இந்தியர்கள் கொரோனா பாதிக்கப்பட்டால் மருத்துவமனை செல்ல அச்சப்படுகின்றனர் - ஆய்வு
77% இந்தியர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கொரோனா பாதிப்பாளர்களை சந்தித்துக்கொண்டு தான் இருக்கின்றனர்.

கோப்புப் படம்
- News18 Tamil
- Last Updated: September 11, 2020, 12:53 PM IST
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பதும் அதேசமயம் குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரிகரித்து வருகிறது. நேற்று வரை இந்திய அளவில் 4.47 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 3.47 மில்லியன் மக்கள் குணமடைந்துள்ளனர்.
இதற்கிடையே இந்தியாவில் கொரோனா குறித்து எடுக்கப்பட்ட ஆய்வு வெளியாகியுள்ளது. அதில் அதிகபட்சம் பேர் தன்னால் குடும்பத்தினருக்கும் கொரோனா வரும் என்கிற அச்சமும், மருத்துவமனை செல்வதற்கும் அச்சமாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
அதாவது இந்திய குடிமக்களிடம் முதல் கேள்வியாக இந்த கொரோனா நெருக்கடியில் நீங்கள் அதிகம் எதை நினைத்து பயப்படுகிறீர்கள் என்று கேட்கப்பட்டுள்ளது.
அதில் ஐந்து சதவீதம் மக்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கும் நிலையை நினைத்து கவலைப்படுவதாகக் கூறியுள்ளனர்.
29 சதவீதம் குடும்பத்தினருக்கு அல்லது உடன் பணியாற்றுவோருக்கு கொரோனாவை பரப்பிவிடுவோமோ என அஞ்சுவதாக கூறியுள்ளனர். 22% பேர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதை நினைத்தால் பயமாக இருப்பதாகவும் 8% பேர் நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதை நினைத்தும் 6% பேர் லோக்கல் அதிகாரிகளை சமாளிப்பதை நினைத்தும் பயம் கொள்வதாகக் கூறியுள்ளனர்.
70% பேர் குடும்பத்தை பார்த்துக்கொள்ள வருமானம் குறைந்துள்ளதை நினைத்தும் பயம் கொண்டுள்ளனர். 13% பேர் எதை நினைத்தும் பயமில்லை என்று கூறியுள்ளனர்.
தாமதமாகிறதா கோவிஷீல்டு சோதனைகள்?
இதை ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது இதியர்கள், குடும்பத்தினருக்கு அல்லது உடன் பணியாற்றுவோருக்கு கொரோனாவை பரப்பிவிடுவோமோ என அஞ்சுவோரின் எண்ணிக்கையும் , மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதை நினைத்தால் பயமாக உள்ளது என்று கூறுவோரின் எண்ணிக்கையும்தான் அதிகமாக இருப்பதாகக் கூறியுள்ளது.
இரண்டாவது கேள்வியாக உறவுகள், நண்பர்கள், உடன் பணியாற்றுவோர், பக்கத்து வீட்டர், வியாபார நண்பர்கள் என உங்கள் சுற்றத்தாரிடம் இந்த கொரோனாவின் தாக்கம் எவ்வாறு உள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளது.
5 மாவட்டங்களில் கொரோனா தொற்று உச்சம் தொடும் - தலைமை செயலாளர் சண்முகம்
அதற்கு 31% பேர் 6 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தெரிந்தவர்களே என்றும், 34% பேர் 2-5 பேரையாவது பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதாகவும், 12% பேர் ஒருவராவது கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என தெரிந்தும் பேசுவதாக கூறுகின்றனர். 20 சதவீதம் பேர் பழகுவோர் யாரிடமும் கொரோனா இல்லை என நம்புவதாக கூறியுள்ளனர்.

இதிலிருந்து 77% இந்தியர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கொரோனா பாதிப்பாளர்களை சந்தித்துக்கொண்டு தான் இருக்கின்றனர் என்பது தெரிகிறது.
அதேபோல் உங்கள் சுற்றத்தார்களில் யாரேனும் அறிகுறிகள் இருந்தும் பரிசோதனை செய்துகொள்ளாமல் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சைப் பெற்றுள்ளார்களா..? என்று கேள்வி எழுப்பியதற்கு 14 % 10 மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்றும், 10% பேர் 6-10 பேர் என்றும் 14 % பேர் 2-5 பேர் என்றும் 10% பேர் ஒருவர் என்றும் 52% பேர் சரியாகத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர்.
இருப்பினும் இதன் மூலம் பல பேர் பரிசோதனை செய்து கொள்ள பயப்படுவதாகவும் அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுவதிலும் பயம் கொள்வதாகத் தெளிவாகத் தெரிகிறது என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.