சில மாதங்களாக உலக நாடுகளை அச்சுறுத்தி கொண்டிருக்கிறது மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கம்மை நோய். நாட்டில் முதல் முதலாக வெளிநாட்டில் இருந்து திரும்பிய கேரள மாநிலத்தை சேர்ந்தவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சைக்கு பிறகு குணப்படுத்தப்பட்டது.
குரங்கம்மை நோயால் பெரும்பாலும் மனிதர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்கள் மற்றும் பிற வீட்டு செல்ல பிராணிகளுக்கும் இந்த வைரஸ் பரவ கூடும் என்று புதிய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. எனவே மங்கி பாக்ஸால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் வளர்க்க கூடிய செல்ல பிராணிகளிடம் இருந்து விலகி இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.
அமெரிக்காவிலும் கூட குரங்கம்மை பரவி வருவதால், அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (Centers for Disease Control and Prevention) பல ஆலோசனைகளை வழங்கி வருகிறது. எனினும் கடந்த வாரம் மருத்துவ இதழான லான்செட்டில் வெளியிடப்பட்ட ஒரு இத்தாலிய கிரேஹவுண்ட் நாய்க்கு பரவிய வைரஸை பற்றிய ஒரு அறிக்கைக்கு பிறகு CDC-யின் ஆலோசனைகள் அதிக கவனம் பெற்று உள்ளது.
வைரஸால் பாதிக்கப்பட்ட அந்த நாய் ஒரு தம்பதியினருக்கு சொந்தமானது, அவர்கள் விலங்குடன் சேர்ந்து தூங்குவதாக குறிப்பிட்டுள்ளனர். மற்ற பார்ட்னர்களுடன் உடலுறவு கொண்ட 2 ஆண்கள் காயங்கள் மற்றும் பிற அறிகுறிகளுடன் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் தான் கிரேஹவுண்ட் வகை நாயை வளர்த்து வருபவர். இவர் குறிப்பிட்ட நாயுடன் படுத்து தூங்கியதால் அந்த நாய்க்கு திடீரென்று புண்கள் உட்பட குரங்கம்மையின் சில அறிகுறிகள் உருவாகியது. இதனை தொடர்ந்து அதை பரிசோதித்த போது மங்கி பாக்ஸ் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.
அதே போல குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட பிற வன விலங்குகளும் கண்டறியப்பட்டுள்ளன. அவை மனிதர்களுக்கு வைரஸை பரப்ப கூடும் என்ற கவலையும் ஏற்பட்டு உள்ளது. எனினும் நாய் அல்லது பூனை போன்ற வளர்ப்பு விலங்கில் குரங்கம்மை நோய் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது இதுவே முதல் முறை என்று ஆராய்ச்சி ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர்.
எனவே குரங்கம்மை தொற்று அறிகுறி கண்டறியப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் அல்லது இருந்த வீட்டில் வளர்க்க கூடிய நாய், பூனை போன்ற செல்ல பிராணிகளை, சுமார் 21 நாட்களுக்கு வீட்டிலிருந்து மற்ற விலங்குகள் மற்றும் மக்களிடமிருந்தும் ஒதுக்கி தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) அறிவுறுத்தல் வழங்கி இருக்கிறது. இதனிடையே குரங்கம்மை பாதித்தவருடன் தொடர்பில் உள்ளவர்களுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். நோயாளிகள் பயன்படுத்திய துணிகள், படுக்கை போன்றவற்றை பிறர் பயன்படுத்த கூடாது. கோவிட் போலவே மங்கி பாக்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவரை தனிமைப்படுத்த வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.