• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • சருமம் இயற்கையான முறையில் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? சூப்பர் டிப்ஸ்

சருமம் இயற்கையான முறையில் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? சூப்பர் டிப்ஸ்

மஞ்சளை கொண்டு சருமத்திற்கு பேக் போட்டு கொண்டால் சருமத்தின் ஆரோக்கியம் நன்றாக மேம்படும்.

  • Share this:
தோல் பராமரிப்பு என்ற விஷயத்தை பொறுத்தவரை "ஒளிரும் சருமம்" என்ற சொல் மக்கள் மனதில் அழுத்தமாக பதிந்து விட்டது. ஒரு நல்ல சருமம் என்பது நாம் அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்று. சரும வெடிப்புகளில் இருந்து சூரிய கதிர்களால் ஏற்படும் கோளாறுகள் வரை பல சரும பிரச்சனைகளை அன்றாடம் சந்திக்க நேரிடுகிறது. சரும அழகை மீட்டெடுப்பதில் பல இயற்கையான பொருட்கள் நமக்கு நன்மை செய்கின்றன. சருமத்தை மேம்படுத்த, மென்மையாக்க, பொலிவுடன் இருக்க என இயற்கை பொருட்கள் சரும பராமரிப்பில் பல வழிகளில் உதவுகின்றன. எனவே இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி வீட்டிலேயே செய்து கொள்ளும் சில தோல் பராமரிப்பு டிப்ஸ்களை தெரிந்து கொள்ளுங்கள்.

தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெய் தலைமுடி வளர்ச்சிக்கு மட்டுமின்றி தோலுக்கும் ஒரு நல்ல மூலப்பொருளாக இருக்கிறது. தேங்காய் எண்ணெய் முடி மற்றும் தோல் இரண்டிற்கும் ஈரப்பதத்தை சேர்க்கிறது மற்றும் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தி பொலிவுற செய்கிறது. தேங்காய் எண்ணெய் உங்கள் சருமத்தின் பாதுகாப்பு தடை அடுக்கை அதிகரிக்க உதவுகிறது, ஈரப்பதத்தை உள்ளேயே தங்க வைத்து சருமத்தை மிருதுவாகவும் நீரேற்றமாகவும் வைத்திருக்கிறது. கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. தேங்காய் எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் எரிச்சல் மிக்க சருமத்திற்கு நன்மை பயக்கும். வயதான அறிகுறிகளை துரிதப்படுத்தும் சுற்றுச்சூழல் நச்சுகளுக்கு எதிராக போராட உதவும். தோல் சருமத்திற்கான சிறந்த வகை தேங்காய் எண்ணெய் ஆர்கானிக் அல்லது கோல்ட் பிரஸ்ஸுடு தேங்காய் எண்ணெய் ஆகும். ஏனெனில் இதில் அதிக ஊட்டச்சத்துக்கள் இருக்கும்.

கற்றாழை:

இயற்கை மூலிகையான கற்றாழை சருமத்தை மிகவும் மென்மையாக்குகிறது. உங்கள் சருமம் வறண்டு போவது போல் நீங்கள் உணரும் போதெல்லாம், உங்கள் முகத்தை ஒரு கிளீன்சரால் கழுவிய பின் கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும். மேலும் இது பருக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

Must Read | உங்கள் சரும பிரச்சனைகளை சரிசெய்ய உதவும் காஃபி தூள்!

கிரீன் டீ:

உடலுக்கு மட்டுமின்றி சருமத்திற்கும் ஏராளமான நன்மைகளை அளிக்கிறது கிரீன் டீ. கிரீன் டீயில் உள்ள ஆக்ஸிஜனேற்ற, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் முகப்பரு மற்றும் எண்ணெய் சருமத்திற்கு ஒரு சிறந்த சிகிச்சையாக இருக்கிறது. மேலும் சருமம் சுருங்குவதையும், வயதான தோற்றம் ஏற்படுவதையும் தடுக்கிறது. க்ரீன் டீயில் ஏராளமான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் தொடர்ந்து கிரீன் டீ பருகினால் சரும பராமரிப்பிற்கு உதவியாக இருக்கும். அல்லது கிரீன் டீ கலவையை சருமத்தில் தடவலாம்.

மஞ்சள்:

இயற்கையின் விலை மதிப்பற்ற மருத்துவ குணம் கொண்ட ஓர் வளம் மஞ்சள். மஞ்சளை கொண்டு சருமத்திற்கு பேக் போட்டு கொண்டால் சருமத்தின் நிறம் நன்றாக மேம்படும். தவிர இது ஆன்டிசெப்டிக் மூலப்பொருளாகவும் செயல்படுகிறது. மஞ்சள் தூள், தயிர் கலந்து உங்கள் முகதில் அப்ளை செய்யலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: