ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு வரும் உணவு தொடர்பான கட்டுக்கதைகள்… அதை உடைக்கும் உண்மைகள்..!

இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு வரும் உணவு தொடர்பான கட்டுக்கதைகள்… அதை உடைக்கும் உண்மைகள்..!

நாம் தேர்ந்தெடுக்கும் பெரும்பாலான உணவுப் பொருட்களில் உப்பு இயற்கையாகவே காணப்படுகிறது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

நாம் தேர்ந்தெடுக்கும் பெரும்பாலான உணவுப் பொருட்களில் உப்பு இயற்கையாகவே காணப்படுகிறது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

நாம் தேர்ந்தெடுக்கும் பெரும்பாலான உணவுப் பொருட்களில் உப்பு இயற்கையாகவே காணப்படுகிறது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, அனைத்து CVD இறப்புகளில் 85 சதவிகிதம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் காரணமாக ஏற்படுகிறது. கார்டியோவாஸ்குலர் நோய்கள் (CVDs) இதயம் மற்றும் இரத்த நாளங்களின் கோளாறுகள் மற்றும் கரோனரி இதய நோய், செரிப்ரோவாஸ்குலர் நோய், ருமாட்டிக் இதய நோய் மற்றும் பிற நிலைமைகள் ஆகியவை அடங்கும். உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், அதிக கொழுப்பு, மன அழுத்தம், தவறான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சியின்மை போன்ற இதய நோய்களை உருவாக்கும் ஆபத்து காரணிகளால் இதய பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. இந்த காரணிகளில் பெரும்பாலானவை கட்டுப்படுத்தக்கூடியவை. அனைத்திற்கும் உணவுப் பழக்கம் மிக முக்கியமான அம்சமாகும்.

இதய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு, உங்கள் மருத்துவர் ஆரோக்கியமான மற்றும் நன்கு சமநிலையான உணவைத் தேர்வு செய்ய உங்களுக்கு அறிவுறுத்துவார். ஏனென்றால், ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைக் கடைப்பிடிப்பது உங்கள் அரோக்கியத்திற்கு முக்கியமானது. உங்கள் இதயத்தை மேலும் சிக்கல்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதல் சில மாதங்களில் தொற்றுநோயைத் தவிர்க்க நீங்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை உண்ண வேண்டும். நாம் தவிர்க்க வேண்டிய சில விஷயங்களைத் தவிர, நம் வீட்டு உணவுப் பழக்கங்கள் போதுமானவை என்பதை பெரும்பாலான மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கட்டுக்கதை: சில ‘சூப்பர் உணவுகள்’ சாப்பிடுவது இதய நோய்களைத் தடுக்க உதவும்.

உண்மை: சூப்பர் உணவு என்று எதுவும் இல்லை. இருப்பினும், ப்ளூபெர்ரிக்கள், மாதுளை, அக்ரூட் பருப்புகள் மற்றும் மீன் போன்ற உணவுகள் உங்கள் உடல்நலனுக்கு நல்லது. ஆனால், அவை இதய நோய் வராமல் தடுக்காது. இருப்பினும், சில உணவுமுறைகள் உங்களுக்கு உதவலாம். சில முக்கிய ஆய்வுகளின்படி, முழு தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகளை உள்ளடக்கிய மத்திய தரைக்கடல் உணவு, வாரத்திற்கு ஒரு முறை மீன் உட்கொள்வது இதய நோய் அபாயத்தை குறைக்கிறது. சிவப்பு இறைச்சியில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால், அதை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

இதையும் படிங்க | “உங்க ஹார்ட்ட ஹெல்தியா பாத்துக்கோங்க…” இதயத்துக்கான சிறந்த உணவு முறைகள் இதோ!

கட்டுக்கதை: கொழுப்புகள் உங்களுக்கு நல்லதல்ல.

உண்மை: நமது பெரும்பாலான ஹார்மோன்கள் கொலஸ்ட்ராலில் இருந்து உருவாவதால், நம் உடலுக்கு தினமும் குறிப்பிட்ட அளவு கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது. நமது மூளை மற்றும் சில தசைகளுக்கு எரிபொருளாக கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது. எனவே, நமக்கு கொலஸ்ட்ரால் அல்லது கொழுப்பு தேவை, ஆனால் தரம் மற்றும் அளவு முக்கியம். செயற்கையாக தயாரிக்கப்பட்ட கொழுப்புகள், பேக் (bake) செய்யப்பட்ட உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

இதுமட்டுமின்றி, குளிர்பானங்கள் போன்ற அதிக சர்க்கரை உணவுகள் கூட இதயத்திற்கு தீங்கு விளைவிப்பதாக காட்டப்பட்டுள்ளது. சிவப்பு இறைச்சி மற்றும் வெண்ணெய் போன்ற விலங்கு பொருட்களிலிருந்து பெறப்படும் நிறைவுற்ற கொழுப்புகள், ஒருவருடைய எல்டிஎல் அளவை அதிகரிக்க முனைகின்றன. அதேசமயம், நிறைவுற்ற கொழுப்புகளுக்குப் பதிலாக மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உங்கள் எல்டிஎல் அளவைக் குறைக்கலாம். அதாவது பதப்படுத்தப்படாத உணவு அல்லது இயற்கை உணவு உண்பது உங்கள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்காது. கொழுப்பிற்கான நமது தினசரி தேவை நமது ஆற்றல் தேவையில் 10 சதவிகிதம் இருக்க வேண்டும். இது சராசரியாக ஒரு நாளைக்கு 30-35 கிராம் ஆகும்.

இதையும் படிங்க | “சுடுதண்ணீர் முதல் சோப்பு வரை…” – நீங்கள் செய்யக்கூடாத 5 குளியல் தவறுகள்!

கட்டுக்கதை: உப்பு ஒரு இயற்கை தயாரிப்பு என்பதால் ஆபத்தானது அல்ல.

உண்மை: கொழுப்பு மற்றும் சர்க்கரையை விட அதிகப்படியான உப்பு மிகவும் ஆபத்தானது. இது உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உங்கள் சிறுநீரகத்தின் மீது நிறைய சுமைகளையும் வைக்கிறது. நாம் தேர்ந்தெடுக்கும் பெரும்பாலான உணவுப் பொருட்களில் உப்பு இயற்கையாகவே காணப்படுகிறது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். நாம் அதிகம் உப்பு சேர்க்க கூடாது. ஆனால், பதப்படுத்தப்பட்ட உணவுகளைப் பற்றி பேசும்போது, ​​​​உப்பின் அளவு பெரும்பாலும் இயற்கையாக நிகழும் அளவை விட அதிகமாக இருக்கும். அதிக உப்பை உண்பதால், உடலில் அதிக நீர் தேங்குவதால் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம்.

உயர் இரத்த அழுத்தம் உங்கள் இதயம், சிறுநீரகங்கள் மற்றும் மூளையின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும். மேலும், இது மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் சிறுநீரக நோய் அபாயத்தையும் அதிகரிக்கும். எனவே, உப்பு நுகர்வுகளை நீங்கள் கண்காணிக்க வேண்டும், மேலும் குறைந்த அளவு உப்பு கொண்ட உணவுகளை உண்ண வேண்டும். ஒரு நாளைக்கு நீங்கள் உண்ண வேண்டிய உப்பின் அளவு குறித்து உங்கள் நிபுணரிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

Published by:Archana R
First published:

Tags: Healthy Food, Healthy Life, Heart health