Home /News /lifestyle /

National Doctors Day 2022 : இந்தியாவில் ஏன் குறிப்பாக ஜூலை 1-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது..? தெரிந்துகொள்ளுங்கள்

National Doctors Day 2022 : இந்தியாவில் ஏன் குறிப்பாக ஜூலை 1-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது..? தெரிந்துகொள்ளுங்கள்

தேசிய மருத்துவர்கள் தினம்

தேசிய மருத்துவர்கள் தினம்

மக்களின் உயிர் காக்க மற்றும் சமூகங்களுக்கு ஆற்றி வரும் மருத்துவர்களின் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டில் தேசிய மருத்துவர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

நமது நோய்களைக் கண்டறிந்து, ஆலோசனை வழங்குவதோடு, சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றும் உன்னத பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மருத்துவர்கள். நிரந்தர உடல் அல்லது உளவியல் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு உதவி சமூகத்திற்கு நம்பிக்கையை அளிக்கிறார்கள். எனவே மருத்துவர்கள் முக்கியமான பொது ஊழியர்களாகக் கருதப்படுகிறார்கள்.

மக்களின் உயிர் காக்க மற்றும் சமூகங்களுக்கு ஆற்றி வரும் மருத்துவர்களின் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டில் தேசிய மருத்துவர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு தேதிகளில் இந்த நாள் அனுசரிக்கப்பட்டாலும், சமூகத்தில் மருத்துவர்களின் பங்களிப்பை எடுத்துரைக்கும் தேசிய மருத்துவர்கள் தினம், இந்திய மருத்துவ சங்கத்தால் (IMA) இந்தியாவில் ஜூலை 1-ல் (இன்று) கொண்டாடப்படுகிறது. தேசிய மருத்துவர்கள் தினம் பிரேசிலில் ஆகஸ்ட் 18, ஈரான் - ஆகஸ்ட் 23 மற்றும் அமெரிக்காவில் - மார்ச் 30 அன்று கொண்டாடப்படுகிறது.

இந்திய தேசிய மருத்துவர்கள் தின தேதியின் முக்கியத்துவம்:

இந்தியாவை பொறுத்த வரை தேசிய மருத்துவர்கள் தினமானது, நம் நாட்டின் தலைசிறந்த மருத்துவரும் மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வருமான டாக்டர் பிதான் சந்திர ராயின் நினைவாக கொண்டாடப்படுகிறது. பிதான் சந்திர ராய் நாட்டின் தலைசிறந்த மருத்துவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். உலகம் முழுவதும் சென்று மருத்துவ துறையில் தனது திறமை மூலம் முக்கிய பங்காற்றியுள்ளார். ஜூலை 1, 1882-ல் பிறந்த் இவர் தனது 80-ஆவது வயதில் ஜூலை 1 அன்று 1962-ல் இறந்தார். இவர் பிறந்தது மற்றும் இறந்தது இரண்டும் ஒரே தேதியாக ஜூலை 1 இருக்கிறது. பாரத ரத்னா விருது பெட்ரா இவர் இந்தியாவில் ஜாதவ்பூர் டி.பி. மருத்துவமனை, கமலா நேரு நினைவு மருத்துவமனை, சித்தரஞ்சன் புற்றுநோய் மருத்துவமனை போன்ற பல முக்கிய மருத்துவ நிறுவனங்களை நிறுவ உதவி உள்ளார்.



யார் இந்த பிதான் சந்திர ராய்.?

பீகார் மாநிலம் பாட்னாவில் 1982 ஜூலை 1-ல் பிறந்த இவரது தந்தை பெயர் பிரகாஷ் சந்திரா. பிதான் சந்திர ராய் அவரது ஐந்து உடன்பிறப்புகளில் இளையவர் ஆவார். கொல்கத்தாவில் உள்ள பிரசிடென்சி கல்லூரியில் மருத்துவ படிப்பை முடித்த பிதான் சந்திர ராய்,பிறகு லண்டன் சென்று FRCS மற்றும் MRCP பட்டங்களைப் பெற்றார். எனினும் லண்டன் சென்று படிக்கும் வாய்ப்பை இவர் எளிதாக ஒன்றும் பெறவில்லை.

ஒமேகா-3 சப்ளிமெண்ட்ஸ் அதிகமாக எடுத்து கொள்வதால் உடலுக்கு இவ்வளவு பாதிப்பா..!

இந்தியர் என்ற காரணத்தால் அவருக்கு முன்னதாக லண்டனில் படிக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் டாக்டர் பிதான் சந்திர ராய் மனம் தளரவில்லை, தொடர்ந்து விண்ணப்பித்தார். இறுதியில் 30-வது முறையாக அவரது விண்ணப்பம் ஏற்கப்பட்டது. அதிக திறமை இருந்த காரணத்தால் 2 ஆண்டுகளில் ஒரே நேரத்தில் Physician மற்றும் Surgeon பட்டம் பெற்றார்.



பின் 1911-ல் இந்தியா திரும்பி மருத்துவ பணியை தொடங்கினார். பிதான் சந்திர ராய் ஒரு மருத்துவராக மட்டும் வாழவில்லை, ஒரு சமூக சேவகராக, சுதந்திர போராட்ட வீரராக மற்றும் அரசியல்வாதியாக என பல்வேறு பரிணாமங்களில் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தார். சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றிருந்த இவர், காந்தியின் வற்புறுத்தலால் தீவிர அரசியலில் காலடி எடுத்து வைத்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1948-ல் பிரபுல் சந்திர கோஷுக்குப் பிறகு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சரானார் மற்றும் 1 ஜூலை 1962 இல் அவர் இறக்கும் வரை இந்தப் பதவியில் இருந்தார்.

1961 ஆம் ஆண்டில், டாக்டர் பிதான் சந்திர ராய்க்கு நாட்டின் உயரிய சிவிலியன் விருதான "பாரத ரத்னா" வழங்கப்பட்டது. டாக்டர் பிதான் சந்திர ராயின் நினைவாக, 1991 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Doctors day

அடுத்த செய்தி