முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இளைஞர்களுக்கு பக்கவாதம் வர என்ன காரணம்..? அறிகுறிகளும்.. தவிர்க்கும் வழிகளும்..!

இளைஞர்களுக்கு பக்கவாதம் வர என்ன காரணம்..? அறிகுறிகளும்.. தவிர்க்கும் வழிகளும்..!

பக்கவாதம் வருவதற்கான காரணம்.

பக்கவாதம் வருவதற்கான காரணம்.

ஒவ்வொரு ஆண்டுதோறும் ஸ்ட்ரோக் மூலமாக 13 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் மற்றும் அவர்களில் 5.5 மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் 40 நொடிகளுக்கு ஒருவர் ஸ்ட்ரோக் மூலமாக உயிரிழக்கிறார்

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil |

ஹார்ட் அட்டாக், பக்கவாதம் போன்ற விஷயங்களை நீங்கள் கேள்வி பட்டிருப்பீர்கள். நெருங்கிய உறவினர்கள் இதனால் பாதிக்கப்படுவதையும், சிலர் கண் முன்னே பலியானதையும் பார்த்திருப்பீர்கள். முன்பெல்லாம் ஹார்ட் அட்டாக் மற்றும் ஸ்ட்ரோக் என்றால், அவை வயதானவர்களை பாதிக்கக் கூடிய நோய்கள் என்றும், கொலஸ்ட்ரால், நீரிழிவு போன்ற பிரச்சினைகளை கொண்டிருப்பவர்கள், புகைப்பழக்கம் உடையவர்களை தாக்கும் என்றும் கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால், அதிர்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால் இப்போதெல்லாம் 25 வயதுக்கு உட்பட்ட நபர்களும் கூட இதனால் பாதிக்கப்படுகின்றனர். உடல் இயக்கமின்றி ஒரே இடத்தில் முடங்கி கிடப்பது, வாழ்வியல் மாற்றங்கள் போன்றவை தான் அண்மைக் காலங்களில் இவை அதிகரித்ததற்கான காரணங்கள் ஆகும்.

இன்னும் அதிர்ச்சி தரக்கூடிய விஷயம் என்னவென்றால், உலகெங்கிலும் அதிகமான மக்கள் உயிரிழக்க காரணமான நோய்களில் பக்கவாதம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. தோராயமாக ஒவ்வொரு ஆண்டுதோறும் ஸ்ட்ரோக் மூலமாக 13 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் மற்றும் அவர்களில் 5.5 மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் 40 நொடிகளுக்கு ஒருவர் ஸ்ட்ரோக் மூலமாக உயிரிழக்கிறார் என்ற செய்தி மிகுந்த எச்சரிக்கையை தருவதாக அமைந்துள்ளது.

பக்கவாதம் என்றால் என்ன? 

மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டால் அதன் காரணமாக, மூளைக்கு தேவையான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் சென்றடைவதும் தடைபடும். போதுமான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்காத நிலையில் மூளையின் செல்கள் உயிரிழக்க தொடங்கும். இதன் காரணமாக மூளை மற்றும் உடல் பாகங்களுக்கு நீண்ட கால செயலிழப்பு ஏற்படலாம் மற்றும் சிலருக்கு உயிரிழப்பு கூட நேரிடும்.

Also Read : உங்க இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த பழங்களை சாப்பிடவும்!

அண்மையில் இந்திய மருத்துவ கவுன்சில் நடத்திய ஆய்வில் ஒட்டுமொத்தமாக ஏற்படும் பல விதமான ஸ்ட்ரோக் பாதிப்புகளில் 10 முதல் 15 சதவீத பாதிப்புகள் இளம் வயதினருக்கு ஏற்படுகிறது என்றும், மருத்துவமனையில் சேர்க்கப்படும் மக்களில் 5இல் ஒரு பங்கு மக்கள் இதுபோன்றவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ட்ரோக் பாதிப்பில் இருந்து குணப்படுத்தினாலும் கூட, இளம் வயதினருக்கு எஞ்சியுள்ள நாட்கள் சிக்கலானதாகவே இருக்கிறது. வெகு மக்களை பாதிக்கக் கூடியது ஐஸ்மிக் பக்கவாத பாதிப்பு ஆகும். இது மூளைக்குச் செல்லக் கூடிய ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும்.

Also Read :  குளிர்காலத்தில் அதிக அளவில் மாரடைப்பு வர காரணம் என்ன? பாதிப்பை குறைக்க என்ன செய்ய வேண்டும்?

அறிகுறிகள் : 

ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படக் கூடியவர்களுக்கு திடீர் மனக் குழப்பம் ஏற்படும். முகம் கோணலாக திரும்பும், கைகள் பலமிழந்து காணப்படும். ஒரு கண் அல்லது இரண்டு கண் பார்வையிலும் சிரமம் ஏற்படலாம். நடக்க முடியாத அளவுக்கு சிரமம், உடல் சோர்வு, திடீரென்று அதிகமான தலைவலி போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

காரணம் என்ன : 

ஒரே இடத்தில் முடங்கிக் கிடக்கும் வாழ்க்கை முறை தான் ஸ்ட்ரோக் பாதிப்பிற்கான முதன்மையான காரணம் ஆகும். புகைப்பிடித்தல், மது அருந்துதல், நீரிழிவு நோய், ஹைப்பர்டென்சன் போன்றவையும், ஏற்கனவே, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்ப பின்னணி உடையவராக இருப்பதும் இதன் அபாயங்களை அதிகரிக்கச் செய்கிறது.

தவிர்ப்பதற்கான வழிமுறைகள் : 

ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், உப்பு போன்றவற்றை குறைக்க வேண்டும். கொலஸ்ட்ரால், நீரிழிவு, ஹைப்பர்டென்சன் போன்றவை கட்டுக்குள் இருக்க வேண்டும். உடல் எடையை குறைக்கவும், ரத்த அழுத்தம் சீரான அளவில் இருக்கவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். புகை, மது போன்ற பழக்கங்களை தவிர்க்க வேண்டும்.

நேரம் பொன்னானது : 

ஸ்டிரோக் பாதிப்பை கண்டறிவது மற்றும் அதற்கு சிகிச்சை அளிப்பதில் ஒவ்வொரு நிமிடமும் பொன்னான நேரம் ஆகும். ஒரு சில நிமிட தாமதமும் கூட உயிர்பலியை ஏற்படுத்தக் கூடும். ஸ்ட்ரோக் தொடர்பான அறிகுறிகள் ஏற்பட்டால் அருகாமையில் இருப்பவர்களின் உதவியுடன் உடனடியாக மருத்துவனையில் சேர்க்கப்பட வேண்டும்.

First published:

Tags: Cholesterol, Heart disease, Stroke