ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கர்ப்பம் உறுதியானதும் இத்தனை டெஸ்ட் எடுக்கனுமா..? ஏன் இதெல்லாம் எடுக்கனும் தெரியுமா..?

கர்ப்பம் உறுதியானதும் இத்தனை டெஸ்ட் எடுக்கனுமா..? ஏன் இதெல்லாம் எடுக்கனும் தெரியுமா..?

கருத்தரித்தல்

கருத்தரித்தல்

பெண் குயின் கார்னர் 57 : இந்த வாரத்திலிருந்து கர்ப்ப காலத்தில் உண்டாகும் பல்வேறு சந்தேகங்களையும் சிக்கல்களையும் அதற்குண்டான தீர்வுகளையும் காண்போம்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அன்று நளினி தன்னுடைய மாமியாருடன் மருத்துவமனைக்கு வந்திருந்தார்.

அவருடைய மாமியார் தான் துவங்கினார்" டாக்டர்! நளினி என் மருமகள். கல்யாணம் ஆகி ஆறு மாசம் ஆகுது. பீரியட்ஸ் பத்து நாள் தள்ளிப் போயிருக்கு. அதனால தான் பார்க்கலாம்னு வந்தோம். " என்றார்.

"சரிம்மா !முதல்ல பிரக்னன்சி இருக்கான்னு கன்ஃபார்ம் பண்ணிக்கலாம்" என்று கூறினேன்.

சிறுநீரில் கர்ப்பம் இருக்கிறதா ? என்று சோதிக்கும் பரிசோதனையை செய்தோம். மூன்று நிமிடத்திலேயே கிட்டில் இரண்டு கோடுகள் தோன்றி கர்ப்பம் இருப்பதை உறுதி செய்தன.

"கங்கிராஜுலேஷன்ஸ்...'பாசிட்டிவ்' என்றேன்.

"தேங்க்ஸ்!! அடுத்து என்ன பண்ணனும் சொல்லுங்க டாக்டர் என்றார் நளினி.

கர்ப்ப காலத்தில் செய்யக்கூடிய முக்கியமான ரத்த பரிசோதனைகள் இருக்கின்றன. அவைகளை முதலில் முடித்து விடுவோம். என்றேன்.

முக்கியமான முதல் கட்ட டெஸ்ட் என்று நான் ஒரு லிஸ்ட்டை கொடுத்ததும் நளினியின் மாமியார் எதற்காக இவ்வளவு டெஸ்ட் எடுக்கணும் டாக்டர்??? இதெல்லாம் கட்டாயமாக செய்யணுமா? . எங்க காலத்துல மருத்துவமனைக்கு பிரசவத்துக்கு மட்டும் தான் நான் போனேன். ஒரு டெஸ்ட் கூட நாங்க எடுக்கல. இப்ப எதுக்கு ஆரம்பத்திலேயே இவ்வளவு டெஸ்ட் எடுக்க சொல்றீங்க? என்று கேட்டார்.

அவருடைய கேள்வி நியாயமானது. அதற்கான விளக்கம்

அடிப்படை ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் எல்லா கர்ப்பிணிகளுக்கும் தரப்படுவது. முதல் மூன்று மாதங்களுக்குள் இந்த பரிசோதனைகளை எடுத்துக் கொள்வது நல்லது.

Also Read : பெண்கள் மது மருந்தினால் கருத்தரித்தலை எவ்வாறு பாதிக்கும்..? ஏன் அவசியம் தவிர்க்க வேண்டும்..?

Hemoglobin test : ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு ரத்தசோகை இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ள உதவும். ரத்தசோகை இருந்தால் அதை உடனே சரி செய்ய வேண்டும். இரத்தசோகை இருப்பின் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன் தாய்க்கும் கர்ப்ப காலத்திலும் பிரசவ சமயத்திலும் ஏராளமான சிக்கல்கள் உண்டாக்கலாம் .

Platelets : இரத்த தட்டுகள். இவை குறைவாக இருந்தால் ரத்த கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.

Blood group and type: ரத்த குரூப் மற்றும் பிரிவு தெரிந்து கொள்வது மிக அவசியம் . ஏனென்றால் தாய் இரத்தம் நெகட்டிவ் எனில் குழந்தைகளுக்கு பிரச்சனை வராமல் இருக்க தடுப்பு ஊசிகள் தேவைப்படும் . அதுபோல ரத்தப்போக்கு எனில் ரத்தம் ஏற்றுவதற்கு முன்பே இரத்த குரூப் தெரிந்திருந்தால் நேரம் விரயமாகாது.

Thyroid : தைராய்டு உடலின் எல்லா வேலைகளுக்கும் தைராய்டு ஒரு முக்கியமான ஹார்மோன் ஆகும். குழந்தையினுடைய வளர்ச்சிக்கும் தைராய்டு ஹார்மோன் முக்கியம். தைராய்டு குறைவாக இருப்பின் தைராய்டு மாத்திரைகளை ஆரம்பத்திலேயே துவங்கி விடுவோம்.

Sugar: ரத்தத்தில் சர்க்கரை அளவு பார்ப்பது மிக மிக முக்கியம். கர்ப்ப காலத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் குழந்தைக்கு பிறவி குறைபாடு முதல் பல சிக்கல்கள் வரும். அதனால் சர்க்கரை இருப்பின் ஆரம்ப கட்டத்திலேயே அதை கண்டறிந்து சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டு அதை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிக மிக அவசியம்.

Also Read :  என் கணவர் மதுவுக்கு அடிமையாக இருக்கிறார்... இதனால் கரு தங்குவது தள்ளி போகுமா..?

renal function test: சிறுநீரக வேலை ரத்தத்தில் உள்ள யூரியா மற்றும் கிரியாடின் அளவை சோதிப்பது. ஏனென்றால் கர்ப்ப காலத்தில் தாயினுடைய உடலின் எல்லா உறுப்புகளும் அதனுடைய இயல்பான வேலையை விட இரண்டு மடங்கு வேலை செய்ய வேண்டி இருக்கும். அதனால் லேசான குறைவு கூட பெரிய பிரச்சனையை உண்டாக்கும்.

Liver function test: கல்லீரல் பரிசோதனை. மஞ்சள் காமாலை இருக்கிறதா? மற்றும் அதனுடைய என்சைம்ஸ் சரியான அளவில் இருக்கிறதா? என்பது கட்டாயம் பார்க்கப்பட வேண்டும். குழந்தையினுடைய கழிவுகள் தாயினுடைய கல்லீரல் மற்றும் சிறுநீரகம் வழியாகவே வெளியேற்றப்படும் மற்றும் கொடுக்கப்படும் எல்லா மருந்துகளும் கல்லீரல் உடைய வேலைத்திறனை பொறுத்தே பலனளிக்கும்.

Urine routine culture and sensitivity : சிறுநீர் சோதனை . சிறுநீரில் உப்பு சர்க்கரை மற்றும் கிருமிகள் இருக்கிறதா? என்று கண்டறியும் சோதனை. அதன் மூலம் சிறுநீரக வேலைத் திறனை அறியலாம்.

கிருமி வளர்ச்சி பரிசோதனை மிக மிக முக்கியமாகும் கர்ப்ப காலத்தில் எந்த விதமான அறிகுறிகளும் இல்லாத பாக்டீரியா தொற்று ஏற்படலாம். அதற்கு தக்க சிகிச்சை மிக அவசியம்.

Vitamin D : விட்டமின் டி அளவு தாய் மற்றும் சேய்க்கு மிக அவசியம்.

Rubella IgG : ரூபலாவிற்கான எதிர்ப்பு சக்தி . எதிர்ப்பு சக்தி இருப்பின் அவர்களுக்கு கர்ப்ப காலத்தில் ருபலா நோய் வராது என்பதை உறுதி செய்து கொள்ளலாம் .

"இதற்கு முன்பு ஏதாவது மருத்துவ பிரச்சினைகள் உள்ளதா? ஆபரேஷன்கள் செய்திருக்கிறார்களா? " எதுவும் இல்லை எனில் இது போதும் .

நளினியின் மாமியார் "நன்றாக விளக்கி சொன்னீங்க டாக்டர் !!புரிந்தது. எல்லா டெஸ்ட் எடுத்துட்டு ரிப்போர்ட்டோட உங்களை வந்து பார்க்கிறோம் "என்றார்.

அதுவரைக்கும் நளினிக்கு போலிக் ஆசிட் மற்றும் விட்டமின் டி மாத்திரைகளை எழுதி க்கொடுத்தேன். 10 நாட்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் போது ஸ்கேன் செய்து உறுதி செய்து கொள்ளலாம் என்றும் கூறினேன்.

மகிழ்ச்சியாக இருவரும் விடைபெற்றனர்...

Published by:Sivaranjani E
First published:

Tags: Pregnancy, Pregnancy test, பெண்குயின் கார்னர்