Home /News /lifestyle /

டாம்பான் பயன்படுத்தினால் வர்ஜினிட்டி போய்விடுமா..? கட்டுக்கதைகளும்... உண்மைகளும்...

டாம்பான் பயன்படுத்தினால் வர்ஜினிட்டி போய்விடுமா..? கட்டுக்கதைகளும்... உண்மைகளும்...

டாம்பான் பயன்பாடு

டாம்பான் பயன்பாடு

Menstrual Hygiene : டாம்பானை நேரடியாக பெண்ணுறுப்பில் இன்சர்ட் செய்வதன் மூலம், மாதவிடாய் உதிரப்போக்கு உறிஞ்சப்பட்டு, லீக்கேஜ் மற்றும் கறை படிதல் ஆகியவை தவிர்க்கப்படும். கைக்குள் அடங்கும் அளவு இருப்பதால், டாம்பான்களை கொண்டு செல்வது மிகவும் எளிது.

மேலும் படிக்கவும் ...
பெண்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தில் மாதவிடாய்-க்கு பெறும் பங்கு உள்ளது. மாதவிடாய் சுழற்சி ஒரு பெண்ணின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை நிர்வகிக்கிறது. மாதவிடாய் காலத்தில் துணி பயன்படுத்திய சூழல் மறைந்து தற்போது சானிடரி நாப்கின் மற்றும் டாம்பான்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சானிட்டரி பேடுகளைப் பயன்படுத்துவதை விட டாம்பான்கள் பயன்படுத்துவது எளிதானது மற்றும் சூழலுக்கு ஏற்படும் கேடி ஓரளவுக்குக் குறைக்கும்.

டாம்பானை நேரடியாக பெண்ணுறுப்பில் இன்சர்ட் செய்வதன் மூலம், மாதவிடாய் உதிரப்போக்கு உறிஞ்சப்பட்டு, லீக்கேஜ் மற்றும் கறை படிதல் ஆகியவை தவிர்க்கப்படும். கைக்குள் அடங்கும் அளவு இருப்பதால், டாம்பான்களை கொண்டு செல்வது மிகவும் எளிது. ஆனால், டாம்பான் பயன்பாடு பற்றி பலவிதமான தவறான கருத்துகள் நிலவி வருகிறது. அதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

வஜைனாவிற்குள் செலுத்தும் டாம்பான் காணாமல் போய்விடும்

பெண்ணுறுப்பு என்பது துளை கொண்டதைப் போன்ற உறுப்பு அல்ல. அது ஒரு குழாய் போன்ற அமைப்பைக் கொண்டது. அதிலும் பெண்ணுறுப்பின் உள்ளே கர்ப்பப்பைக்கான தடுப்புச்சுவர் இருக்கிறது. எனவே, டாம்பான் உள்ளே செல்லவும், காணாமல் போகவும் வாய்ப்பில்லை. வஜைனாவின் உள்ளே செலுத்தப்பட்ட டாம்பானின் நுனிப் பகுதியில் இருக்கும் கயிறைப் பிடித்து இழுத்தால், எப்போது வேண்டுமானாலும் வெளியே எடுக்கலாம்.



சிறுநீர் கழிக்கும் போது டாம்பானை மாற்ற வேண்டும்

ஒரு பெண்ணுக்கு வஜைனல் பாதை மற்றும் சிறுநீர் கழிக்கும் பாதை இரண்டுமே வெவ்வேறானது. சிறுநீர் கழிக்கும் பாதை, வஜைனா இருக்கும் திறப்பிற்கு மேலே சிறுநீர் கழிக்கும் யுரேத்ராவின் வாய்ப்பகுதி அமைந்துள்ளது. வஜைனாவின் வாய்ப்பகுதியில் தான் டாம்பான் இன்சர்ட் செய்யப்படுகிறது. எனவே சிறுநீர் கழிக்கும்போது டைம்பான் பாதிக்கப்படாது. அதனால் ஒவ்வொரு முறை நீங்கள் சிறுநீர் கழிக்கும் போதும் தாம்பானை மாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை.

மாதவிடாயை இயற்கையான முறையில் தாமதப்படுத்த உதவும் சிம்பிள் டிப்ஸ்..!

டாம்பான் பயன்படுத்தினால் வர்ஜினிட்டி இழக்க நேரிடும்

திருமணத்துக்கு முன் வர்ஜினிட்டி போய்விடும் - டாம்பான் பயன்படுத்துவது பலரும் பற்றி மிகவும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் இது தான்! டாம்பான் பயன்படுத்தினால் கன்னித்திரை கிழிந்துவிடும், இதனால் வர்ஜினிட்டி இழக்கநேரிடும் என்று மிகப்பெரிய தவறான கண்ணோட்டம் நிலவி வருகிறது.

வஜெய்னாவுக்குள் டாம்பானை இன்சர்ட் செய்வதால் கன்னித்திரை கிழியாது. தீவிரமாக விளையாடினாலும், உடற்பயிற்சி செய்தாலும் சைக்கில் ஓட்டினாலும், ஸ்கிப்பிங் செய்தாலுமே கன்னித்திரை கிழிவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. எனவே கன்னித்திரை கிழிவதற்கும் டாம்பான் பயன்பாட்டுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை.



டாக்சிக் ஷாக் சிண்ட்ரோம் ஆபத்து குறைவு

டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் என்பது உயிருக்கு ஆபத்தை உருவாக்கும் நிலை. நீங்கள் பயன்படுத்தும் டாம்பான் ஆர்கானிக் பொருளா அல்லது செயற்கைப் பொருட்களால் செய்யப்பட்டதா என்பதைப் பொறுத்து மட்டுமே இந்த ஷாக்கிங் சிண்ட்ரோம் ஏற்படாது. நீங்கள் எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறீர்கள் என்பது தான் முக்கியம்.

மாதவிடாய் காலத்தில் சாக்லேட் சாப்பிடுவதால் கிடைக்கும் 6 நன்மைகள்..!

USA Todayவில் வந்த ஒரு கட்டுரையில், 8-12 மணி நேரத்திற்கும் மேலாக ஒரே டாம்பானை தொடர்ந்து பயன்படுத்துவது TSS நோய் பாதிக்கப்படும் ஒரு பெண்ணுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிடுகிறது. ஆனால், சானிட்டரி நாப்கின்களுக்கும் மற்றும் மாதவிடாய் கோப்பைகள் கூட ஒவ்வொரு 8-12 மணி நேரத்திற்கும் ஒருமுறை காலி செய்து சுத்தம் செய்யப்பட வேண்டும்.

டாம்பான் வைத்து கொண்டு தூங்கக் கூடாது

தூங்கும் போது, பேடுகள், மென்சுரல் கப்புகள் போல டாம்பான் பயன்படுத்துவது எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதிகபட்சமாக, எட்டு மணி நேரத்துக்கு மேல் ஒரே டாம்பானை பயன்படுத்தாமல் மாற்றினால், எந்த தொந்தரவும் ஏற்படாது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Periods, Sanitary Napkin, Women Health

அடுத்த செய்தி