ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

World Breast Cancer Month : தீவிரமான மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகள் எப்படி இருக்கும்..? தெரிந்துகொள்ளுங்கள்

World Breast Cancer Month : தீவிரமான மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகள் எப்படி இருக்கும்..? தெரிந்துகொள்ளுங்கள்

மார்பக புற்றுநோய்

மார்பக புற்றுநோய்

மார்பகத்தில் ஏதேனும் அதி வேகமான மாற்றங்கள் அல்லது குறைந்த காலத்தில் மார்பகத்தில் நிறைய மாற்றங்கள் காணப்பட்டால், பெண்கள் அதை அசட்டையாக எடுத்துக் கொள்ளாமல், அது சாதாரணமானது அல்ல என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகம் முழுவதுமே லட்சக்கணக்கானவர்களை உயிரை எடுக்கும் நோய் கொல்லியாக மாறியிருக்கிறது புற்றுநோய். உடலின் எந்த பகுதியையும் புற்றுநோய் பாதிக்கலாம். பெண்களை அதிகம் தாக்குவது மார்பக புற்றுநோய் தான். புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அக்டோபர் மாதம் முழுவதுமே புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப கால அறிகுறி முதல் புற்றுநோய் சிகிச்சைகள், புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு வாழ்க்கை முறை என்று பல்வேறு தகவல்களை அனைவருக்குமே தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் புற்றுநோய் விழிப்புணர்வு உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புற்று நோய் பற்றிய அறிகுறிகள் பலருக்கும் தெரிந்திருந்தாலும் ஒரு சிலருக்கு புற்றுநோய் விழிப்புணர்வு பற்றிய தீவிரமான அறிகுறிகள் பற்றி அறியவில்லை. இதைப் பற்றி சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் மிகவும் தீவிரமான மார்பக புற்றுநோய் வடிவமான இன்ஃப்லமேட்டரி பிரீஸ்ட் கேன்சர் பற்றிய அறிகுறிகள் எதுவுமே பெண்களுக்குத் தெரியவில்லை என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு

அமெரிக்காவில் 1100 பெண்களிடத்தில் இந்த கணக்கெடுப்பு நடத்தப் பட்டது இதில் 78% பெண்கள் அதாவது மார்பகத்தில் கட்டி இருப்பது மார்பக புற்றுநோயின் ஒரு அறிகுறி என்பதை தெரிந்து வைத்திருக்கின்றனர்.

Also Read : 30 வயதுக்கு மேல் மார்பக புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும் வழிகள் என்ன..?

50 சதவீதத்திற்கும் குறைவான பெண்களுக்குத் தான், மற்ற அறிகுறிகள் பற்றி தெரிந்துள்ளது. மார்பகத்தின் சருமம் அல்லது மேற்பரப்பு சிவப்பு நிறத்தில் மாறுவது, மார்பக சருமம் தடிமனாக மாறுவது, மார்பகங்கள் எப்போதுமே வெப்பத்துடன் இருப்பது, ஒரு மார்பகம் மிகவும் லேசாகவும் மற்றொன்று மிகவும் கனமாகவும் இருப்பது ஆகியவை மார்பக புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம் என்று 44 சதவிகிதத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே தெரிவித்துள்ளனர்.

இந்த நான்கு அறிகுறிகள் தான் மிகவும் தீவிரமான மற்றும் அதிவேகமாக புற்று செல்களை வளர்ச்சி அடைய வைக்கும் அழற்சியூட்டும் மார்பகப் புற்றுநோய் என்று கூறப்படுகிறது.

ஓஹையோ மாநில பல்கலைகழகத்தைச் சேர்ந்த மார்பகப் புற்றுநோய் ஆய்வாளரான கோ உன் பார்க், மார்பகத்தில் ஏதேனும் அதி வேகமான மாற்றங்கள் அல்லது குறைந்த காலத்தில் மார்பகத்தில் நிறைய மாற்றங்கள் காணப்பட்டால், பெண்கள் அதை அசட்டையாக எடுத்துக் கொள்ளாமல், அது சாதாரணமானது அல்ல என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே மார்பகங்களை சுய பரிசோதனை செய்து கொள்வது மிக மிக அவசியம். ஏனென்றால் இன்ஃப்லமேட்டரி பிரெஸ்ட் கேன்சர் என்று கூறப்படும் தீவிரமான மார்பக புற்றுநோய் வகை, பெரும்பாலானவர்களுக்கு நான்காவது நிலையில் அதாவது மார்பகப் புற்றுநோய் முற்றிய நிலையில்தான் கண்டறியப்படுகிறது” என்பதை கூறியிருக்கிறார்.

புற்று செல்கள் மார்பகத்தின் எந்த பகுதியிலும் வேண்டுமானாலும் உருவாகலாம். பெரும்பாலான நேரங்களில் ஓய்து மார்பகத்தில் ஏற்பட்டுள்ள ஒரு தொற்று போல தவறாக டயக்னோஸ் செய்யப்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read :  நீங்கள் அடிக்கடி காலை உணவை தவிர்த்தால் என்ன நடக்கும்..? பிரபல நிபுணரின் விளக்கம்

மார்பகம் ஆரஞ்சு பழ தோல் போல மாறுவது, மார்பகத்தில் இருக்கும் சருமம் உள்வாங்குவது, மார்பக காம்பு பகுதியில் இருந்து திரவம் கசிவது, மார்பக காம்புகள் உள் மடங்கி காணப்படுவது ஆகியவை மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் ஆகும்.

20, 30 வயதுகளில் நம் வாழ்வியலில் மாற்றங்களை மேற்கொள்வதன் மூலமாக பின்னாளில் மார்பக புற்றுநோய் வருவதை தடுக்க முடியும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Breast cancer, Breast Care