ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சர்க்கரை நோயாளிகள் உடற்பயிற்சி செய்ய சரியான நேரம் எது..? இதனால் கிடைக்கும் கூடுதல் நன்மைகள் என்ன..?

சர்க்கரை நோயாளிகள் உடற்பயிற்சி செய்ய சரியான நேரம் எது..? இதனால் கிடைக்கும் கூடுதல் நன்மைகள் என்ன..?

உடற்பயிற்சி நன்மைகள்

உடற்பயிற்சி நன்மைகள்

உணவுக்குப் பின் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது சர்க்கரை அளவைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், இதனை இதய நோயாளிகள் செய்யக்கூடாது என்றும், நீரழிவு நோயாளிகளுக்கு இன்சுலினை கட்டுப்படுத்துவதில் உதவக்கூடும் என்றும் பரிந்துரைத்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் படி, நீரழிவு நோயாளிகள் மதியம் மற்றும் மாலை வேளைகளில் உடற்பயிற்சி செய்வது இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஃபிட்னஸ் பிரியர்கள் முதல் சர்க்கரை நோயாளிகள் வரை அனைவருக்கும் காலை வேளையில் வாக்கிங் செல்வது, உடற்பயிற்சி செய்ய ஜிம்மிங்கிற்கு செல்வது மிகவும் பிடித்தமானதாக இருக்கும். நம்மில் பலருக்கும் கூட காலையில் படுக்கையை விட்டு எழுந்ததுமே உடற்பயிற்சி செய்வது தான் ஆரோக்கியத்திற்கு நல்லது என்ற எண்ணம் உள்ளது. ஆனால் நெதர்லாந்தில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்று, காலை வேளையை விட மதியம் அல்லது மாலை வேளையில் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியத்திற்கும் நல்லது என்பதை கண்டறிந்துள்ளது.

குறிப்பாக டைப் 2 நீரழிவு நோயாளிகளின் உடலில் இன்சுலின் சுரப்பை மேம்படுத்த உதவும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். டயபெடோலாஜியா என்ற இதழில் கடந்த 1ம் தேதி வெளியான ஆய்வு முடிவில், மதியம் மற்றும் மாலை வேளைக்கு இடையே உடற்பயிற்சி செய்வது, காலையில் மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகளை விட இன்சுலின் எதிர்ப்பைக் கணிசமாகக் குறைக்க உதவும் என கண்டறிந்துள்ளது.

பல மணி நேரங்கள் உட்கார்ந்து கொண்டே பணியாற்றும் நபர்களின் உடலில் கல்லீரல் கொழுப்பு மற்றும் இன்சுலின் சுரப்பில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 56 வயதும், 26.2 பிஎம்ஐ கொண்ட 777 நபர்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்கள் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மிதமான பயிற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு 18 சதவீதமும், மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலான காலக்கட்டத்தில், மிதமான பயிற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு 25 சதவீதமும் இன்சுலின் எதிர்ப்புத் திறன் குறைவது கண்டறியப்பட்டுள்ளது.

Also Read : சத்தமில்லாமல் உங்கள் சிறுநீரகத்தை செயலிழக்க செய்யும் 7 பழக்கங்கள்!

மேக்ஸ் ஹெல்த்கேரின் நீரிழிவு மற்றும் நாளமில்லா சுரப்பி துறையின் தலைவரான அம்ப்ரிஷ் மித்தல் கூறுகையில் "நாள் முழுவதும் உட்கார்ந்து கொண்டே வேலை செய்யும் நபர்கள், காலையில் உடற்பயிற்சி செய்வது போதுமானதாக இருக்காது. ஒரு வாரத்திற்கு 180 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொண்டாலும் அது அவர்களுக்கு பலனாளிக்காது” என தெரிவித்துள்ளார்.

உணவுக்குப் பின் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது சர்க்கரை அளவைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், இதனை இதய நோயாளிகள் செய்யக்கூடாது என்றும், நீரழிவு நோயாளிகளுக்கு இன்சுலினை கட்டுப்படுத்துவதில் உதவக்கூடும் என்றும் பரிந்துரைத்துள்ளனர். இதய ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த காலையில் 40 முதல் 45 நிமிடங்கள் கடுமையான உடற்பயிற்சியைத் தொடர வேண்டியது அவசியம்.

நீரழிவு நோயாளிகள் உணவுக்குப் பிறகு 5 முதல் 10 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்வது இன்சுலின் சுரப்பில் ஏற்படும் மாற்றத்திற்கு உதவும் என்றாலும், இதயத்தை வலுப்படுத்த கூடுதலாக பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதய ஆரோக்கியத்திற்கு, விறுவிறுப்பான நடைபயிற்சி அல்லது இதயத் துடிப்பை உயர்த்தும் ஏரோபிக்ஸ் போன்ற எந்த ஏரோபிக் பயிற்சிகளும் நல்லது என ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Diabetes, Exercise