குழந்தைகளுக்கான பாக்கெட் உணவுகளில் கேடு விளைக்கும் அளவிற்கு சர்க்கரை உள்ளது: ஐநா எச்சரிக்கை

news18
Updated: July 20, 2019, 8:46 AM IST
குழந்தைகளுக்கான பாக்கெட் உணவுகளில் கேடு விளைக்கும் அளவிற்கு சர்க்கரை உள்ளது: ஐநா எச்சரிக்கை
news18
Updated: July 20, 2019, 8:46 AM IST
கடைகளில் குழந்தைகளுக்காக விற்கப்படும் இன்ஸ்டண்ட் உணவுப் பொட்டலங்களில் அதிக அளவிலான சர்க்கரை சேர்க்கப்படுவதாகவும், குறிப்பிட்டுள்ள பயன்பாட்டு மூலக்கூறுகள் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் ஐநா மன்றத்தின் உலக சுகாதார அமைப்பு ஆய்வு செய்ததில் கண்டுபிடித்துள்ளது.

அதுமட்டுமன்றி இவற்றை சரி செய்ய வரும் திங்கள் முதல் புதிய விதிமுறைகளை பட்டியலிட்டு மாற்றியமைக்கவுள்ளது.

உலக சுகாதார அமைப்பு கிட்டதட்ட 8000 பொருட்களை 500 கடைகளிலிருந்து எடுத்து ஆய்வு செய்துள்ளது.


பாதிக்கும் அதிகமான உணவுப் பொட்டலங்களை சோதனை செய்ததில் 30 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட கலோரிகள் இயற்கையாகவே சர்க்கரையையும் உள்ளடக்கியது என்பதும் சுவைக்காக சேர்க்கப்படும் இனிப்பு மூலக்கூறும் சர்க்கரை அல்லாத வேறொரு மூலக்கூறு சேர்க்கப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

உதாரணமாக அதில் பயன்படுத்தப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகள் இயற்கையாகவே சர்க்கரையைக் கொண்டது. இப்படி அதிக அளவிலான சர்க்கரை அவர்களின் உணவுப் பழக்கத்தில் தொடர்ந்தால் உடலுக்கு கேடு விளைவிக்கும் வகையிலான உபாதைகள், நோய்கள் வரும் என்று எச்சரிக்கிறது. அதாவது எடை அதிகரித்தல், பற்சொத்தை போன்ற ஆபத்தை விளைவிக்கும் நோய்கள் வரும் என்று எச்சரிக்கிறது உலக சுகாதார அமைப்பு.

 

Loading...

யூரோப்பின் உலக சுகாதாரத் துறைத் தலைவர் ஸுஸன்னா ஜேக்கப் “ குழந்தைப்பருவத்தில் நாம் அளிக்கும் ஊட்டச்சத்துகள்தான் அவர்களின் வளர்ந்த பருவத்தில் கிடைக்கக் கூடைய ஆரோக்கியம் எனவே அவர்களின் உணவு பழக்கத்தில் சமரசம் செய்துகொள்ளாமல் ஆரோக்கியமான உணவை ஊட்டுங்கள் “ என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் ”குறைந்தது ஆறு மாதம் வரை கட்டாயம் தாய் பாலைத் தவிர வேறெந்த உணவுகளும் குழந்தைக்கு அளிக்கக் கூடாது. அதுமட்டுமே அவர்களுக்கு ஆரோக்கியம். அதேபோல் கட்டாயம் இரண்டு வயது வரை வீட்டில் சமைத்த ஊட்டச்சத்து மிக்க உணவுகளை கொடுங்கள்” என்றுக் கூறியுள்ளார்.
First published: July 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...