Home /News /lifestyle /

”மாதவிடாய் பற்றி இன்னும் விழிப்புணர்வு இல்லை” - பிரபலத்தின் கணீர் பிரச்சாரம்

”மாதவிடாய் பற்றி இன்னும் விழிப்புணர்வு இல்லை” - பிரபலத்தின் கணீர் பிரச்சாரம்

 மிதிலா பால்கர்

மிதிலா பால்கர்

நான் அதிர்ஷ்டசாலி. மாதவிடாய் என்பது சாதாரண விஷயம் என்பதை அறிந்த நண்பர்களும் குடும்பத்தினரும் என்னிடம் உள்ளனர். ஆனால், நமது சமூகத்தின் பெரும் பகுதியினர் அந்த வார்த்தையைக் குறிப்பிட்டுச் சொன்னாலே இன்னும் குமுறுகிறார்கள் என மிதிலா பதிவிட்டுள்ளார்

மேலும் படிக்கவும் ...
பெண்களின் உடலில் பல வித மாற்றங்களை உண்டாக்க கூடிய மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு இன்றளவும் குறைவாகவே உள்ளது. இந்த நூற்றாண்டிலும் மாதவிடாய் குறித்து பேசுவதை பலரும் தவறாக நினைக்கிறார்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படும் மாதவிடாய் என்பது சாதாரண உடலியல் மாற்றம் என்பதை இந்த சமூகம் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை. இது குறித்த பரவலான விழிப்புணர்வு பிரச்சாரத்தை சில தன்னார்வலர்கள் தொடர்ந்து செய்து கொண்டே வருகின்றனர்.

மேலும் பிரபலங்கள் பலரும் மாதவிடாய் குறித்த பிரச்சாரங்களை அவ்வப்போது செய்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் பாலிவுட் பிரபலமான மிதிலா பால்கர், மாதவிடாய் குறித்த தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

இவர் தற்போது மிகவும் பிரபலமான டிஜிட்டல் நடிகையான வலம் வருகிறார். காதல் மற்றும் நகைச்சுவை கலந்த வலைத் தொடரான லிட்டில் திங்ஸில் காவ்யா குல்கர்னி என்கிற கதாபாத்திரத்தின் மூலம் பலரின் இதயத்தை கொள்ளை அடித்தார். இவர் நடிகை மட்டுமல்ல இவர் ஒரு பாடகியும் ஆவார். மேலும் இவர் மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை அவ்வப்போது ஏற்படுத்தி வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை பதிவிட்டு வருகிறார்.



 




View this post on Instagram





 

A post shared by Mithila Palkar (@mipalkarofficial)






அதன்படி சமீபத்தில் மிதிலா பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு பலரது கவனத்தை பெற்றுள்ளது. அந்த பதிவில், "தேர்வு எழுதும் போது எனக்கு முதல் முறையாக மாதவிடாய் வந்தது. தேர்வை முடிக்க நான் வேகமாக பேனாவை பயன்படுத்தும்போது என் ஆடைகளில் இரத்த கறை பட்டு இருந்தது. அதிர்ஷ்டவசமாக, எனது சீருடை அடர் நிறமாக இருந்தது மற்றும் கறை வெளிப்படையாக தெரியவில்லை. ஆனால் நான் வெள்ளை நிற பாவாடை அணிந்திருந்திருந்தால், எனக்கு சில பயங்கரமான நினைவுகள் இதனால் கிடைத்திருக்கும்.

நான் அதிர்ஷ்டசாலி. மாதவிடாய் என்பது சாதாரண விஷயம் என்பதை அறிந்த நண்பர்களும் குடும்பத்தினரும் என்னிடம் உள்ளனர். ஆனால், நமது சமூகத்தின் பெரும் பகுதியினர் அந்த வார்த்தையைக் குறிப்பிட்டுச் சொன்னாலே இன்னும் குமுறுகிறார்கள்.



 




View this post on Instagram





 

A post shared by Mithila Palkar (@mipalkarofficial)






இந்த மாதவிடாய் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் மூலம், மாதவிடாய் குறித்து வெட்கப்படுவதை நம்மால் முற்றிலுமாக சரிசெய்ய முடியாமல் போகலாம், ஆனால் மாதவிடாய் என்பது இயல்பான ஒன்று. அது ஏற்படும்போது அந்த பெண்ணை அரவணைப்புடன் பார்த்து கொண்டாலே எனக்கு இதனால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும். இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் என்னுடன் இணைந்திடுங்கள்! உங்கள் மாதவிடாய் கதைகள், கறை கதைகள், வலி ​​கதைகள் ஆகியவற்றை உலகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மாதவிடாய் பற்றிய உரையாடல்கள் மறைந்திருந்தது போதும், இனி வெளிவரட்டும். மாதவிடாய் பற்றி நன்றாகத் தெரிந்து கொள்வது நல்லது தான்" என்று பெரும் மகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டா பக்கத்தில் மிதிலா தனது பெண் நண்பர்களை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Periods, Periods Stain

அடுத்த செய்தி