ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மார்பக புற்றுநோய் தொடர்பாகக் கூறப்படும் 5 கட்டுக்கதைகளும், உண்மைகளும்...

மார்பக புற்றுநோய் தொடர்பாகக் கூறப்படும் 5 கட்டுக்கதைகளும், உண்மைகளும்...

மார்பக புற்றுநோய்

மார்பக புற்றுநோய்

மார்பகப் புற்றுநோயானது பல பெண்களை பாதிக்க கூடிய மிகவும் பொதுவான வகையாக இருக்கிறது. முன்பெல்லாம் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஏற்பட்ட இவ்வகை கேன்சர், தற்போது இளம் பெண்களையும் அதிகம் பாதிப்பது கவலைக்குரிய ஒன்றாக இருக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகளவில் பல கோடிக்கணக்கான மக்களை பாதித்துள்ள நோய்களில் முக்கியமான மற்றும் ஆபத்தான நோயாக இருக்கிறது புற்றுநோய். புற்றுநோய்களில் பல வகை இருக்கிறது. ஆனால் இவற்றில் மார்பகப் புற்றுநோயானது பல பெண்களை பாதிக்க கூடிய மிகவும் பொதுவான வகையாக இருக்கிறது. முன்பெல்லாம் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஏற்பட்ட இவ்வகை கேன்சர், தற்போது இளம் பெண்களையும் அதிகம் பாதிப்பது கவலைக்குரிய ஒன்றாக இருக்கிறது.

மார்பக புற்றுநோயில் பிராக்கள் முக்கிய பங்கு வகிப்பதாக பல பெண்கள் நினைக்கிறார்கள். இந்நிலையில் மார்பக புற்றுநோயை பற்றிய எட்டு பொதுவான சில கட்டுக்கதைகள் மற்றும் அவற்றின் பின்னால் உள்ள உண்மைகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்...

1. கட்டுக்கதை: அண்டர்வைர் பிராக்கள் ( Underwire bra) மார்பக புற்றுநோயை உண்டாக்கும்...

உண்மை: இவ்வகை பிராக்களின் கப்-ல் உள்ள வயர்கள், மார்பகத்தில் உள்ள நிணநீர் ஓட்டத்தை கட்டுப்படுத்தலாம், இதனால் அந்த பகுதியில் நச்சுகள் உருவாகி கேன்சர் அபாயத்தை ஏற்படுத்துகின்றன என்ற கருத்து இருக்கிறது. ஆனால் அண்டர்வயர் ப்ராக்கள் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்காது என்கிறார் உள்ளாடை நிறுவனமான wacoal india-வின் COO பூஜா மிரானி. அண்டர்வைர் ப்ராக்கள் உட்பட பிரா வகைகள், பிரா அளவு அல்லது மார்பக அளவு ஆகியவை மார்பக புற்றுநோய்க்கான அபாயத்தை இணைக்கும் என்பதற்கான அறிவியல் ஆதாரம் இல்லை என்கிறார்.

2. கட்டுக்கதை: சிலிகான் பிரெஸ்ட் இம்பிளான்ட்ஸ் மார்பக புற்றுநோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கும்...

உண்மை: பொதுவாக சிலிகான் பிரெஸ்ட் இம்பிளான்ட்ஸ் மார்பகத்தில் வடு திசுக்களை உருவாக்கலாமே தவிர மார்பக புற்றுநோயை ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிப்பதில்லை என்பதே ஆய்வாளர்களின் கருத்து.

PCOS பாதிப்பு பெண்களை மலட்டுத்தன்மையாக்குகிறதா..? உண்மை என்ன..?

3. கட்டுக்கதை: பெண்களுக்கு மட்டுமே மார்பக புற்றுநோய் ஏற்படும்...

உண்மை: இல்லை, மார்பக புற்றுநோய் என்பது இருபாலருக்கும் ஏற்படும். அதாவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படலாம். ஆனால் இது பெண்களுக்கு மிகவும் பொதுவானது.

4. கட்டுக்கதை: பிரா அணிவதால் மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது...

உண்மை: பிரா மார்பக புற்றுநோயை உண்டாக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதாவது பிரா உபயோகத்திற்கும் மார்பக புற்றுநோய்க்கும் எந்த தொடர்பும் இல்லை. மாறாக பிரா தொடர்பான பிரெஸ்ட் சப்போர்ட் தீவிர உடல் செயல்பாடுகளுடன் தொடர்புடைய மார்பகத்தின் கொழுப்பு திசுக்களுக்கு சேதம் விளைவிக்கும் அபாயத்தைக் குறைக்கிறது. தவிர தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு தொந்தரவாக இருக்கும் வலி அறிகுறிகளைக் குறைக்கிறது. அதே போல ஆண்களுக்கும் கூட மார்பக புற்றுநோய் வருகிறது. அவர்கள் பிராவை அணிகிறார்களா என்ன.?

5. கட்டுக்கதை: கருப்பு கலர் பிராவால் மார்பக புற்றுநோய் ஏற்படும்...

உண்மை: பெண்கள் அணியும் உள்ளாடையான பிராவின் நிறத்திற்கும், மார்பக புற்றுநோய்க்கும் எப்போதும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதே நிபுணர்களின் பதில். உங்கள் பிராவின் நிறம் கருப்பு, வெள்ளை அல்லது சிவப்பு என எந்த நிறமாக இருந்தாலும் அதற்கும் மார்பக புற்றுநோய்க்கும் எந்த தொடர்பும் இல்லை.

Published by:Sivaranjani E
First published:

Tags: Breast cancer