• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • உலக தாய்ப்பாலூட்டும் வாரம் : எடை குறைவாக பிறக்கும் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுத்து எடை அதிகரிக்க முடியும் - அரசு மருத்துவமனை சாதனை

உலக தாய்ப்பாலூட்டும் வாரம் : எடை குறைவாக பிறக்கும் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுத்து எடை அதிகரிக்க முடியும் - அரசு மருத்துவமனை சாதனை

உலக தாய்ப்பால் வாரம்

உலக தாய்ப்பால் வாரம்

தாய்ப்பாலில் மட்டும் தான் குழந்தைக்கு தேவையான எதிர்ப்பு சக்தி உள்ளது. பவுடர் பால் குடித்தால் எடை ஏறலாம். ஆனால் நோய்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்காது என பச்சிளங்குழந்தைகள் பிரிவு தலைவர் மருத்துவர் மங்களபாரதி தெரிவிக்கிறார்.

  • Share this:
எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளை பவுடர் பால் அல்லாமல் தாய்ப்பால் மட்டுமே கொடுத்து எடை அதிகரிக்க முடியும் என்பதை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனை உணர்த்தியுள்ளது. பிறக்கும் போது 2.5 கிலோ எடைக்கு குறைவாக இருக்கும் குழந்தைகளை எடை குறைவாக பிறந்த குழந்தைகள் என்று கருதப்படும்.

குறை பிரசவம், தாய்க்கு  மருத்துவ சிக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பல குழந்தைகள் எடை குறைவாகப் பிறக்கின்றன. 600 கிராம் 700 கிராம் எடையுடன் பிறக்கும் குழந்தைகளை கூட பவுடர் பால் அல்லாமல் தாய்ப்பால் மட்டுமே கொடுத்து எடை அதிகரித்து ஆரோக்கியமான குழந்தையாக வளர்க்க முடியும் என்று  மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 7ம் தேதி வரை கடைப்பிடிக்கப்படும் உலக தாய்ப்பால் ஊட்டும் வாரத்தின் ஒரு பகுதியாக எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஒரு கிலோவுக்கும் குறைவாக பிறக்கும் போது எடை கொண்ட 15 குழந்தைகள் தாய்மார்கள் உடன் வரவழைக்கப்பட்டனர். அந்த குழந்தைகள் கடந்த சில மாதங்களாக தாய்ப்பால் ஊட்டப்பட்டதால் எடை அதிகரித்து ஆரோக்கியமான குழந்தைகளாக உள்ளனர். அவர்களின் தாய்மார்களை பாராட்டும் விதமாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பரனியா என்ற பெண்ணுக்கு 26 வாரத்தில் பிரசவமாகி 670 கிராம் எடை கொண்ட பெண் குழந்தை பிறந்தது. குழந்தை வெண்டிலேட்டரில் சில வாரங்கால் இருந்து சிகிச்சை பெற வேண்டியிருந்தது. தற்போது மூன்று மாதங்களில் 1.45 கிலோவாக குழந்தையின் எடை அதிகரித்துள்ளது. தாய்ப்பால் வங்கியின் மூலமும் மற்றும் தாய்ப்பால் மட்டுமே குழந்தைக்கு வழங்கி வந்ததாக பரனியா தெரிவிக்கிறார்.

உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1-7 : ஏன் கொண்டாடப்படுகிறது..? இந்நாளின் முக்கியத்துவம் என்ன..?

எவ்வளவு குறைவாக எடை இருந்தாலும் பவுடர் பால் அல்லது பார்முலா பால் வழங்குவதே கிடையாது என தாய் சேய் நல மருத்துவமனை இயக்குநர் விஜயா கூறுகிறார். கர்பிணிகளுக்கு தாய்ப்பால் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து அவர்களையே பாலூட்ட சொல்வதாகவும் கூறுகிறார்.



தாய்ப்பாலில் மட்டும் தான் குழந்தைக்கு தேவையான எதிர்ப்பு சக்தி உள்ளது. பவுடர் பால் குடித்தால் எடை ஏறலாம். ஆனால் நோய்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்காது என பச்சிளங்குழந்தைகள் பிரிவு தலைவர் மருத்துவர் மங்களபாரதி தெரிவிக்கிறார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: