முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சின்னம்மை மற்றும் குரங்கம்மைக்கு வித்தியாசம் தெரியாமல் குழம்பும் மக்கள்... இதுதான் அறிகுறி...

சின்னம்மை மற்றும் குரங்கம்மைக்கு வித்தியாசம் தெரியாமல் குழம்பும் மக்கள்... இதுதான் அறிகுறி...

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மங்கி ஃபாக்ஸ் மிகவும் தீவிரமான நோயாக இருப்பதால் இது சாதாரண அம்மையாக நினைத்து சிகிச்சை பெறாமல்விடக்கூடாது. இந்நிலையில் சின்னம்மை மற்றும் குரங்கு அம்மைக்கு இடையில் உள்ள வித்தியாசங்களை தெரிந்து கொள்வது அவசியம்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கோவிட் வைரஸ் தொற்றுக்கு அடுத்தபடியாக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருப்பது மங்கி பாக்ஸ் என்று பரவலாக அழைக்கப்படும் குரங்கம்மை! கோவிட் வைரஸ் போலவே குரங்கம்மையும் மிகவும் தீவிரமான தொற்று என்று ‘குளோபால் ஹெல்த் எமர்ஜென்சி’ என்று உலக சுகாதார மையம் கடந்த வாரம் அறிவித்தது. ஏற்கனவே கேரளாவிலுள்ள சிறிய மாநிலங்களில் மூன்று பேருக்கு குரங்கம்மை இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

அதன் பிறகு நான்காவது நபராக டெல்லியில் இருக்கும் ஒருவர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியும் வெளியானது. குரங்கம்மை பற்றி பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. மங்கி ஃபாக்ஸ் மிகவும் தீவிரமான நோயாக இருப்பதால் இது சாதாரண அம்மையாக நினைத்து சிகிச்சை பெறாமல்விடக்கூடாது. இந்நிலையில் சின்னம்மை மற்றும் குரங்கு அம்மைக்கு இடையில் உள்ள வித்தியாசங்களை தெரிந்து கொள்வது அவசியம்.

குரங்கு அம்மை vs சின்னம்மை

குரங்கு அம்மை என்பது மங்கி பாக்ஸ் வைரஸ் தொடரிலிருந்து உருவாகும் ஒரு அம்மை நோய் ஆகும். இது ஆர்த்தொபாக்ஸ் வைரஸ் குடும்பத்தை சார்ந்தது. சிக்கன்பாக்ஸ் அதாவது சின்னம்மை என்பது வேரிசெல்லா-ஜோஸ்டர் வைரஸ் குடும்பத்தை சார்ந்தது. சின்னம்மை வைரஸ் ஷிங்கிள் என்ற நோயை உருவாக்கும்.

இந்த இரண்டு நோய்களுமே வைரஸ் தொற்று என்பதால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருக்கும் பொழுது, இந்த வைரஸ் பரவும். அது மட்டுமல்லாமல் மூச்சுகாற்று, திரவங்கள், அல்லது நேரடியாக சருமத்தில் ஏற்பட்டுள்ள கொப்புளங்களில் படுவது மூலம் பரவும்.

சின்னம்மை என்பது மிகவும் பரவலானது. பெரும்பாலானவர்கள் இளம் வயதில் சின்னம்மையால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். விரைவாக பரவக்கூடியதாக இருந்தாலும் அது எளிதில் தானாகவே சரியாகி விடும் தன்மை கொண்டது. ஆனால் குரங்கம்மையைப் பொறுத்தவரை அது மிகவும் அரிதான ஒரு வைரஸ் தொற்று மற்றும் அவ்வளவு எளிதில் பரவாது.

பொதுவான அறிகுறி – காய்ச்சல்

இந்த இரண்டு வைரஸ் தொற்றுகளுக்குமே மிகவும் பொதுவான அறிகுறி காய்ச்சல் ஆகும். ஆனால் காய்ச்சல் எப்போது ஏற்படுகிறது, காய்ச்சலின் தீவிர தன்மை என்ன இந்த இரண்டுமே பெரிய அளவில் வேறுபடும்.

மங்கி பாக்ஸ் மற்றும் சிக்கன் பாக்ஸ்ஸின் பொதுவான அறிகுறிகளில் தசை வலி, முதுகு வலி, குளிர், சோர்வு ஆகியவை ஆகியன ஆகும்.

குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் ரேஷஸ் தோன்றுவதற்கு முன்பே காய்ச்சல் ஏற்படும். உடலில் கொப்புளங்கள், கட்டிகள் தோன்றுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பே காய்ச்சல் ஏற்படும்.

வயிறு வீக்கத்தால் அவதியா.? இந்த 3 தவறுகள் பற்றி நிபுணர்கள் சொல்வதை கேளுங்கள்.!

சின்னம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் பாதிப்பு அடைந்த உடனேயே காய்ச்சல் தோன்றி காய்ச்சல் வந்த அடுத்த இரு நாட்களுக்குள்ளேயே உடலில் கட்டிகள் தோன்றத் துவங்கும்.

எவ்வளவு நாட்களில் அறிகுறிகள் தோன்றும்

ஒவ்வொரு வைரஸும் உடலில் வளர்வதற்கு ஒரு குறிப்பிட்ட கால அளவை எடுத்துக் கொள்ளும். நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் கூற்றுப்படி மங்கி பாக்ஸ் உடலில் வளர்வதற்கு 7 – 14 நாட்கள் தேவைப்படும். சிக்கன் பாக்ஸ் வைரஸ் வளர்ந்து அறிகுறிகள் காண்பிப்பதற்கு 16 நாட்கள் தேவைப்படும் என்று கூறியுள்ளனர்.

சின்னம்மையா அல்லது குரங்கம்மையா? இந்த பாதிப்பு மூலம் தெரிந்து கொள்ளலாம்

இந்த இரண்டு வைரஸ் தொற்றுகளுக்கும் உள்ள மிகப்பெரிய உள்ளே இடையே மிகப்பெரிய வித்தியாசம் ஒன்று உள்ளது. மங்கி பாக்ஸ் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கழுத்தில் இருக்கும் லிம்ப் நோடுகளில் வீக்கமாக காணப்படும். சின்னம்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கழுத்தில் வீக்கம் ஏற்படாது.

சென்னையில் வேகமாக பரவும் ’மெட்ராஸ் ஐ’

தோல் சிவந்து போவது மற்றும் கொப்புளங்கள்

இந்த இரண்டு வைரஸ் தொற்றுகளுமே, ராஷ் என்று சொல்லப்படும் தோல் சிவந்து போகுதல் அல்லது கொப்புளம் உண்டாவது ஆகிய இரண்டுமே காணப்படும்.

மேலே கூறியுள்ளது போல, காய்ச்சல் ஏற்பட்டு சில நாட்களுக்கு பிறகு உடலில் சருமத்தில் மாறுதல் ஏற்பட்டால் அது குரங்கம்மை, உடனடியாக காணப்பட்டால் அது சின்னம்மை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

குரங்கம்மையைப் பொறுத்தவரை முகத்தில் மற்றும் உடலில் உள்ள மற்ற பகுதிகளில் உடனடியாக இந்த கொப்புளங்கள் மற்றும் வீக்கங்கள் தோன்றும். மேலும் சீழ் பிடித்த கட்டிகள் மற்றும் நீர்க் கட்டிகளாக மாறி, அது உலர்ந்து, அந்தப் பகுதி வறட்சி அடைந்து தடினமாகக் காணப்படும். அந்த சருமத்தில் திட்டுகள் சில நாட்களில் தானாகவே விழுந்துவிடும்.

சின்னம்மையை பொறுத்தவரை சின்ன சின்ன கட்டிகளாக சிவந்த நிறத்தில் சருமத்தில் காணப்படும். இது அதிகமாக அரிப்பு ஏற்படுத்தும் தன்மையை கொண்டது. ஆரம்பத்தில் கன்னம், முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் மட்டுமே தோன்றும் சின்னம்மை கட்டிகள் நாளாக நாளாகத்தான் உடல் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக பரவும்.

வரும்முன் காப்பது

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் நெருக்கமாக பழகும் பொழுது தொற்று எளிதில் பாதிப்பு பாதிக்கக்கூடும் எனவே. தொற்று பாதித்தவர்கள் தனியே இருப்பது அவசியம். அது மட்டுமல்லாமல் கோவிட் தொற்றுக்கு எவ்வாறு நாம் பாதுகாப்பு முறைகளை மேற்கொண்டுமோ அதேபோல சானிடைசர் பயன்படுத்துவது, அடிக்கடி கைகளைக் கழுவுவது ஆகியவற்றையும் மேற்கொள்ள வேண்டும். சின்னம்மைக்கு ஏற்கனவே தடுப்பூசி வந்துள்ள நிலையில் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் செலுத்திக் கொள்வது மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

First published:

Tags: Chicken Pox, Monkeypox