முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / குளிர்காலத்தில் சளி, இருமலில் இருந்து பாதுகாக்கும் இயற்கை வைத்திய முறைகள்..!

குளிர்காலத்தில் சளி, இருமலில் இருந்து பாதுகாக்கும் இயற்கை வைத்திய முறைகள்..!

வீட்டு வைத்தியம்

வீட்டு வைத்தியம்

கற்பூரவல்லி செடியின் இலைகளை சிறிது நெருப்பின் அனலில் காட்டி பின்னர் உள்ளங்கைகளால் நசுக்கி சாறு எடுக்க வேண்டும். இந்த சாற்றை தேனுடன் சேர்த்து கொடுக்கலாம். இலைகளை குடிநீரிலும் பயன்படுத்தலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவில் குளிர்காலம் என்பது நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்காது. வடக்குப் பகுதிகளில் குளிர்ந்த குளிர்காலம் இருந்தாலும், தெற்கே பொதுவாக அதிக வெப்பமண்டலமாகத்தான் இருக்கும். ஆனால் தற்போது, ​​இந்நிலை மாறி வருகிறது. தென் இந்தியாவில் சமநிலையற்ற காலநிலை மக்களில் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. இதுபோன்ற கால நிலைமாற்றத்தால் மனிதனுக்கு சுவாச பிரச்சினை, சளி, இருமல் போன்றவை ஏற்படுகின்றன.

பொதுவாக சிறு குழந்தைகள், பள்ளி செல்லும் குழந்தைகளிடம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் அவர்கள் இதனால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல், சளி வெளியேறும் போது இருமல், தொண்டை புண், குரல் கரகரப்பு, மூச்சுத்திணறல், சில சமயங்களில் சைனஸ் தலைவலி போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இது போன்ற சளி, சுவாச பிரச்சனைகளை வீட்டிலேயே திறம்பட நிர்வகிக்க முடியும். ஆனால் அறிகுறிகள் கடுமையாக இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.

வீட்டு வைத்திய முறைகள் :

தொண்டை வலி மற்றும் குரல் கரகரப்பு ஏற்பட்டால் உப்பு, மஞ்சள் அல்லது திரிபலா சூரணம் சேர்த்து வெந்நீரில் 2 அல்லது மூன்று முறை வாய் கொப்பளிப்பது மிகவும் நன்மை பயக்கும்.
ஆறு மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளில், மருந்து உண்மையில் பரிந்துரைக்கப்படவில்லை, ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அதே அறிகுறிகளால் பாதிக்கப்படக்கூடிய தாய்க்கு மருந்து கொடுப்பதன் மூலம் தாய்ப்பாலின் மூலம் குழந்தைக்கு அந்த மருந்தின் நன்மைகள் கிடைக்கப்பெறும்.
வச்சா இனிப்பு கொடி (அகோரஸ் காலமஸ்) இது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி, செரிமானம் மற்றும் புத்திசாலித்தனத்தை மேம்படுத்த உதவும் மிகவும் பயனுள்ள மூலிகை. புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு கூட கொடுக்கக்கூடியது. இந்த உலர்ந்த மூலிகையை அம்மிக்கல் போன்ற மேற்பரப்பில் தேய்த்து அதில் கிடைக்கக்கூடிய சிறிய அளவிலான விழுதுடன் நெய் சேர்த்து கொடுக்கலாம்.
சளி தொல்லையால் பாதிக்கப்படும் சமயங்களில் உலர் இஞ்சி (சுக்கு) மிகவும் பயனுள்ள மூலிகையாகும். இது மசாலா தேநீரில் ஒரு மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படலாம், குடிநீருடன் கொதிக்க வைத்தும் பருகலாம். குழந்தைகள், பெரியவர்கள் என இருவரும் சிறிய அளவில் மென்றும் சாப்பிடலாம்.
கற்பூரவல்லி செடியின் இலைகளை சிறிது நெருப்பின் அனலில் காட்டி பின்னர் உள்ளங்கைகளால் நசுக்கி சாறு எடுக்க வேண்டும். இந்த சாற்றை தேனுடன் சேர்த்து கொடுக்கலாம். இலைகளை குடிநீரிலும் பயன்படுத்தலாம்.
சளி, காய்ச்சல் போன்றவற்றிற்கு துளசி மிகவும் எளிமையான தீர்வாகும். துளசியை தண்ணீரில் கொதிக்கவைத்து கஷாயம் போன்று பருகுவதன் மூலம், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுகிறது. துளசி இலைகளை தண்ணீரில் கழுவி அப்படியே சாப்பிடலாம்.
திரிகடுகு என்பது சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றின் கலவையே ஆகும். பொதுவாக சுக்கு நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும். இதனால் இதனை நிறைய அஜீரணக் கோளாறுக்கான மருந்துகளில் முதன்மையாக சேர்க்கின்றனர். சாதாரண சளி, இருமல் ஆகியவற்றிற்கு தொன்றுதொட்டு நாம் உபயோகப்படுத்துவது மிளகைத்தான். எனவே இது உடனடி நிவாரணம் தரக்கூடியது.
First published:

Tags: Ayurveda, Ayurvedic medicine, Cold, Cough, Home remedies