முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இந்தியாவில் அசைவம் சாப்பிடும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - ஆய்வில் தகவல்..!

இந்தியாவில் அசைவம் சாப்பிடும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - ஆய்வில் தகவல்..!

இந்தியாவில் அசைவம் சாப்பிடும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் அசைவம் சாப்பிடும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆண்களில் 83.4 சதவீதம் பேரும், பெண்களில் 70.6 சதவீதம் பேரும் அசைவம் சாப்பிடுகின்றனர். தினசரி, வாரம் ஒருமுறை அல்லது எப்போதாவது என்ற கணக்கில் அசைவம் எடுத்துக் கொள்கின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சைவம் அல்லது அசைவம் இரண்டில் உடல் நலனுக்கு எது உகந்தது என்று அவ்வபோது விவாதங்கள் நடைபெறுவது வழக்கம். அதே சமயம், முந்தைய காலங்களைக் காட்டிலும் தற்போது அசைவம் சாப்பிடும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக 2015 - 16 காலகட்டம் முதல் 2019 - 2021 வரையிலான 6 ஆண்டுகளில் அசைவம் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை ஏற்றம் கண்டுள்ளது. தேசிய குடும்ப நல ஆய்வு நடத்தப்பட்டதில் இந்த விவரங்கள் தெரிய வந்திருக்கின்றன.

அசைவம் சாப்பிடாதவர்களின் எண்ணிக்கை 16.6 சதவீதம் மட்டுமே

கடந்த 2019 - 21 ஆண்டில் நாடெங்கிலும் சைவம் மற்றும் அசைவம் சாப்பிடுவது குறித்து 15 முதல் 45 வயது வரையிலான நபர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 16.6 சதவீதம் பேர் மட்டுமே மீன், கோழி அல்லது வேறெந்த இறைச்சியும் சாப்பிட்டதில்லை என்று தெரிய வந்துள்ளது. 2015 - 16 ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் சைவம் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை 21.6 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது அதில் 5 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அசைவத்திற்கு நோ சொல்லும் பெண்கள்

2015 - 16 காலகட்டத்தில் 15 முதல் 45 வயது வரையிலான பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டபோது 29.9 சதவீதம் பேர் அசைவம் சாப்பிடுவதில்லை என தெரிவித்தனர். தற்போதைய ஆய்விலும் இந்த எண்ணிக்கையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. அதாவது, சைவம் சாப்பிடுவதாகக் கூறிய பெண்கள் அதை அப்படியே தொடருகின்றனர்.

எவ்வளவு பேர் அசைவம் சாப்பிடுகின்றனர்

ஆண்களில் 83.4 சதவீதம் பேரும், பெண்களில் 70.6 சதவீதம் பேரும் அசைவம் சாப்பிடுகின்றனர். தினசரி, வாரம் ஒருமுறை அல்லது எப்போதாவது என்ற கணக்கில் அசைவம் எடுத்துக் கொள்கின்றனர்.

இந்த உணவுகள் மீந்துபோனாலும் மறுநாள் சூடாக்கி சாப்பிடாதீங்க..! உங்களுக்கே விஷமாக மாறும்...

அதிக அசைவ பிரியர்களை கொண்ட மாநிலங்கள்

எந்தெந்த மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களில் மக்கள் அதிகமாக அசைவம் சாப்பிடுகிறார்கள் என்ற தகவல் திரப்பட்டது. இதில் லட்சத்தீவு முதலிடத்தில் உள்ளது. அங்கு 98.4 சதவீத மக்கள் அசைவம் உண்ணுகின்றனர். இதற்கு அடுத்தபடியாக அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் (96.1%), கோவா (93.8%), கேரளா (90.1%), புதுச்சேரி (89.9%) என்ற எண்ணிக்கையில் அசைவப் பிரியர்கள் உள்ளனர்.

நாட்டிலேயே மிக குறைந்தபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் 14.1 சதவீதம் பேர் மட்டுமே அசைவம் சாப்பிடுகின்றனர். இதேபோல ஹரியாணா, பஞ்சாப், குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அசைவப் பிரியர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது.

மத அடிப்படையில் கிறிஸ்த்தவர்கள் முதலிடம்

அசைவ பிரியர்களை அவர்களது மதம் சார்ந்து கணக்கிடும்போது முதலிடத்தில் கிறிஸ்த்தவர்கள் இருக்கின்றனர். 80 சதவீத கிறிஸ்த்தவ ஆண்களும், 78 சதவீத கிறிஸ்த்தவ பெண்களும் அசைவம் சாப்பிடுகின்றனர். ஹிந்து மதத்தில் ஆண் - 52.5%, பெண்கள் - 40.7 % மற்றும் முஸ்லிம் மதத்தில் ஆண்கள் - 79.5%, பெண்கள் - 70.2% என்ற எண்ணிக்கையில் அசைவப் பிரியர்கள் உள்ளனர்.

40 வயதை கடந்த அம்மாக்கள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!

முட்டைக்கு முன்னுரிமை

அசைவப் பிரியர்கள் மீன், கோழி அல்லது இறைச்சி போன்றவற்றைக் காட்டிலும் முட்டை சாப்பிடுவதற்கு முன்னுரிமை அளிக்கின்றனர். அதே சமயம், ஆர்டிஃபிஷியல் கூல்டிரிங்ஸ் அருந்தும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதேபோல பச்சைக் காய்கறிகள், கீரைகள், தயிர் போன்ற சத்தான உணவுகளை எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

இரண்டு கட்டங்களாக ஆய்வு

தேசிய குடும்ப நல ஆய்வு இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. 2019 ஜூன் 19ஆம் தேதி முதல் 2021 ஏப்ரல் 30ஆம் தேதி வரையில் ஆய்வு நடைபெற்றது. வழக்கமாக ஓராண்டில் ஆய்வு நிறைவுபெறும் என்றாலும், கொரோனா பெருந்தொற்று காலம் காரணமாக ஆய்வு தாமதமாக நிறைவடைந்துள்ளது.

First published:

Tags: Non Vegetarian