இவ்வளவு வயதிலும் நடிகை நதியா ஃபிட்டாக இருக்க இதுதான் காரணமா..? இன்ஸ்டாவில் வெளியிட்ட ஃபிட்னஸ் வீடியோ

நதியா

பிரபல நடிகை நதியா, உடற்பயிற்சி செய்யும் ஃபிட்னஸ் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

  • Share this:
பூவே பூச்சூடவா படத்தில் அறிமுகமாகும்போது எப்படி இருந்தாரோ அதே மாதிரியான அழகை இப்போதும் நதியா கொண்டிருக்கிறார் என்றால் அதை யாரும் மறுப்பதற்கில்லை. 80- களின் கனவுக் கன்னியாக இருந்த நதியா இன்றும் பல ரசிகர்களை கொண்டிருக்கிறார் என்றால் பெருமைதான்.

80 - களில் பிசி நடிகையாக இருந்த நதியா 2004 ஆண்டு வெளியான எம்.குமரன் படத்தில் கம் பேக் கொடுக்கும்போது பலரையும் அச்சரியத்தில் ஆழ்த்தினார். இப்போது தமிழ், தெலுகு, மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.

இப்படி பல பாராட்டுகளை நாம் அடுக்கிக்கொண்டே சென்றாலும் அதற்கு பின் இருக்கும் நதியாவின் உழைப்பு சாதாரணமானதல்ல. இப்படி எப்போதும் ஃபிட்டாகவும் இளமையாகவும் இருக்க முடிகிறதெனில் அதற்கு பின் அவர் எத்தனை தியாகங்களை செய்திருக்க வேண்டும். அதாவது உணவில் கட்டுப்பாடு, தினசரி உடற்பயிற்சி , அழகுப் பராமரிப்பு , சரியான நேரத்தில் உணவு இப்படி பல விஷயங்களை கையாள வேண்டும்.

உடல் தோற்றத்தில் மட்டுமல்லாது இன்றைய இளைஞர்களின் ஃபேவரட் இடமான சோஷியல் மீடியாக்களிலும் நதியா ஆக்டிவாக இருப்பார். அப்படி நதியா சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினசரி அவர் செய்யும் ஒர்க் அவுட் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் இன்றைய இளைஞர்களுக்கு நிகராக உடலை வளைத்து அவர் செய்யும் பயிற்சிகள் நம்மையும் ஓட வைக்கிறது. 
View this post on Instagram

 

A post shared by Nadiya Moidu (@simply.nadiya)


இந்த வீடியோவை பார்த்த பிறகு உங்களுக்கும் நாளை முதல் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று தோன்றகிறதா..?

உடல் பருமனால் பலரும் அவதிப்பட்டு வரும் சூழலில் நதியாவின் இந்த வீடியோ பதிவு உற்சாகம் அளிக்கலாம். அவரின் ஃபிட்னஸ் ரகசியத்தில் ஒர்க் அவுட் என்பது மிக முக்கியமானது என்பதை பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். எனவே நீங்களும் நதியாவை போல் என்று இளமையாக இருக்கே இன்றிலிருந்தே ஃபிட்னஸ் பயிற்சிகளை தொடங்கிவிடுங்கள்.
Published by:Sivaranjani E
First published: