ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

நார்மல் டெலிவரி வேண்டாம்... சிசேரியன் போதும் என்று கேட்கும் பெண்கள்... டாக்டர் சொல்லும் அட்வைஸ்!

நார்மல் டெலிவரி வேண்டாம்... சிசேரியன் போதும் என்று கேட்கும் பெண்கள்... டாக்டர் சொல்லும் அட்வைஸ்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Pregnancy Care | கர்ப்பிணிகள், அவர்கள் குடும்பத்தாரின் விருப்பம் என்பதைக் கடந்து, மருத்துவர்கள் கூட பல நேரங்களில் சிசேரியன் பரிந்துரை செய்கிறார்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒரு பெண்ணின் வாழ்வில் கர்ப்பகால மிகவும் மகிழ்ச்சியான காலமாக இருந்தாலும், பிரசவ நேரம் நெருங்க நெருங்க பதற்றமும் படபடப்பும் அதிகரித்துக்கொண்டே இருக்கும். சுகப்பிரசவம் என்று கூறும் நார்மல் டெலிவரிகளை பெரும்பாலும் விரும்பினாலும், சில நேரங்களில் அறுவை சிகிச்சை செய்துதான் குழந்தையை பெற முடியும் என்ற நெருக்கடியான சூழலும் ஏற்படும்.

அதே நேரத்தில், பலரும் மருத்துவர்களின் பரிந்துரையின் அடிப்படையில், குறிப்பிட்ட நாள், நேரத்தில் குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் பெற்றுக் கொள்ள தயாராக இருக்கிறார்கள். கர்ப்பிணிகள், அவர்கள் குடும்பத்தாரின் விருப்பம் என்பதைக் கடந்து, மருத்துவர்கள் கூட பல நேரங்களில் சிசேரியன் பரிந்துரை செய்கிறார்கள்.

பெண்கள் சிசேரியன் டெலிவரியை விரும்புகிறார்கள்

நார்மல் டெலிவரியா அல்லது சிசேரியன் டெலிவரியா என்று வரும் பொழுது நார்மல் டெலிவரி தான் என்று  உறுதியாக சொல்ல முடியவில்லை. காரணம், கர்ப்ப காலம் முழுவதும் ஆரோக்கியமாக இருந்தால் கூட, கடைசி நேரத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு விடலாம் என்ற பயமாகவே இருக்கிறது. ஒரு சிலருக்கு நீண்ட நேரம் பிரசவ வலி ஏற்பட்டு தவித்துப் போய்விடுவார்கள். மேலும் நார்மல் டெலிவெரியில் குழந்தை பிறக்க தாமதமாகத் தாமதமாக, வேறு சில பிரச்சனைகளும் உண்டாகும். இதை தவிர்ப்பதற்கு சிசேரியன் செய்வதே பரவாயில்லை என்று தற்பொழுது பல பெண்களும் விரும்புகிறார்கள்.

Read More l ஆலியா பட் கர்ப்ப காலத்தின் போது பின்பற்றிய டயட்.!

மருத்துவர்கள் எப்போது சிசேரியன் செய்ய வேண்டும் என்று முடிவெடுப்பார்கள்?

பெண்களின் விருப்பம் என்பது ஒரு பக்கம் இருக்கும் பொழுது மருத்துவர்கள் இதில் என்ன நினைக்கிறார்கள் என்பது மிக மிக முக்கியம். கர்ப்ப காலத்தில், பிரசவ நேரத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், நார்மல் டெலிவரி செய்வது ஆபத்தாக இருந்தால், அதற்கு எந்த மகப்பேறு மருத்துவரும் முன்வர மாட்டார்கள். உடனடியாக சிசேரியன் செய்து குழந்தையை பிரசவித்து விடலாம் என்று தான் முடிவெடுப்பார்கள்.

கீழ்கண்ட காரணங்களும் இவற்றுள் அடங்கும்..

* பிரசவ நேரத்தில் நஞ்சுக்கொடி குழந்தையின் கழுத்தை சுற்றி இருப்பது

* குழந்தை நார்மல் டெலிவரியில் வெளி வர முடியாத நிலையில் இல்லாமல் இருப்பது

* குழந்தையின் கால்கள் முதலில் வெளியே வருவது

* பிரசவ நேரத்தில் குழந்தைக்கு மூச்சுத்திணறல்

* பிரசவ நேரத்தில் அதிக இரத்த அழுத்தம்

* இரட்டை குழந்தைகள் டெலிவரி

நார்மல் டெலிவரிக்கு வாய்ப்பிருந்தும் வேண்டாம் என்று மறுக்கும் பெண்கள் :

நார்மல் டெலிவரிக்கு வாய்ப்பிருந்தும், பெண்கள் தனக்கு சிசேரியன் தான் வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் பொழுது மருத்துவர்கள் அதை ஏற்றுக் கொள்கிறார்கள். ஒரு பெண்ணுக்கு, எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்ற சாத்தியம் 37 இல் இருந்து 40 வாரங்கள் வரை இருக்கும் . தங்களுக்கு சவுகரியமான ஒரு தேதி மற்றும் நேரத்தை கொடுத்துவிட்டால் அந்த நேரத்திற்கு சிசேரியன் செய்வதற்கு மருத்துவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்று பிரபல மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

பிரசவ காலத்தில் ஏற்படுத்தக்கூடிய ஏற்படக்கூடிய பதற்றம் மட்டும் வலியை தாங்கிக் கொள்ள முடியுமா என்ற பயம் தான் பெண்களை சிசேரியன் செய்து கொள்ளலாம் என்ற முடிவை எடுக்க வைக்கிறது என்று பெரும்பாலான மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். அது மட்டுமல்லாமல் ஒரு குறிப்பிட்ட நாள், நல்ல நாள் மற்றும் நேரம் பார்த்து அந்த தேதியில் பிரசவம் வைத்துக் கொள்வது நன்றாக இருக்கும். சுகப்பிரசவம் என்றால் எந்த தேதியில் எந்த நேரத்தில் குழந்தை பிறக்கும் என்பது தெரியாது என்ற காரணத்தாலும் சிசேரியனை பெண்கள் தேர்வு செய்கிறார்கள்.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: C- Section, Pregnancy care