Home /News /lifestyle /

சமீப நாட்களாக கோபம் அதிகமாக வருகிறதா..? நீங்கள் உட்கொள்ள வேண்டிய , கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்...

சமீப நாட்களாக கோபம் அதிகமாக வருகிறதா..? நீங்கள் உட்கொள்ள வேண்டிய , கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்...

கோபம்

கோபம்

உடலில் டிரான்ஸ் கொழுப்பு அமிலங்கள் அதிகமாக சுரகத்தொடங்கும் போது, ​​அவை உடலில் அதிகமாகிவிடும். மேலும் அது மூளையின் திறனையும் வேகமாக பாதிக்கிறது. அதேசமயம் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குறைந்துவிடும். இதுவே உங்கள் கோபத்திற்குக் காரணமாகிறது.

மேலும் படிக்கவும் ...
கோபம் நம்மை சுற்றி உள்ளவர்களையும் நம்மை வெறுக்க வைத்துவிடும். அவர்களையும் அந்த கோபம் தொற்றிக்கொள்ளும். இப்படி கோபக்காரராக தினமும் இருக்கிறீர்கள் எனில் உங்களிடம் பேசுவதையே தவிர்த்துவிடுவார்கள். இப்படி அலுவலகம், வீடு என நம் கோபமே நமக்கு மிகப்பெரும் எதிரியாக மாறிவிடும்.

MindBody7 மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, உடலில் டிரான்ஸ் கொழுப்பு அமிலங்கள் அதிகமாக சுரகத்தொடங்கும் போது, ​​அவை உடலில் அதிகமாகிவிடும். மேலும் அது மூளையின் திறனையும் வேகமாக பாதிக்கிறது. அதேசமயம் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குறைந்துவிடும். இதுவே உங்கள் கோபத்திற்குக் காரணமாகிறது. எனவே கோபத்தை கட்டுப்படுத்த சில உணவுகளை தவிர்ப்பது அவசியம். அவை டிரான்ஸ் கொழுப்பின் அளவை அதிகரிக்க தூண்டுகோலாக இருக்கலாம்.

எந்த மாதிரியான உணவை சாப்பிட வேண்டும்..?

தட்டு நிறைய கலர் கலர் பழங்கள் மற்றும் காய்கறிகள் இருக்க வேண்டும். அவற்றை தினம் ஒரு பவுல் சாப்பிடுங்கள்.

முடிந்தவரை இயற்கையான முறையில் உணவை உண்ணுங்கள். உதாரணமாக, பழச்சாறுக்கு பதிலாக பழங்களை சாப்பிடுங்கள்.

மீன், கோழி, முட்டை, பச்சை காய்கறிகள் போன்ற டோபமைன் உணவுகளை உண்ணுங்கள்.

மீன், அக்ரூட் பருப்புகள், காளான்கள், விதைகள் போன்ற ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ள உணவுகளை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.



பாதாம், கீரை, பூசணி விதை, சூரியகாந்தி விதை போன்ற மெக்னீசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள். இது நன்றாக தூங்கவும் உதவும்.

முடிந்தவரை சர்க்கரை அல்லது இனிப்பு பொருட்களின் அளவை குறைத்துக்கொள்வது நல்லது.

வைட்டமின் டி குறைபாட்டை தவிர்க்கவும். இதற்கு கொழுப்பு நிறைந்த மீன், முட்டை அல்லது மருத்துவரின் ஆலோசனைப்படி சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்ளுங்கள்.

செரிமானம் முதல் மாரடைப்பு வரை...பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 9 நன்மைகள்...

ஆயுர்வேதம் என்ன சொல்கிறது..?

ஹெல்த்ஷாட்டின் கூற்றுப்படி, ஆயுர்வேதம் நம் உடலை வாத தோஷம், கப தோஷம் மற்றும் பித்த தோஷம் உள்ளிட்ட அடிப்படை சக்திகளின் சமநிலையாக புரிந்துகொள்கிறது. இவை திரிதோஷங்கள் எனப்படும்.
ஆரோக்கியமாக இருக்க, நம் உடலில் இந்த மூன்று தோஷங்களும் சமநிலையில் இருப்பது மிகவும் முக்கியம். ஒரு குறிப்பிட்ட தோஷம் தீவிரமடையும் போதெல்லாம் அது உடல் மற்றும் மன சமநிலையின்மை அல்லது நோய்களின் வடிவத்தில் வெளிவருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சில உணவுப் பொருட்கள் நம் மனநிலையை சீர்குலைத்து, கோபமும் எரிச்சலும் வர ஆரம்பிக்கும்.



கோபத்தைக் கட்டுப்படுத்த இந்த உணவுகளை தவிர்க்கவும்..!

1. கத்திரிக்காய்

கத்தரிக்காயில் அமிலத்தின் அளவு மிக அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அதன் நுகர்வு கோபத்தை அதிகரிக்கிறது.

2.உலர்ந்த பழங்கள் மற்றும் சிப்ஸ்

இவற்றின் வெப்பம் காரணமாக, அவை எளிதில் நம்மை ஆக்ரோஷமாக மாற்றும். நீங்கள் அவற்றை உட்கொள்ள விரும்பினால், உலர்ந்த பழங்களை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அவற்றை சாப்பிடுங்கள்.

3. தக்காளி

ஆயுர்வேதத்தில், தக்காளி ஒரு சூட்டை அதிகரிக்கும் உணவாக பார்க்கப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில் அது உடலில் வெப்பத்தை அதிகரிக்கிறது. இதனால் விரைவில் அது கோபத்திற்கு வழிவகுக்கும். எனவே உணவு அல்லது சாலட் வகைகளில் தக்களியை குறைத்துக்கொள்ளுங்கள்.

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Anger, Fatty food, Food

அடுத்த செய்தி