ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

நார்மல் டெலிவரியா அல்லது சிசேரியன் டெலிவரி... இரண்டில் எதைத் தேர்வு செய்வது நல்லது..?

நார்மல் டெலிவரியா அல்லது சிசேரியன் டெலிவரி... இரண்டில் எதைத் தேர்வு செய்வது நல்லது..?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

சிசேரியன் டெலிவரி என்பது திட்டமிடப்பட்ட குழந்தை பிறப்பு தான். எனவே உங்களுக்கு எப்போது குழந்தை பிறக்கப் போகிறது என்று தெரிந்துவிடும். வீட்டிலிருந்து எப்போது மருத்துவமனைக்கு செல்ல வேண்டும், என்னென்ன பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எல்லாவற்றையும் நீங்கள் முன்கூட்டியே திட்டமிட்டு டென்ஷன் இல்லாமல் இருக்கலாம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கர்ப்பக்காலம் முழுவதுமே மகிழ்ச்சியான காலமாக இருந்தாலும், டெலிவரி தேதி நெருங்க நெருங்க கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்படக்கூடிய பதற்றமும் படபடப்பும் அதிகரிக்கும். எப்பொழுது பிரசவ வலி தொடங்கும், வலி வந்த உடனே உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல முடியுமா, பிரசவவலி எவ்வளவு தீவிரமாக இருக்கும் என்பதெல்லாம் மன பதட்டத்தை அதிகரிக்கும். தற்போது நார்மல் டெலிவரிக்காக காத்திராமல் அல்லது நார்மல் டெலிவரியில் சில நேரங்களில் ஏற்படக்கூடிய சிக்கல்களை கண்டு பலரும் சிசேரியன் டெலிவரியை விரும்புகிறார்கள்.

அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுப்பதை விட, நார்மல் டெலிவரி தான் நல்லது என்று கண்ணோட்டம் இன்று வரை மேலோங்கி இருக்கிறது. இதனால் நார்மல் டெலிவரியை தவிர்த்துவிட்டு சிசேரியன் டெலிவரியை விரும்பும் பெண்களை, குடும்பத்தாரே தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். நார்மலா அல்லது சிசேரியனா இரண்டில் எது சிறந்தது என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.

வலியை தாங்கிக் கொள்ள முடியாது, உடல் வலுவாக இல்லை, பயம் அதிகமாக இருக்கிறது என்று பலவிதமான உடல் மற்றும் மன ரீதியான காரணங்களுக்காக வஜைனல் டெலிவரியை பெண்கள் தவிர்த்துவிட்டு அறுவை சிகிச்சையை தேர்வு செய்து கொள்கிறார்கள். அது மட்டும் இல்லாமல், அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தால் நார்மல் டெலிவரியில் ஏற்படக்கூடிய எல்லா அபாயத்தையுமே இதில் தவிர்த்து விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கர்ப்பிணிப் பெண் மற்றும் குழந்தையின் நிலைமைக்கு ஏற்றவாறு மருத்துவர்கள் எந்த டெலிவரி பொருத்தமானதாக இருக்கும் என்று முடிவு செய்கிறார்கள்.

நீங்கள் எதை தேர்வு செய்ய வேண்டும் : 

பிரசவ வலி என்பது தாங்கிக்கொள்ள முடியாத ஒன்றுதான். ஒரு சிலருக்கு பிரசவ வலி ஏற்பட்ட உடனே ஓரிரு மணி நேரங்களிலேயே குழந்தை பிறந்து விடும். ஒரு சிலருக்கு ஓரிரு நாட்கள் வரை ஆகலாம். எனவே பெண்கள் இத்தகைய தீவிரமான வலி நிறைந்த காலத்தில் பிரசவ வலியை எதிர்கொள்ள விரும்பாமல், அறுவை சிகிச்சை டெலிவரியை தேர்வு செய்கிறார்கள். ஆனால் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்து நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தால் அதில் இருக்கும் நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டையுமே தெரிந்து கொள்ள வேண்டும்.

ஃபோர்டிஸ் நெட்வொர்க் ஹாஸ்பிட்டலின், ஹிராநந்தானி மருத்துவமனை வாஷி-ஏ வில், மகப்பேறு மற்றும் மகப்பேறியல் ஆலோசகராக பணியாற்றும் மருத்துவர் மன்ஜரி மேதா, ‘சி செக்ஷன் என்பது சாதாரணமான ஒரு சர்ஜரிதான். பரவலாக லட்சக்கணக்கானவர்கள் சிசேரியன் டெலிவரியில் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள் என்றாலும், ஒவ்வொரு டெலிவரியுமே ஒரு பெரிய அறுவை சிகிச்சையாக நினைக்க வேண்டும். அதனை நீங்கள் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது’ என்று தெரிவித்துள்ளார்.

Also Read : Pregnancy Tips : சுகப்பிரசவம் வேண்டும் என நினைக்கும் கர்ப்பிணிகள் இவற்றை சாப்பிட்டால் போதும்..

திட்டமிடப்பட்ட சிசேரியன் டெலிவரியில் இருக்கும் நன்மைகள் :

சிசேரியன் டெலிவரி என்பது திட்டமிடப்பட்ட குழந்தை பிறப்பு தான். எனவே உங்களுக்கு எப்போது குழந்தை பிறக்கப் போகிறது என்று தெரிந்துவிடும். வீட்டிலிருந்து எப்போது மருத்துவமனைக்கு செல்ல வேண்டும், என்னென்ன பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எல்லாவற்றையும் நீங்கள் முன்கூட்டியே திட்டமிட்டு டென்ஷன் இல்லாமல் இருக்கலாம்.

திட்டமிடப்பட்ட டெலிவரியில் மிகப்பெரிய நன்மை என்பது உங்களுக்கான மருத்துவர்கள் குழு, சப்போர்ட் ஸ்டாஃப் என்று அனைவருமே தயாராக இருப்பார்கள். பிறந்த குழந்தைக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதை சரி பார்க்கும் நியோநேடோலஜிஸ்ட் என்ற சிறப்பு மருத்துவரும் இருப்பார்கள். வலி, வேதனை, அவஸ்தை இல்லாமல் எளிதாக குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்.

சிசேரியன் செய்வதால் ஏற்படும் பிரச்சனைகள் :

சிசேரியன் டெலிவரி கொள்வதால் அதில் இருக்கும் நன்மைகளை போலவே ஒரு சில பிரச்சனைகளும் இருக்கின்றன. அனஸ்தீஷியா செலுத்திதான் எல்லா அறுவை சிகிச்சைகளும் செய்யப்படும். ஒரு சிலருக்கு அனஸ்தீஷியா ஒவ்வாமையை ஏற்படுத்தும். அனஸ்தீஷியா சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம்.

சிசேரியன் செய்த பிறகு இரண்டு நாட்களுக்கு மிகமிக அவஸ்தையாக இருக்கும். ஒரு சில பெண்களால் வலியை தாங்கிக் கொள்ள முடியாது. அவர்களுக்கு அதிகப்படியான வலி நிவாரண மருந்து செலுத்த வேண்டிய தேவை ஏற்படும். நார்மல் டெலிவரியில் ஏற்படுவதை விட சிசேரியனில் அதிகமாக ரத்த இழப்பு ஏற்படக்கூடிய அபாயம் இருக்கின்றது. சிறுநீர்த்தொற்று முதல் பலவிதமான தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.

நார்மல் டெலிவரியில் குழந்தை பிறந்த அடுத்த நாளே வீட்டுக்கு சென்று விடலாம். ஆனால், சிசேரியன் டெலிவரியில் மருத்துவமனையில் சில நாட்கள் இருக்க வேண்டும், தையல் ஆறும் வரை கவனமாக இருக்க வேண்டும்.

Also Read : கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வதால் கருச்சிதைவு ஏற்படுமா..? உண்மை என்ன..?

 எந்தவகையான டெலிவரியாக இருந்தாலுமே  அதில் நன்மை தீமை இரண்டுமே இருக்கின்றன. ஒவ்வொரு பெண்ணும் தனக்கு எது தேவை, எது வசதியாக இருக்கும் என்பதை தன்னுடைய மகப்பேறு மருத்துவரிடம் கலந்தாலோசித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Pregnancy care, Pregnancy Symptoms