• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • மாரடைப்பை விட அதிக ஆபத்தை ஏற்படுத்தும் 'செப்சிஸ்' தொற்றுநோய்.. செப்சிஸ் தொற்றுநோய் என்றால் என்ன ?

மாரடைப்பை விட அதிக ஆபத்தை ஏற்படுத்தும் 'செப்சிஸ்' தொற்றுநோய்.. செப்சிஸ் தொற்றுநோய் என்றால் என்ன ?

காட்சி படம்

காட்சி படம்

செப்சிஸ் புற்றுநோய் அல்லது மாரடைப்பை விட 2050 க்குள் அதிகமான மக்களைக் கொன்றுவிடும்.

  • Share this:
நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பகுத்தறிவற்ற பயன்பாட்டினால் 2050 ஆம் ஆண்டிற்குள், புற்றுநோய் மற்றும் மாரடைப்பு போன்ற பிரச்சனைகளை விட செப்சிஸ் நோய் தொற்று உயிருக்கு ஆபத்தான சிக்கலாக மாறும் என்று மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, செப்சிஸ் என்பது நோய்த்தொற்றுக்கான ஒரு நோய்க்குறி ஆகும். இது உலகெங்கிலும் பல தொற்று நோய்களால் பாதிக்கப்படுவோர் இறுதியில் உறுப்பு செயலிழப்பால் இறப்பதற்கான பொதுவான பாதையாக செயல்படுகிறது.

இது தொடர்பாக லான்செட் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், 2017 ஆம் ஆண்டில் உலகளவில் 48.9 மில்லியன் மக்கள் செப்சிஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும் அதில் செப்சிஸ் தொடர்பான இறப்புகள் 11 மில்லியனாக இருந்தன. இது உலகளாவிய இறப்புகளில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் ஆகும். குறிப்பாக இந்த தொற்றால் அதிகம் பாதித்துள்ள நாடு இந்தியா என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் உட்பட மற்ற தெற்காசிய நாடுகளை விட, தொற்றுநோயால் உயிருக்கு ஆபத்தான உறுப்பு செயலிழப்பு பாதிப்பை ஏற்படுத்தும் செப்சிஸால் இந்தியா அதிக இறப்பு விகிதத்தைக் பதிவு செய்துள்ளதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இதுபற்றி, யதின் மேத்தா, குருகிராமில் உள்ள கிரிடிகல் கேர் மற்றும் மயக்க மருந்து நிறுவனத்தின் தலைவர் கூறியதாவது, "செப்சிஸ் புற்றுநோய் அல்லது மாரடைப்பை விட 2050 க்குள் அதிகமான மக்களைக் கொன்றுவிடும். இது மிகப்பெரிய கொலையாளி. இந்தியா போன்ற வளரும் நாடுகளில், ஆண்டிபயாடிக்குகளின் அதிகப்படியான உபயோகத்தால் பல எதிர்ப்பு சக்தி மருந்து அநேகமாக அதிக இறப்பை ஏற்படுத்தும்" என்று கூறினார். ஏனெனில் டெங்கு, மலேரியா, யுடிஐ அல்லது வயிற்றுப்போக்கு போன்ற பல பொதுவான நோய்களால் செப்சிஸ் ஏற்படலாம். ஒருங்கிணைந்த சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு (IHW) கவுன்சில் ஏற்பாடு செய்த செப்சிஸ் உச்சி மாநாடு இந்தியா 2021-ல் மேத்தா பேசினார்.

அதில், நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாட்டைத் தவிர, நிபுணர்களில் விழிப்புணர்வு இல்லாமை மற்றும் ஆரம்பகால நோயறிதல் ஆகியவற்றைக் குறித்து விவரித்தார். செப்சிஸ் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கல்வியை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் அவர் கூறியதாவது, "மருத்துவத்தில் முன்னேற்றம் இருந்தபோதிலும், மூன்றாம் நிலை மருத்துவமனைகள் 50 முதல் 60 சதவிகித நோயாளிகளுக்கு செப்சிஸ் மற்றும் செப்டிக் ஷாக் ஏற்படுவதைக் கண்டறிந்துள்ளன. இதனால் இதுபற்றிய விழிப்புணர்வு மற்றும் ஆரம்பகால நோயறிதல் தேவை. மேலும் நோயாளிகளில் தேவையற்ற ஆண்டிபயாடிக் சிகிச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும்," என்று கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து முன்னாள் மத்திய சுகாதாரச் செயலாளர் லவ் வர்மா கூறியதாவது, "செப்சிஸுக்கு தகுதியான அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இது கொள்கை கண்ணோட்டத்தில் மிகவும் பின்தங்கியிருக்கிறது. நாம் நிலையான இயக்க நடைமுறைகளை கொண்டிருக்க வேண்டும் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) ஆராய்ச்சிகளில் செப்சிஸ் குறித்த பாதிப்புகளை ஆராய வேண்டும். தொடர்ந்து மருத்துவக் கல்வி (CME), அது கொள்கை வகுப்பாளர்களால் முன்னுரிமை பெறப்பட வேண்டும், "என்று தெரிவித்துள்ளார்.

Also Read : டீனேஜர்ஸ் இடையே அதிகமாக காணப்படும் தொற்று இதுதான்.. எச்சரிக்கும் நிபுணர்கள்

புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களின் மரணத்திற்கு இது ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும், செப்சிஸ் வயதானவர்கள், தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ள நோயாளிகள் மற்றும் எச்.ஐ.வி/எய்ட்ஸ், கல்லீரல் சிரோசிஸ், புற்றுநோய், சிறுநீரக நோய் மற்றும் தன்னுடல் தாக்க நோய்களுடன் வாழும் மக்களையும் பாதிக்கிறது என்று கூறப்படுகிறது. தற்போதைய கோவிட் -19 தொற்றுநோய்களின் போது ஒழுங்குபடுத்தப்படாத நோயெதிர்ப்பு மறுமொழியால் ஏற்படும் பெரும்பாலான இறப்புகளில் இது முக்கிய பங்கு வகித்துள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read : நீங்கள் சரியாக தூங்கவில்லையெனில் என்னென்ன பிரச்னைகளை சந்திப்பீர்கள்..?

இதுபற்றி மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாவிட்டால், செப்சிஸ் ஒரு புதிராகவே இருக்கும். சமீபத்தில், இந்திய குழந்தை சங்கம் AAA - 'ஆண்டிபயாடிக் துஷ்பிரயோகத்தைத் தவிர்க்கவும்' என்ற பிரச்சாரத்தை ஏற்றுக்கொண்டது. ஏனெனில் இந்தியாவில் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அதிகமாக பரிந்துரைக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட 54 சதவீதம் இந்தியாவில் பிறந்த குழந்தைகள் ஆப்பிரிக்காவை விட மோசமான செப்சிஸால் இறக்கின்றன. இதனை தடுக்க மூன்று முனை அணுகுமுறை தேவை. அவை முதன்மை தடுப்பு, இரண்டாம் நிலை தடுப்பு மற்றும் கல்வி மற்றும் விழிப்புணர்வு ஆகியவை ஆகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: