத்தும். சரியான நேரத்தில் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது நிரந்தர கண்பார்வை இழப்பிற்கு வழிவகுக்கும்

    இது டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயாளிகளைப் பாதிக்கிறது, மேலும் பல நீரிழிவு நோய் தொடர்பான சிக்கல்களைப் போலவே, DR மோசமடையும் அபாயமும் காலப்போக்கில் அதிகரிக்கிறது. ஒருவருக்கு டைப் 1 நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டால், அவருக்கு DR நோய் இருப்பது மிகவும் அரிது. இருப்பினும், காலப்போக்கில் DR உருவாகக்கூடிய வாய்ப்புகளும் அதிகரிக்கும். 20 ஆண்டுகளில், டைப் 1 நீரிழிவு நோயாளிகளில் 99% நபர்கள் பல்வேறு மேம்பட்ட அறிகுறிகளைக் கொண்டுள்ளனர்

    டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் நிலைமை வேறுபட்டது. ஆரம்ப நோயறிதல் கட்டத்தின்போது DR இருப்பதாகக் கண்டறியப்படலாம், மேலும் டைப் 1 நீரிழிவு நோயைப் போலவே, இதிலும் காலப்போக்கில் DR முன்னேற்றமடைந்து வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். 20 ஆண்டுகளில், டைப் 2 நீரிழிவு நோயாளிகளில் சுமார் 60% நபர்கள் DRயின் அறிகுறிகளைக் கொண்டுள்ளனர்

    நீங்களும் நீரிழிவு ரெட்டினோபதி நோயும் 

    நற்செய்தி என்னவெனில், ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் DR காரணமாக ஏற்படும் பார்வை இழப்பைத் தடுக்க முடியும். உங்களுக்கு DR இருப்பதாக அடையாளம் காணப்பட்டால், நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கும் பார்வை இழப்பைத் தடுப்பதற்கும் நீங்கள் பின்பற்ற வேண்டிய திட்டத்தை நீங்களும் உங்கள் மருத்துவரும் இணைந்து உருவாக்கலாம். இருப்பினும், துல்லியமான நோயறிதல் செயல்முறையை மேற்கொள்வது முதல் படிநிலையாகும்

    DR ஸ்கிரீனிங் கண் பரிசோதனையைப் பயன்படுத்தி, கண் மருத்துவர் மூலம் உங்களுக்கு DR நோய் இருப்பது கண்டறியப்படலாம். DR பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், DR தொடர்பான பார்வை இழப்பைத் தடுப்பதற்கும் Novartis உடன் இணைந்து Network18 ஆனது 2021ஆம் ஆண்டு 'Netra Suraksha' - நீரிழிவு நோய்க்கு எதிரான இந்தியா எனும் முன்முயற்சியை அறிமுகப்படுத்தியது. தற்போது இரண்டாம் ஆண்டை எட்டியுள்ள இந்த முயற்சி, நாடு முழுவதும் நேரடி மருத்துவ முகாம்களை அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது

    நீங்களும் உங்கள் அன்புக்குரியவர்களும் தகவலைப் பெறுவதன் மூலம் DR சம்பந்தப்பட்ட கண்பார்வை இழப்பிற்கு எதிரான போராட்டத்தில் எங்களுடன் இணைந்திடுங்கள். Netra Suraksha முன்முயற்சி இணையதளத்திற்குச் சென்று சீசன் 1 என்பதற்கு கீழ் தகவல் கட்டுரைகள், வீடியோக்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள், மருத்துவர்கள், சிந்தனையாளர்களுக்கு இடையேயான வட்டமேசை விவாதங்கள் ஆகியவற்றைக் காணலாம்

    https://www.news18.com/netrasuraksha/.

    குறிப்பு:  
    Published by:Selvi M
    First published:

    Tags: Diabetes, Eye care, Netra Suraksha, Type 2 Diabetes

    அடுத்த செய்தி