Musk Melon juice | கேரட்டில் மட்டுமே இருப்பதாக கூறப்படும் பீட்டா-கரோடீன், கேரட்டில் இருப்பதை விட அதிக அளவில் கிர்ணியில் உள்ளது. இது சருமம், கண் பார்வை, கூந்தல் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி, எதிர்ப்பு சக்தியையும் வலுப்படுத்துகிறது.
கோடைகாலத்தில் வெயிலைத் தணிக்க இயற்கையே பல்வேறு உணவுகளை வழங்கியுள்ளது. அழகான நிறங்கள், வெவ்வேறு சுவை, மற்றும் குளிர்ச்சியூட்டும் பல காய்கறிகள் மற்றும் பழங்கள் உள்ளன. தர்பூசணி, வெள்ளரி, நுங்கு என்று பலரும் விரும்பி உண்ணும் ஆரோக்கியமான கோடை கால உணவுகளுக்கு கிரீடம் வைப்பது போல, எந்த வகையிலும் குறையில்லாத மயிலடி ஆரஞ்சு நிற கிர்ணி பழமும் உள்ளது. கிர்ணி பழத்தின் கிறங்கடிக்கும் வாசமும், சுவையும் தனித்துவமானது. அது மட்டுமின்றி, வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கிர்ணி பழத்துண்டுகள் அல்லது கிர்ணி ஜூஸ் குடித்தாலே போதும். உடலும் மனமும் சில்லென்று இருக்கும். ஆங்கிலத்தில் cantaloupe மற்றும் Muskmelon என்று அழைக்கப்படுகிறது.
கிர்ணி பழம் எவ்வளவு ஆரோக்கியமானது என்று இங்கே பார்க்கலாம்...
கேரட்டில் மட்டுமே இருப்பதாக கூறப்படும் பீட்டா-கரோடீன், கேரட்டில் இருப்பதை விட அதிக அளவில் கிர்ணியில் உள்ளது. இது சருமம், கண் பார்வை, கூந்தல் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி, எதிர்ப்பு சக்தியையும் வலுப்படுத்துகிறது.
ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி9 இருக்கிறது. இந்த சத்துகள் கேன்சர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
சிட்ரஸ் பழங்களில் இருப்பது போலவே, வைட்டமின் சி நிறைந்துள்ளது.
கிர்ணி பழத்தில் நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தி, செரிமானப் பிரச்சனைகளை தீர்க்கும். தினமும் கொஞ்சம் கிர்ணி பழம் சாப்பிட்டால், மலச்சிக்கல், எரிச்சல் ஆகியவை குறையும்.
கொளுத்தும் வெப்பத்தில் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் தீராமல் இருக்கும் போது, உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள கிர்ணி பழம் உதவும். இதில் 90 சதவிகிதம் தண்ணீர் உள்ளது.
வைட்டமின் A மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்துள்ளது. இது சரும ஆரோக்கியத்துக்கு ஏற்றது.
கிர்ணி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கொலாஜன் உற்பத்தி அதிகரித்து, சருமத்தில் இளமையான தோற்றத்தை தக்கவைக்கலாம்.
கிர்ணி பழம் குறைவான கலோரிகள் கொண்ட பழம். நீங்கள் பழமாக அல்லது ஜூஸாக சாப்பிட்டால் வயிறு நிறையும், அதிக கலோரிகளை உட்கொள்ள மாட்டீர்கள்.
கிர்ணி பழத்தை தோல் சீவி, துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
மேலே உள்ள அனைத்துப் பொருட்களையும் பிளென்டர் அல்லது மிக்சியில் சேர்த்து அரைக்கவும்
ஜூஸ் உங்களுக்கு திக்காக இருக்க வேண்டுமானால், அப்படியே ஐஸ் கட்டிகள் சேர்த்து குடிக்கலாம்.
திரவமாக வேண்டுமானால், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மீண்டும் அரைத்து ஐஸ் கட்டி சேர்த்து குடிக்கலாம்.
கிர்ணி பழத்தை இரண்டு வகையாக சாப்பிடலாம். கீற்றாக அல்லது சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, சர்க்கரை அல்லது தேன் கலந்து அப்படியே பழமாக சாப்பிடலாம்.
Published by:Selvi M
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.