ஹிந்தி திரைப்பட நடிகர், பட தயாரிப்பாளர் என பன்முக திறன் கொண்ட மிலிந்த் சோமனுக்கு மற்றொரு அடையாளமும் உண்டு. உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். திரையுலகில் இன்றைய இளம் நடிகர் பலர் தொப்பையுடன் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், 57 வயதிலும் கட்டுமஸ்தான உடல்கட்டுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார் மிலிந்த் சோமன்.
திரைத்துறை பணிகள், அன்றாட வேலைகள் என எத்தனை விஷயங்கள் அணிவகுத்து நின்றாலும் அன்றாடம் செய்கின்ற உடற்பயிற்சியை இவர் தவற விடுவதில்லை. அதிலும், தினசரி குறைந்தபட்சம் 15 புல் அப்ஸ் எடுப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார் இவர். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள சில டிப்ஸ்களை இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்துள்ளார்.
பூங்கா ஒன்றில் புல் அப்ஸ் எடுத்துக் கொண்டிருக்கும் மிலிந்த் சோமன், இதுகுறித்து குறிப்பிட்டுள்ள பதிவில், “நாள் ஒன்றுக்கு 15 புல் அப்ஸ் போதுமானது! உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் ஏதேனும் ஒரு பயிற்சியை மணிக்கணக்கில் செய்து கொண்டிருக்க வேண்டும் என்று பலர் கருதுகின்றனர். ஆனால், நீங்கள் இலக்கு என்ன என்பது குறித்து தெளிவாக இருக்க வேண்டும்.
எது தேவையோ, அதை மட்டும் செய்தால் போதுமானது. உங்களுக்கு விருப்பமான பாதையை தேர்வு செய்து கொள்ளுங்கள். என்னைப் பொருத்தவரையில், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், ஒவ்வொரு நாளும் பலவிதமான பயிற்சிகளை 15 முதல் 20 நிமிடங்களுக்கு செய்தால் போதுமானது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
புல் அப்ஸ் செய்தால் என்ன பலன் கிடைக்கும் :
புல் அப்ஸ் செய்வதால் தோள்பட்டை, கைகள் மற்றும் முதுகு ஆகிய பகுதிகளில் தசைகள் வலிமை அடையும். இது மட்டுமல்லாமல் இந்தப் பகுதிகளில் கிரிப் பலம் அதிகரிக்கும். எலும்புகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாம், கொழுப்பு கரைய இந்தப் பயிற்சி உதவிகரமாக அமைகிறது.நீங்கள் புல் அப்ஸ் செய்வது உடலுக்கு மட்டுமல்ல, மனதுக்கும் புத்துணர்ச்சி தரும். கவலை, சோகம் போன்ற உணர்வுகளை குறைத்து தன்னம்பிக்கையை ஊக்குவிக்கக் கூடியதாகும்.
கொஞ்சம் சிரமம் தான் :
சாதாரண உடற்பயிற்சிகளை ஒப்பிடுகையில் புல் அப்ஸ் சற்று சிரமமான பயிற்சி தான். எனினும், உங்கள் உடலை வலுவாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்துக் கொள்ள நீங்கள் விரும்பும் பட்சத்தில் இது உங்களுக்கு உதவிகரமாக அமையும். இதற்கு முன்பு நீங்கள் புல் அப்ஸ் செய்ததில்லை என்றால், இப்போது கம்பிகளில் முதலில் தொங்கிப் பழகவும். அதற்குப் பிறகு மெல்ல, மெல்ல ஒன்றிரண்டு என்று படிப்படியாக அதிகரித்து 15 புல் அப்ஸ் செய்தால் போதுமானது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.