Home /News /lifestyle /

கோவிட்-19 காலத்தில் கர்ப்பமடைவது குறித்த கட்டுக்கதைகளும், உண்மைகளும்!

கோவிட்-19 காலத்தில் கர்ப்பமடைவது குறித்த கட்டுக்கதைகளும், உண்மைகளும்!

pregnant women

pregnant women

COVID 19 | தொற்றுநோய்க்கு மத்தியில் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது தாய்-சேய் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று பலர் நம்புகிறார்கள்.

கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்த கவலைகள் எவ்வளவு பரவலாக இருக்கிறதோ அவ்வளவு பரவலாக அது தொடர்பான குழப்பமும், தவறான எண்ணங்களும் நிலவி வருகிறது.

தொற்றுநோய் என்கிற ஒரு அச்சம் நம் வாழ்க்கைக்குள் வரும் முன்பே கர்ப்பம் பற்றி பலவகையான கட்டுக்கதைகள் இருந்து வந்த நிலைப்பாட்டில், தற்போது கொரோனாவை தொடர்புடைய கட்டுக்கதைகளும் அதில் சேர்ந்துள்ளன.

தொற்றுநோய்க்கு மத்தியில் ஒரு குழந்தையை பெற்றெடுப்பது குறித்து திட்டமிடுவது மிகவும் அவசியமான ஒரு முடிவாக இருக்கும் அதே வேளையில் குழந்தை பெறுவது பற்றிய கருத்துக்கள் நபருக்கு நபர் வேறுபடவும் செய்கிறது.

Also Read : நகங்களின் நிறம் மாறுவது முதல் தசைவலி வரை… ஒமைக்ரானின் இந்த புதிய அறிகுறிகளை அலட்சியம் காட்டாதீர்கள்...

தொற்றுநோய்க்கு மத்தியில் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது தாய்-சேய் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று பலர் நம்புகிறார்கள். எனவே தான் கோவிட்-19 க்கு மத்தியில் கர்ப்பத்தைச் சுற்றியுள்ள சில பொதுவான கட்டுக்கதைகளை பற்றி பொதுவெளியில் பேசுவது முக்கியமாகி விட்டது.

புனேவில் உள்ள மதர்ஹுட் மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஸ்வாதி கெய்க்வாட் உடனான ஓரு உரையாடலில், "கோவிட்-19 காலத்தில் பிள்ளைப்பேறு" குறித்த சில கட்டுக்கதைகள் உடைத்து எறியப்பட்டடன.

கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசி போடுவதை தாமதப்படுத்தலாம் :

இது முழுக்க முழுக்க ஒரு கட்டுக்கதை. இன்னும் சொல்லப்போனால் கர்ப்பிணிப் பெண்கள் தான் மற்றவர்களை விட ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்களுக்கு அதிகம் ஆளாகிறார்கள். கூடுதல் பாதுகாப்பை உறுதிசெய்ய விரும்புவார்கள் தடுப்பூசி போடுவது நல்லது.

Also Read : பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் சம்பந்தப்பட்ட சரும பிரச்சனைகளுக்கான தீர்வுகள்!

கோவிட்-19 காரணமாக கர்ப்பகால சிக்கல்கள் எப்போதுமே இருக்கும் :

கர்ப்பிணிப் பெண்களைப் பொறுத்தவரை, கோவிட்-19 அவர்களின் ஆரோக்கியத்திற்கு நேரடியாக எம்மாதிரியான பெரிய அளவிலான சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. கர்ப்பிணித் தாய்மார்களிடமிருந்து அவர்களின் குழந்தைகளுக்கு வைரஸ் பரவுமா என்பதைக் காட்ட எந்த ஆய்வறிக்கைகளும் இல்லை. இருப்பினும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது, தாய்மார்கள் மாஸ்க் அணிந்து கொள்ளலாம், குழந்தை பராமரிப்பின் போது அடிக்கடி கைகளைக் கழுவலாம். ஒருவேளை நீங்கள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், பதற்றம் அடைய வேண்டாம்; கூடிய விரைவில் சிகிச்சை பெற தொடங்கவும்.

கர்ப்பமாக இருந்தால், கோவிட்-19 தொற்று ஏற்படாது :

இது மிகவும் பொதுவான ஒரு கட்டுக்கதை ஆகும். கர்ப்பமடைதல், பெண்களுக்கு எந்த விதமான கூடுதல் பாதுகாப்பையும் வழங்காது என்பதால் - இந்த கட்டுக்கதை அறிவியல் பூர்வமாக ஆதாரமற்றது. இன்னும் சொல்லப்போனால் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும் மற்றும் வைரஸ், பாக்டீரியா தொற்றுக்கு அவர்கள் எளிதில் ஆளாகலாம். எனவே நீங்கள் கர்ப்பிணிப் பெண்ணாக இருந்தாலும் கூட மற்றவர்களை போலவே மாஸ்க் அணிவது, சானிடைசர்களைப் பயன்படுத்துவது போன்ற வழக்கமான கோவிட்-19 நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும், மேலும் தடுப்பூசியும் போட வேண்டும்.

Also Read : இந்த 5 அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு இரத்த சோகை இருக்கலாம்..!

கோவிட்-19 தடுப்பூசியானது மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்களை ஏற்படுத்தும் :

உண்மை என்னவென்றால், கோவிட்-19 தடுப்பூசி உங்கள் மாதவிடாய் சுழற்சியில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது, நீங்கள் கர்ப்பமாக இல்லாத பட்சத்தில். தடுப்பூசி போட்டதால் மாதவிடாய் கோளாறுகள் ஏற்பட்டதாக இதுவரை எந்த புகாரும் இல்லை. எனவே பெண்கள் அனைவரும் தடுப்பூசி போடுவது பாதுகாப்பானதே ஆகும்.
Published by:Selvi M
First published:

Tags: Covid-19, Health, Myths, Pregnant

அடுத்த செய்தி