Mohanlal Fitness Video : 60 வயதிலும் அசால்ட் செய்யும் மோகன்லாலின் ஒர்க்அவுட் வீடியோ...!

மோகன்லால் உடற்பயிற்சி வீடியோ

60 வயதாகும் மோகன்லால் பளு தூக்குதல், பெஞ்ச் பிரஸ் மற்றும் ஓவர்ஹெட் பிரஸ் போன்றவற்றை உள்ளடக்கிய அவரது வழக்கமான மற்றும் கடினமான ஒர்க் அவுட்களை மிக எளிதாக செய்து அசத்துகிறார்.

  • Share this:
மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகராக இருப்பவர் மோகன்லால். தனது சிறந்த நடிப்பிற்காக 5 முறை தேசிய விருதை வென்றுள்ளார். தற்போது 60 வயது ஆகும் நடிகர் மோகன்லால் இந்திய ராணுவத்தில் கெளரவ லெப்டினென்ட் கர்னலாகவும் உள்ளார்.

ராணுவத்தின் மெட்ராஸ் ரெஜிமன்ட்டில் உள்ள 122-வது இன்பேன்டரி பட்டாலியன் படைப்பிரிவிலும் இடம்பெற்றுள்ளார். 60 வயதானாலும் தளர்ச்சியின்றி இன்னும் உடலை ஃபிட்டாக வைத்திருக்கிறார் நடிகர் மோகன்லால். தேவையான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் தனது உடற்தகுதியை பராமரித்து உடலை உறுதியாக வைத்து கொண்டுள்ளார். இதன் மூலம் லட்சக்கணக்கான தன் ரசிகர்களையும் ஆரோக்கியமாக உடலை வைத்திருக்க முன்மாதிரியாகவும் இருக்கிறார். தனிடையே இந்த முயற்சியின் ஒரு பகுதியாக சமீபத்தில் தனது ரசிகர்களுக்கு தான் ஒர்க்அவுட் செய்யும் 3 நிமிட வீடியோவை சமூகவலைத்தளத்தில் ஷேர் செய்துள்ளார்.

தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது 3 நிமிட ஒர்க்அவுட் வீடியோவை ஷேர் செய்துள்ளார். மேலும் அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் உடற்பயிற்சி என்பது அனைவருக்கும் உரியது என்பதை அடிக்கோடிட்டு காட்டி உள்ளார். மேலும் “உடற்பயிற்சி உடல் மற்றும் மனம் இரண்டையும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறது” என்றும் அதில் கூறியுள்ளார் நடிகர் மோகன்லால்.



 




View this post on Instagram





 

A post shared by Mohanlal (@mohanlal)





அவர் ஷேர் செய்து உள்ள வீடியோவில், ஜிம் ஒன்றில் நடிகர் மோகன்லால் பளு தூக்குதல், பெஞ்ச் பிரஸ் மற்றும் ஓவர்ஹெட் பிரஸ் போன்றவற்றை உள்ளடக்கிய அவரது வழக்கமான மற்றும் கடினமான ஒர்க் அவுட்களை மிக எளிதாக செய்து அசத்துகிறார். 30 வயது இளைஞரை போல 60 வயதில் நடிகர் மோகன்லால் அசால்ட்டாக செய்யும் ஒர்க் அவுட்கள் காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது.

சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன? நடிகை வித்யா பாலன் கூறும் ஆலோசனைகள்!

ஒவ்வொரு ஒர்க் அவுட்டையம் சொல்லி முடித்து விட்டு அவரது ஸ்டைலில் "நெக்ஸ்ட்.?"என்று ஜிம் டிரைனரிடம் கேட்டு அவர் அடுத்தடுத்து பல பயிற்சிகளை மேற்கொள்வதையும் அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. இன்ஸ்டாவில் மோகன்லாலை ஷேர் செய்துள்ள இந்த வீடியோவிற்கு அவரது ரசிகர்களிடமிருந்து மட்டுமின்றி பல்வேறு தரப்பினரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. மோகன்லாலின் இந்த விடியோவை பார்த்தவர்க்ள பலரும் சூப்பர்ப், எழுச்சியூட்டும் நல்ல வீடியோ என்று கமெண்டில் பதிவிட்டு பாராட்டியுள்ளனர்.

இதனிடையே மும்பை பாட்டியா மருத்துவமனை பிசியோதெரபிஸ்ட் கவுரி ஜரிவாலா கூறுகையில், நாள்தோறும் தவறாமல் 45-60 நிமிடங்கள் முழுமையான உடற்பயிற்சி அலல்து நடைபயிற்சி உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை அளிக்கிறது. இது ஏரோபிக் உடற்திறனை உருவாக்க உதவும், ரத்த அழுத்தம் மற்றும் டைப் 2 நீரிழிவு அபாயத்தை குறைக்கிறது. உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை குறைக்கும், சுவாசத்தை மேம்படுத்தும். எலும்புகளை வலுவாக்கும் மேலும் நோயெதிர்ப்பு திறனை நல்ல அளவில் பராமரிக்க உதவும் என்றார்.

 
Published by:Sivaranjani E
First published: