இந்தியக் கலாசாரத்தில் என்றென்றும் பிரிக்க முடியாத ஒரு மரம் வேம்பு ஆகும். குறிப்பாக, தமிழர்களின் மரபுசார் சொத்து என்று கூட இதைக் குறிப்பிடலாம். ஆன்மீக நம்பிக்கை ரீதியாகவும் சரி அல்லது சித்த, ஆயுர்வேத மருத்துவ ரீதியாகவும் சரி வேம்பு என்பது நம் வாழ்வில் இரண்டறக் கலந்துள்ளது.
இதில் உள்ள ஆண்டி செப்டிக் மற்றும் ஆண்டி வைரல் குணாதிசயங்கள் ஆகியவை உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள புண்களை குணப்படுத்துவதற்கு உதவியாக இருக்கின்றன. இது மட்டுமல்லாமல் சளி, ஜலதோஷம், வயிற்று தொற்று போன்ற உடல் நல பாதிப்புகளுக்கும் இது நல்ல தீர்வை தருகிறது.
பொதுவாக மழைக்காலம் என்றாலே, அதனுடன் சேர்த்து பல விதமான நோய்களும் அணிவகுத்து நிற்கும். இத்தகைய சூழலில், நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கு நாம் அதிகம் எடுத்துக் கொள்வது காய்கறிகள் மற்றும் பருவகால பழங்களைத் தான். அதேபோல, வேம்பு டீ எடுத்துக் கொள்வதும் பல்வேறு பலன்களை தரும்.
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது
வேப்பிலையில் ஆண்டி ஆக்ஸிடண்ட், ஆண்டி வைரல், ஆண்டி செப்டிக் போன்ற தன்மைகள் நிறைந்துள்ளன. இது நம் உடலில் ஏற்படக் கூடிய தொற்றுகளை தடுத்து, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.
வயிறு நலன் மேம்படும்
வேப்பிலையில் நார்ச்சத்து மிகுதியாக உள்ளது. தினசரி நாம் வேம்பு டீ எடுத்துக் கொண்டால் செரிமானம் அதிகரிக்கும். இது மட்டுமல்லாமல் குடலில் உள்ள கழிவுகள் மற்றும் பாக்டீரியாக்களை வெளியேற்றும்.
இந்த 10 மசாலா பொருட்களை தினமும் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா..?
சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது
நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருப்பின் தாராளமாக வேம்பு டீ எடுத்துக் கொள்ளலாம். இது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். குறிப்பாக, இன்சுலின் தேவைப்படாத சர்க்கரை நோயாளிகளுக்கான அறிகுறிகளை விரட்டியடிக்கும்.
இதய நலன் மேம்படும்
உடலில் தேங்கியிருக்கும் மிகுதியான கொழுப்புகளை கரைக்க வேம்பு டீ உதவுகிறது. இது மட்டுமல்லாமல் உடனடியாக ரத்த அழுத்த அளவை கட்டுக்குள் கொண்டு வருகிறது. ஆகவே, இவை இரண்டின் எதிரொலியாக இதய ஆரோக்கியமும் மேம்படும்.
கல்லீரல் பிரச்சினைகளை தடுக்கிறது
கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு நீங்கள் தினசரி வேம்பு டீ எடுத்துக் கொள்ளலாம். உடலில் உள்ள ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ் அளவுகளைக் குறைக்கவும், கல்லீரல் தொடர்பான நோய்களை கட்டுப்படுத்தவும் உதவிகரமாக இருக்கும்.
மழைக்கால நோய்களிலிருந்து தற்காத்து கொள்ள உதவும் 6 சமையலறை பொருட்களின் பட்டியல்...
வேம்பு டீ தயாரிப்பது எப்படி..?
* ஒன்றரை கப் தண்ணீரில் 4 அல்லது 5 வேப்பிலைகள் மற்றும் இஞ்சி சிறிதளவு தட்டிப் போடவும்.
* இதை 5 முதல் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
* இறுதியாக வடிகட்டி, அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து பருகலாம். நீரிழிவு நோயாளிகள் தேன் சேர்ப்பதை தவிர்க்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Herbal Tea, Monsoon Diseases, Neem