ஆரம்பமானது பருவமழை காலம்: டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?

அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, கண் வலி, தசை, எலும்பு மற்றும் மூட்டு வலி, குமட்டல், வாந்தி, வீங்கிய சுரப்பிகள், தோல் வெடிப்பு ஆகியவை டெங்கு காய்ச்சலுக்கான பொதுவான அறிகுறிகள் ஆகும்.

ஆரம்பமானது பருவமழை காலம்: டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?
டெங்கு
  • Share this:
டெங்கு காய்ச்சல் பாதிப்பு எப்போதுமே மழைக்காலத்தின் முடிவில் ஏற்படத் தொடங்குகிறது. டெங்கு காய்ச்சல் என்பது கொசுக்களால் பரவும் ஒரு வைரஸ் நோயாகும். இது ஏடிஸ் எனப்படும் கொசுக்கள் நம்மை கடிப்பதால் பரவுகிறது. டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான அல்லது அறிகுறிகளே இல்லாமல் இருக்கும். இந்த நிலையில், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (சி.டி.சி) கூற்றுப்படி, டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 75% பேர் எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை. அதே நேரத்தில் 20% பேருக்கு லேசான அறிகுறிகள் இருந்தன. 5 சதவீதம் பேருக்கு கடுமையான அறிகுறிகளை உருவாக்கக்கூடும். இது உயிருக்கே ஆபத்தானது என தெரிவித்துள்ளது.

டெங்கு காய்ச்சலின் பொதுவான அறிகுறிகள்:

அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, கண் வலி, தசை, எலும்பு மற்றும் மூட்டு வலி, குமட்டல், வாந்தி, வீங்கிய சுரப்பிகள், தோல் வெடிப்பு ஆகியவை டெங்கு காய்ச்சலுக்கான பொதுவான அறிகுறிகள் ஆகும். மேலும், ஆரம்பக்காலத்திலேயே இந்த நோய்த் தொற்றினை கண்டறிவதால் நுரையீரல், கல்லீரல் மற்றும் இதய பாதிப்பு உள்ளிட்ட சிக்கல்களைக் குறைக்க முடியும். மேலும், இறப்பு விகிதங்களைக் குறைக்க உதவும்.




டெங்கு காய்ச்சல் தொற்றுவதைத் தடுப்பதற்கான வழிகள்:

1. கொசு வலை: கொசுக்களின் கடிகளைத் தவிர்ப்பதற்கு தூங்கும் பகுதியில் கொசு வலைகளைப் பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.2. கொசு விரட்டும் களிம்பு(Ointment): நம் உடலின் வெளிப்படும் பகுதியில் கொசு விரட்டி களிம்பினை பயன்படுத்தலாம். ஆனால் உடலில் காயமடைந்த அல்லது வெட்டுப்பட்ட பகுதியில் களிம்பு தடவுவதை தவிர்க்க வேண்டும்.

உங்களுக்கு இரவில் அடிக்கடி நெஞ்சு எரிச்சல் வருகிறதா..? அதற்கு இதுதான் காரணம்

3. முழு ஸ்லீவ் ஆடை: கொசு கடிப்பதை தடுக்க உங்கள் முழு உடலையும் மறைக்கும் வகையில் முழு ஸ்லீவ் சட்டை மற்றும் நீண்ட பேன்ட்டை அணிந்து கொள்ளலாம்.

4. சுத்தமான சூழல்: ஆபத்தை விளைவிக்கும் கொசுக்கள் தேங்கிய அல்லது கழிவு நீர்த்தேக்கங்களில் உருவாகின்றன. அதனை தடுக்க சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பது ஒரு முக்கியமான வழியாகும். அவற்றின் இனப்பெருக்கத்தை நிறுத்த வீட்டைச் சுற்றியுள்ள அதிகப்படியான மற்றும் தேங்கி நிற்கும் தண்ணீரை சுத்தம் செய்யுங்கள்.



5. சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு கதவுகளை மூடுதல்: மாலை நேரத்தின் போது கொசுக்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் என்பதால் சூரிய அஸ்தமனத்திற்கு முன் ஜன்னல் திரைகள், கதவுகளை மூடுவதன் மூலம் உங்கள் வீட்டில் கொசுக்கள் நுழையாமல் பார்த்துக்கொள்ள முடியும்.

6.வெற்றுப் பானைகளையும் கொள்கலனையும் சரிபார்த்து சுத்தம் செய்யுங்கள்: கொசுக்களின் இனப்பெருக்கத்தைத் தடுக்க மற்றும் நீர் தேகத்தை தவிர்ப்பதற்காக பானைகள், கிண்ணம் அல்லது வாளியை எப்போதும் காலியாக வைத்து சுத்தம் செய்யுங்கள்.

உடல் எடையைக் குறைக்க மட்டுமல்ல.. வெதுவெதுப்பான நீர் குடிப்பதால் கிடைக்கும் பிற பலன்களை பற்றி தெரியுமா?

7. கூலர் மற்றும் குப்பைத்தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும்: வீட்டில் உள்ள கூலர் மற்றும் குப்பைத்தொட்டிகளை சுத்தம் செய்து தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அதனை தேவையற்ற பூச்சிகளிடமிருந்து விலக்கி வையுங்கள்.

8. லைட் கற்பூரம், கொசு விரட்டும் தூபக் குச்சிகள் அல்லது இயந்திரங்கள்: கற்பூரம் அல்லது கொசு விரட்டும் தூபக் குச்சிகளை ஒளிரச் செய்வதன் மூலமாகவோ, மின் இயந்திரங்களை இயக்குவதன் மூலமாகவோ .வீட்டிலிருந்து கொசுக்களை விரட்டலாம்.
First published: October 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading