Home /News /lifestyle /

நகங்களின் நிறம் மாறுவது முதல் தசைவலி வரை… ஒமைக்ரானின் இந்த புதிய அறிகுறிகளை அலட்சியம் காட்டாதீர்கள்...

நகங்களின் நிறம் மாறுவது முதல் தசைவலி வரை… ஒமைக்ரானின் இந்த புதிய அறிகுறிகளை அலட்சியம் காட்டாதீர்கள்...

ஒமைக்ரான் அறிகுறிகள்

ஒமைக்ரான் அறிகுறிகள்

Omicron New Symptoms: உடலில் ஆக்சிஜன் ஓட்டக் குறைபாடு ஏற்படும்போது இதழ்கள் மற்றும் நகங்களில் நிற மாற்றம் ஏற்படும். நீலம் மற்றும் சாம்பல் நிறத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் தீவிரமான பிரச்சினை இருப்பதை உணர்த்துகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
ஒமைக்ரான் (Omicron ) தொற்று உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மருத்துவ ஆய்வு நிறுவனங்களும் அதன் அறிகுறிகளை ஆராய்ந்து செய்து வருகின்றது. அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் அறிக்கைப்படி, நாள்பட்ட இருமல், உடல் வெப்பநிலை அதிகரிப்பு, மற்றும் சுவை மற்றும் வாசனை உணர்திறன் இழப்பு ஆகியவற்றுடன், வேறு சில அறிகுறிகளும் ஒமைக்ரான் வைரஸ் பாதிக்கப்பட்ட பலரிடமும் காணப்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

தீவிரமாக மாறிவரும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு

நவம்பர் மாதம் முதன் முதலாக கண்டறியப்பட்ட கோவிட் வைரசின் மற்றொரு வேரியன்ட் ஆன ஒமைக்ரான் வைரஸ் உலகம் முழுவதிலும் பல நாடுகளிலும் வேகமாகப் பரவி வருகிறது. டெல்டா வைரசை விட இதன் பாதிப்பு குறைவாகத் தான் இருக்கும் என்று அறியப்பட்டிருந்த நேரத்தில், வேறு சில அறிகுறிகள் ஒமைக்ரானை தீவிரமான தொற்றாக மாற்றியுள்ளது. தற்பொழுது ஒமைக்ரான் வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றது. தொடக்கத்தில் சளி மற்றும் இருமல் இருந்தால் காணப்படும் அறிகுறிகளை மட்டுமே ஒமைக்ரான் வெளியிட்டது. ஆனால், நாளடைவில் சருமம், நகம் மற்றும் உதடுகள் ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்படுகிறது என்ற மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.



ஒமைக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பால் நகம், உதடுகள் மற்றும் சருமத்தில் தெரியும் அறிகுறிகள் என்ன

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பின் அறிக்கையின்படி, வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களின் நகங்கள் நீல நிறமாக அல்லது கிரே நிறமாக மாறினால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அதே போல, போல சரும நிறம் வெளிறிப் போய் காணப்பட்டால், அல்லது நீல நிறத்தில் அல்லது கிரே நிறத்தில் மாறத் தொடங்கினால், உதடுகளின் நிறம் ஒரு நபரின் நிறத்துக்கு, நிறம் மாறும் போதும் உடனடியாக மருத்துவரை அணுகி சரியான சிகிச்சையைப் பெற வேண்டும்.

வீட்டிலேயே செய்யப்படும் கொரோனா டெஸ்டில் ஒமைக்ரான் தொற்றையும் கண்டறிய முடியுமா..? ஆய்வின் பதில்...

உடலில் ஆக்சிஜன் ஓட்டக் குறைபாடு ஏற்படும்போது இதழ்கள் மற்றும் நகங்களில் நிற மாற்றம் ஏற்படும். நீலம் மற்றும் சாம்பல் நிறத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் தீவிரமான பிரச்சினை இருப்பதை உணர்த்துகிறது. இது சில நேரங்களில் எமர்ஜன்ஸி மருத்துவ அவசர சிகிச்சை பெற வேண்டிய தேவையை ஏற்படுத்தும்.



அதே போல, ஓமைக்ரான் வைரஸ் தொற்று அறிகுறிகள் நகம் மற்றும் சருமத்தில் அல்லது உதடுகளில் காணப்படும் போது, எமர்ஜென்சி சிகிச்சைக்கான எச்சரிக்கை அறிகுறிகள் என்று மருத்துவ கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. கூடுதல் அறிகுறிகளாக, மூச்சு விடுவதில் சிரமம், நீடித்த தசை வலி , இதய பாதிப்பு மற்றும் குழப்பமான மனநிலை ஆகிய அறிகுறிகளும் காணப்படுகிறது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: CoronaVirus, Omicron, Omicron Symptoms

அடுத்த செய்தி