குளோபல் ஹெல்த் எமர்ஜன்சி என்று மங்கி வைரஸ் தொற்று பற்றி உலக சுகாதார நிறுவனம் அறிவித்த நிலையில், அதை பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. குரங்கம்மைக்கான ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறிகள், வைரஸ் தொற்று தீவிரமாகும் அறிகுறிகள், எப்படியெல்லாம் வைரஸ் பரவுகிறது மற்றும் சிகிச்சை முறைகள் உள்ளிட்ட பல்வேறு உபயோகமான தகவல்கள் பகிரப்பட்டு வந்தாலும் சோஷியல் மீடியாவில் மங்கி பாக்ஸ் பற்றிய கட்டுக்கதைகளுக்கும் குறைவில்லை.
மிகவும் ஆபத்தான ஒரு வைரஸ் தொடராக மங்கி பாக்ஸ் இருக்கும் நிலையில், இதை பற்றிய தவறான தகவல்கள் என்ன என்பதை புரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
குரங்கம்மை ஆப்பிரிக்காவில் தோன்றியது
உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய ஒரு நோய் தொற்று குறிப்பிட்ட ஒரு நாட்டில் இருந்து தான் தொடர்ந்து பரவத் தொடங்கியது என்று தகவலும் தவறானது, நியாயப்படி அவ்வாறு சொல்லக் கூடாது. இதற்கு முன்பு மங்கி பாக்ஸ் தொற்று மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் உள்நாட்டிலேயே ஒரு சில இடங்களில் காணப்பட்ட ஒரு தொற்றாக கண்டறியப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு உலகநாடுகளுக்கு மங்கி பாக்ஸ் ஆப்பிரிக்காவிலிருந்து பரவவில்லை என்று ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு பயணம் செய்பவர்கள் மூலம் இந்த தொற்று ஏற்படுகிறது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை.
ஓரினச் சேர்க்கையாளர்கள் மூலம் பரவல் அதிகரிக்கிறது
இந்தியா போன்ற பல வளர்ந்துவரும் பல்வேறு நாடுகளில் ஓரினச் சேர்க்கையாளர்கள் பற்றிய நிலைப்பாடு ஆரோக்கியமாக இல்லை என்றாலும், இயற்கை பேரழிவுகள் கொரோனா பெருந்தொற்று ஆகிய காலத்தில் எந்த வேறுபாடுகளும் இல்லாமல் அனைவரும் ஒன்று சேர்ந்து பலருக்கும் உதவி செய்து ஒற்றுமையை வெளிப்படுத்தினார்கள். ஆனால் தற்பொழுது குரங்கம்மை ஆண் ஓரின சேர்க்கையாளர்கள் மூலம் அதிகமாக பரவுகிறது என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. அதாவது, ஒரு ஆண் மற்றொரு ஆணுடன் பாலியல் உறவு கொள்வது மூலம் மங்கி பாக்ஸ் தொற்று ஏற்பட்டு பரவுகிறது என்பது மிகவும் தவறான தகவல் மட்டும் அல்லாமல் ஒரு இழிவான செயலும் கூட.
உடலுறவு மூலமாக குரங்கு அம்மை பரவுமா..? அதிர்ச்சியளிக்கும் ரிப்போட்
அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம், மங்கி பாக்ஸ் பாதிக்கப்பட்ட நபருடன் பாலியல் உறவில் ஈடுபட்டால் மட்டும் தான் தொற்று பரவும் ஆபத்து இருக்கிறதே தவிர, ஆரோக்கியமான தொற்று இல்லாத நபர்கள் பாலியல் உறவு மேற்கொண்டால் தொற்று ஏற்பட சாத்தியமில்லை என்பதை உறுதி செய்துள்ளனர்.
மங்கி பாக்ஸ் ஒரு உயிர் கொல்லி
மங்கி பாக்ஸ் வைரஸ் அவரவரின் உடல் நலத்திற்கு ஏற்றவாறு அறிகுறிகளை தீவிரமாகவோ அல்லது மைல்டாகவோ வெளிப்படுத்தும். ஆனால் மங்கி பாக்ஸ் ஒரு உயிர்க்கொல்லி, பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயமாக இறந்து விடுவார்கள் என்ற தவறான தகவல் பகிரப்பட்டு வருகிறது. நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் கூற்றுப்படி மங்கி பாக்ஸ் பாதிக்கப்பட்டவர்களில் 99% சதவிகிதத்தினர் தொற்று முழுவதுமாக நீங்கி நோயிலிருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் அறிகுறிகள் வலி நிறைந்ததாக அசௌகரியமாக இருக்குமே தவிர இது உயிரை உயிருக்கு ஆபத்தானது அல்ல.
குரங்கம்மைக்கு தடுப்பூசி இல்லை
குரங்கம்மைக்கு தற்போது நேரடி தடுப்பூசி இல்லை. ஆனால், சின்னம்மைக்கான தடுப்பூசி செலுத்திக் கொண்டால், ஓரளவுக்கு குரங்கம்மை தொற்றைத் தடுக்க முடியும்.
குரங்கம்மை மற்றும் சின்னம்மை இரண்டும் ஒன்று தான்
குரங்கு அம்மை என்பது மங்கி பாக்ஸ் வைரஸ் தொற்றிலிருந்து உருவாகும் ஒரு அம்மை நோய் ஆகும். இது ஆர்த்தொபாக்ஸ் வைரஸ் குடும்பத்தை சார்ந்தது. சிக்கன்பாக்ஸ் அதாவது சின்னம்மை என்பது வேரிசெல்லா-ஜோஸ்டர் வைரஸ் குடும்பத்தை சார்ந்தது. சின்னம்மை வைரஸ் ஷிங்கிள் என்ற நோயை உருவாக்கும். இரண்டின் அறிகுறிகளும் வேறு, தொற்று பரவும் விகிதம் வேறு.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Monkeypox