Home /News /lifestyle /

நயன்தாராவின் ஃபிட்னஸ் சீக்ரெட்டிற்கு காலையில் அவர் குடிக்கும் இந்த ஸ்மூதிதான் காரணமாம்...

நயன்தாராவின் ஃபிட்னஸ் சீக்ரெட்டிற்கு காலையில் அவர் குடிக்கும் இந்த ஸ்மூதிதான் காரணமாம்...

நயன்தாராவின் ஃபிட்னஸ் சீக்ரெட்

நயன்தாராவின் ஃபிட்னஸ் சீக்ரெட்

தன்னுடைய உணவு முறையில் அதிக அக்கறையுடன் செயல்படும் நயன்தாரா ஆரம்ப காலக் கட்டத்தில் பழங்கள், யோகர்ட் போன்றவற்றை காலை நேர உணவாக எடுத்துக்கொள்வார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தன்னுடைய காலை உணவாக தினமும் தேங்காய் ஸ்மூத்தியை எடுத்து கொள்வது தான் அவருடைய ஃபிட்னஸ் சீக்ரெட் என்கிறார். இனி நாமும் ஃடிரை பண்ணி பார்ப்போமோ?...

தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80 களில் தான் பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து நிலைத்து நிற்கும் ஹீரோயின்கள் இருப்பார்கள். ஆனால் இன்றைக்கு ஒரு சில படங்களில் மட்டும் தலைக்காட்டி விட்டு காணாமல் போய்விடுவார்கள். இதுப் போன்ற ஹீரோயின்களுக்கு மத்தியில் தன்னுடைய தனித்துவமான நடிப்பின் மூலம் நிலைத்து நிற்கிறார் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நயன்தாரா.

மாறுபட்ட கதைக்களத்தைத் தேர்வு செய்து அதற்கேற்றால் போல் உடல் அமைப்பை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டவர் தான் நயன்தாரா. இவர் நடிப்பில் மட்டுமின்றி உடலையும் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதிலும் அக்கறையுடன் செயல்படுவார். சினிமாத்துறையில் கால்பதித்து 19 ஆண்டுகள் ஆன போதும் தன்னுடைய உடலை ஒல்லியாக மற்றும் ஃபிட்டாக வைத்திருக்க அவர் என்னென்ன விஷயங்களை மேற்கொள்கிறார் எனவும் காலை உணவாக என்ன எடுத்துக்கொள்கிறார்? என நாமும் தெரிந்துக் கொள்வோம்.



நயன்தாராவின் காலை நேர ஸ்மூத்தி:

தன்னுடைய உணவு முறையில் அதிக அக்கறையுடன் செயல்படும் நயன்தாரா ஆரம்ப காலக் கட்டத்தில் பழங்கள், யோகர்ட் போன்றவற்றை காலை நேர உணவாக எடுத்துக்கொள்வார். ஆனால் சமீபத்தில் தன்னுடைய உடலை மேலும் கட்டுக்கோப்பாக மற்றும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரையின் படி, தன்னுடைய காலை உணவில் புதிய ரெசிபியைக் கடைப்பிடித்து வருகிறார்.

அதன்படி அதிக கலோரிகள் இல்லாத தேங்காய் ஸ்மூத்தியைத் தான் தன்னுடைய காலை உணவாக எடுத்து கொள்கிறார். இது போன்று நாமும் காலை உணவாக ஸ்மூத்தியைப் பருக வேண்டும் என்று நினைத்தால் எப்படி இதை மேற்கொள்வது? என்பது குறித்து நாமும் தெரிந்து கொள்வோம்.

உடல் எடை அதிகரிக்க இந்த பழக்கம்தான் காரணமா..? இன்றே இதை சரி செய்யுங்கள்...

தேங்காய் ஸ்மூத்தி செய்முறை:

இளநீர் – 2 கப்
இளநீர் வழுக்கை – 1 கப்
தேங்காய் பால் – 1 கப்
சர்க்கரை – தேவையான அளவு
ஏலக்காய் தூள்

ஐஸ்கட்டி தேவைக்கேற்ப...

தேங்காய் ஸ்மூத்தி செய்வதற்கு முதலில் இளநீர், இளநீர் வழுக்கை மற்றும் சர்க்கரை சேர்த்து மிக்ஸி ஜாரில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

இதனுடன் தேங்காய் பால் சேர்க்க வேண்டும். பின்னர் இவற்றை நன்றாக கலந்துக் கொண்டு ஏலக்காய் தூள் மற்றும் உங்களுக்கு தேவைப்பட்டால் ஐஸ்கட்டி சேர்த்துக் கொள்ளலாம்.

nayanthara vignesh shivan, nayanthra vignesh shivan latest picture, nayanthara latest image, vignesh shivan latest image, நயன்தாரா, விக்னேஷ் சிவன், நயன்தாரா லேட்டஸ்ட் படம், நயன்தாரா விக்னேஷ் சிவன் படம், nayanthara vignesh shivan wedding, nayanthara vignesh shivan wedding images, nayanthara vignesh shivan wedding marriage, nayanthara vignesh shivan wedding iyer salary, nayanthara vignesh shivan wedding invitation, nayanthara vignesh shivan marriage date, நயன்தாரா, nayanthara vignesh shivan, nayanthra vignesh shivan latest picture, nayanthara latest image, vignesh shivan latest image, நயன்தாரா, விக்னேஷ் சிவன், நயன்தாரா லேட்டஸ்ட் படம், நயன்தாரா விக்னேஷ் சிவன் படம், நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண அழைப்பிதழ், நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம்

இந்த ஸ்மூத்தி அதிக கலோரிகள் இல்லாமல், சுவையோடு ஆரோக்கியத்தையும் அளிக்கிறது. இதனால் தான் லேடி சூப்பர் ஸ்டார் தன்னுடைய டயட் பிளானில் இதை பின்பற்றுகிறார்.

இதோடு மட்டுமின்றி நயன்தாராவின் டயட் பிளாணில் எப்போதும் பழங்கள், முட்டை, காய்கறிகள், மீன் போன்றவற்றை சேர்த்துக்கொள்வார். மேலும் ஜிம்மிற்கு சென்று முறையான உடற்பயிற்சிகள் மேற்கொள்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார் நயன்.. காதலித்த இயக்குனர் விக்னேஷ் சிவனைத் திருமணம் செய்த பிறகும் சினிமா மற்றும் ஆரோக்கியமான டயட் ப்ளாணை ஒரு போதும் நிறுத்தாமல் மேற்கொள்கிறார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Breakfast, Nayanthara, Smoothie

அடுத்த செய்தி