குரங்கம்மை நோயை யாராலும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. அதன் அறிகுறிகள் அந்த அளவுக்கு கடுமையானது. இது இந்தியாவில் பெரும்பாலோனரை பாதிக்கவில்லை என்றாலும் மற்ற நாடுகளில் இதன் அச்சுறுத்தல் அதிகமாக இருந்துள்ளது. இன்னும் அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதன் அறிகுறிகளின் தாக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜெனீவாவில் உலக சுகாதார அமைப்பின் எமர்ஜென்ஸி கமிட்டி கூட்டத்தில் குரங்கம்மை நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் அதன் தீவிர அறிகுறிகளை கருத்தில் கொண்டு இன்னும் குரங்கம்மை நோயை அவசர நிலை பட்டியலிலிருந்து நீக்குவதாக இல்லை என கூறியுள்ளது. எனவே வழக்குகள் தொடரும் வரை இந்த நிலை நீடிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரப்படி உலகம் முழுவதும் உள்ள 10 நாடுகளில் இதுவரை 77000 பேர் குரங்கம்மை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி 36 பேர் இறந்துள்ளனர்.
குரங்கம்மை நோய் சின்னம்மை அறிகுறி போலவே உடலின் கொப்புளங்களுடன் ஆரம்பிக்கும். இந்த அறிகுறிகள் தெரிய 5 முதல் 13 நாட்கள் வரை ஆகும். தலைவலி, காய்ச்சல், தசைவலி, சோர்வு, குளிர் போன்ற அறிகுறிகள் இருக்கும்.
Also Read : நொச்சி இலை ஆவி பிடிப்பதற்கு மட்டுமல்ல... இத்தனை மருத்துவ குணங்களை பற்றியும் தெரியுமா..?
இது மனிதர்கள் மூலம் நேரடியாக பரவும் நோய் விலங்குகள் மூலமாகவும் பரவும் என ஆய்வுகள் கூறுகின்றன. இந்த நோய்க்கு இதுவரை குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஆனாலும் சின்னம்மை போன்று இருப்பதால் அதற்கு பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை முறைகளே பின்பற்றப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை இந்த நோயின் பாதிப்பு எண்ணிக்கை குறைவுதான் என்றாலும் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவது அவசியம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.