ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

வயசு 40 ஆயிடுச்சா.. அவசியம் உடல் முழு பரிசோதனை பண்ணுங்க... அமைச்சர் வேண்டுகோள்

வயசு 40 ஆயிடுச்சா.. அவசியம் உடல் முழு பரிசோதனை பண்ணுங்க... அமைச்சர் வேண்டுகோள்

அமைச்சர் விஜயபாஸ்கர்

அமைச்சர் விஜயபாஸ்கர்

  • 1 minute read
  • Last Updated :

40 வயதை கடந்தவர்கள் நிச்சயமாக முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தமிழ்நாடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மையம் முதலாம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ஓராண்டில் பத்தாயிரம் பேர் இந்த பல்நோக்கு மருத்துவமனையில் மட்டும் உடல் பரிசோதனை செய்து கொண்டிருப்பது சிறந்த விஷயம் என்று தெரிவித்தார். 30 வயதை கடந்தவர்கள் உடல் பரிசோதனை முழுவதுமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும்,  40 வயதைக் கடந்தவர்கள் நிச்சயமாக உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் சந்தித்த விஜயபாஸ்கர் இந்த முழு உடல் பரிசோதனை திட்டம் சென்னையில்  நடைபெற்று வருவது போல கோயம்புத்தூர் மற்றும் மதுரையிலும் கொண்டு வருவதற்கான திட்டம் இருப்பதாக தெரிவித்தார்.

Published by:Yuvaraj V
First published:

Tags: Health Checkup, Minister Vijayabaskar