சில மாதங்களாக உலக நாடுகளில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. கோவிட் தொற்றுக்கு பிறகு பல நாடுகளில் பொதுவாக பரவும் வைரஸ் தொடராக இருக்கிறது மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கம்மை.
கொறித்துண்ணிகள் போன்ற காட்டு விலங்குகளிடமிருந்து மனிதர்களிடையே பரவியதாக கூறப்படுகிறது குரங்கம்மை. பாதிப்பு இருக்கும் ஒருவரை தொடுவது, அவர் பயன்படுத்தும் ஆடை, படுக்கை அல்லது துண்டுகள் உள்ளிட்டவை வழியே மங்கி பாக்ஸ் பரவும் என எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள். இதனிடையே மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு குரங்கம்மை பரவியுள்ளதாக முதல் அதிகாரப்பூர்வ தகவல் சமீபத்தில் வெளியானது. தி லான்செட்டில் வெளியான ஒரு அறிக்கையில் மங்கி பாக்ஸ் வைரஸால் நாய் ஒன்று பாதிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த தொற்று மனித பரவல் மூலம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஏனெனில் குறிப்பிட்ட நாயின் உரிமையாளர் மங்கி பாக்ஸ் வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. இத்தாலியன் கிரேஹவுண்ட் வகை நாயான குறிப்பிட்ட இந்த நாய்க்கு புண்கள் மற்றும் கொப்புளங்கள் ஏற்பட்டதை தொடர்ந்து செய்யப்பட்ட பரிசோதனையில் மங்கி பாக்ஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
நாய்க்கு எப்படி தொற்று ஏற்பட்டிருக்கலாம்.?
குரங்கம்மையால் பாதிக்கப்பட்டிருக்கும் நாயின் உரிமையாளர் எப்போதும் தன் படுக்கையில் நாயுடன் சேர்ந்து தூங்கும் பழக்கம் உடையவர் என்பது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உரிமையாளருக்கு குரங்கம்மை பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டதில் இருந்து நாயை அருகில் விடாமல் கவனமாக இருந்தாலும், பாதிப்பின் துவக்கத்தில் நாயுடன் சேர்ந்து படுத்து தூங்கியதால் மற்றும் அதை தொட்டு தூக்கி விளையாடியதால் கூட செல்லப்பிராணிக்கு பரவி இருக்கலாம் என்று அறிக்கைகள் கூறுகின்றன. மேலும் பாதிக்கப்பட்ட மனிதரிடமிருந்து வளர்ப்பு பிராணிக்கு இந்த தொற்று பரவி இருப்பது இதுவே முதல்முறை.
Also Read : இந்தியாவில் 82 குழந்தைகளுக்கு பரவியுள்ள தக்காளி காய்ச்சல்.. இதன் பாதிப்பு என்ன?
வளர்ப்பு நாயிடம் காணப்பட்ட அறிகுறிகள் என்ன.?
உரிமையாளர்களுக்கு மங்கி பாக்ஸ் அறிகுறிகள் தோன்றத் தொடங்கிய 12 நாட்களுக்குப் பிறகு, அவர்களின் 4 வயது நாயும் அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியது. மங்கி பாக்ஸ் வைரஸ் வெளிப்பாட்டின் விளைவாக நாய்க்கு புண்கள் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட நாய் அடிவயிற்று கொப்புளங்கள் மற்றும் ஒரு மெல்லிய குத புண் உட்பட சளிச்சுரப்பி புண்களால் அவதிப்பட்டுள்ளது. பின் நாய் ஒரு PCR நெறிமுறையைப் பயன்படுத்தி பரிசோதிக்கப்பட்டது, அதில் தோல் புண்கள் மற்றும் ஆசனவாய் மற்றும் வாய்வழி குழியில் இருந்து ஸ்வாப்கள் சோதிக்கப்பட்டன.
உரிமையாளர்களிடம் (2 ஆண்களிடம்) காணப்பட்ட அறிகுறிகள்..
பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் 44 வயதுடையவர் மற்றொருவர் 27 வயதுடையவர். இவர்கள் தங்கள் பார்ட்னர்களுடன் உடலுறவு கொண்ட 6 நாட்களுக்குப் பிறகு ஒருவருக்கு குத புண் ஏற்பட்டது. இதில் ஒரு நோயாளிக்கு முகம், காதுகள் மற்றும் கால்களில் வெசிகுலோபஸ்டுலர் ரேஷ் ஏற்பட்டது. மற்றொரு நோயாளிக்கு கால்கள் மற்றும் முதுகில் தடிப்புகள் ஏற்பட்டன. அறிகுறிகள் தீவிரமாகிய சில நாட்களிலேயே இரு நோயாளிகளும் ஆஸ்தீனியா, தலைவலி மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளையும் வெளிப்படுத்தினர். CDC-யின் அறிக்கைபடி சில சமயங்களில் காய்ச்சல் மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் ரேஷஸ்களுக்கு பிறகு தோன்றும், வேறு சில சமயங்களில் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றும், பின்னர் உடலில் ரேஷஸ் தோன்றும்.
Also Read : பெண்களை விட ஆண்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகம் ஏற்படலாம் - அதிர்ச்சியூட்டும் ஆய்வு தகவல்.!
வேறு என்ன..
மங்கி பாக்ஸால் பாதிக்கப்பட்டுள்ள நாய் மற்றும் முதல் உரிமையாளர் (44 வயதானவர்) இருவரின் டிஎன்ஏ வரிசையும் hMPXV-1 கிளேட், பரம்பரை B.1 என்று அறிக்கை கூறுகிறது. இதில் B.1 ஏப்ரல் 2022 முதல் குரங்கம்மை இதுவரை இல்லாத நாடுகளில் கூட பாதிப்பை தூண்டி வருகிறது.
குரங்கம்மை தொற்றின் உலகளாவிய நிலை..
WHO வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 92 நாடுகளில் சுமார் 35,000-க்கும் மேற்பட்டோர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் சுமார் 12 பேர் வரை உயிரிழந்துள்ளனர். கடந்த வாரம் மட்டுமே சுமார் 7,500 பாதிப்புகள் பதிவாகியுள்ளன, முந்தைய வாரத்தை விட இது 20% அதிகமாகும் என்று அறிக்கை கூறுகிறது. இந்தியாவை பொறுத்த வரை இதுவரை 9 பேர் மங்கி பாக்ஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Also Read : உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த 7 உணவுகளை தொடவே கூடாதாம்...
பொதுவான அறிகுறிகள்...
பொதுவாக குரங்கம்மை வைரஸ் தாக்கிய 6 - 13 நாட்களில் அறிகுறிகள் தென்படும். சிலநேரம் 21 நாட்கள் வரை ஆகலாம். காய்ச்சல், கடும் தலைவலி, சளி, உடல்வலி, தசை வலி, சோர்வு, முகம், கைகள், கால்கள் என உடல் முழுவதும் அம்மை கொப்புளங்கள் ஏற்படும். நோய் 2-4 வாரங்கள் நீடிக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.