சமீப ஆண்டுகளாக உலகளவில் மிகவும் அச்சுறுத்தும் ஒன்றாக இருந்து வருகிறது இதயம் சார்ந்த நோய்கள். ஏனென்றால் முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே வரும் என்று இருந்த ஹார்ட் அட்டாக் மற்றும் கார்டியாக் அரெஸ்ட் உள்ளிட்ட இதய நோய்கள் இன்று இளஞர்களுக்கு கூட ஏற்படுவது மிகவும் அதிர்ச்சிகரமான நிகழ்வாக மாறி இருக்கிறது.
நெஞ்சு வலி, திடீரென வியர்ப்பது மற்றும் அசௌகரியமாக உணர்வது உள்ளிட்டவை ஹார்ட் அட்டக்கின் சில அறிகுறிகள் என்பது நம் அனைவர்க்கும் தெரிந்த பொதுவான ஒன்று. இப்படிப்பட்ட பொதுவான அறிகுறிகளை தாண்டி சில அசாதாரண அறிகுறிகளும் ஹார்ட் அட்டாக் ஏற்படுவதை உணர்த்த கூடியவையாக இருக்கலாம். இவை பெரும்பாலும் கவனிக்கப்படாத அறிகுறிகளாக இருக்கின்றன.
மைல்ட் அட்டாக் :
ஹார்ட் அட்டாக் என்பது இதயத்தில் ரத்த ஓட்டம் தடைபடும் நிலை. இது கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் காரணமாக ஏற்படுகிறது. இவை தமனிகளில் Plaque-ஐ உருவாக்குகிறது. சரியான நேரத்தில் இந்த அடைப்பு அகற்றப்படாவிட்டால், ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக இதய திசுக்கள் இறக்க தொடங்குகின்றன. மைல்ட் ஹார்ட் அட்டாக்கின் போது இதய தசையின் ஒரு சிறிய பகுதி மட்டுமே பாதிக்கப்படும்.
ஒருவருக்கு மைல்ட் அட்டாக் என்றால் அவரது இதயம் அதிக பாதிப்பை சந்திக்கவில்லை, இன்னும் சாதாரணமாக பம்ப் ஆகி கொண்டிருக்கிறது என்று அர்த்தம். மைல்ட் அட்டாக்கானது நிரந்தர இதய பாதிப்பு மற்றும் இதய செயலிழப்பு, அசாதாரண இதய துடிப்பு மற்றும் இரண்டாவது அட்டாக்கிற்கான அதிக ஆபத்து உள்ளிட்ட கோளாறுகளை ஏற்படுத்தலாம்.
கழுத்து அல்லது தாடை வலி :
கழுத்து அல்லது தாடை வலி இதயத்துடன் தொடர்பில்லாததாக தோன்றினாலும் இவை லேசான ஹார்ட் அட்டாக்கிற்கான பொதுவான அறிகுறிகளில் ஆகும். சில சமயங்களில் திடீரென்று ஏற்படும் வலி தாடையிலிருந்து தொடங்கி கழுத்து வரை பரவும்.
கைகளில் வலி அல்லது சென்சேஷன் உணர்வு :
காரணமின்றி கைகளில் வலி, குத்துதல் அல்லது கூச்ச உணர்வு ஏற்படுவது மைல்ட் அட்டாக்கின் பொதுவான அறிகுறி. பெரும்பாலும் இந்த அறிகுறி இடது கையில் ஏற்படுகிறது மற்றும் உடலின் இடது பக்கத்தில் பரவுகிறது. சிலருக்கு இந்த அறிகுறி மார்பு பகுதியில் அசௌகரியம் மற்றும் கழுத்து வலி ஆகியவற்றுடன் சேர்ந்து தோன்றலாம்.
High Blood Pressure : உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்..
வியர்வை :
சாதாரண வெப்பநிலை உள்ள ரூமில் இருக்கும் போதோ அல்லது நள்ளிரவிலோ திடீரென்று ஒருவருக்கு வியர்க்க துவங்குவது மைல்ட் அட்டக்கின் அறிகுறியாக இருக்கலாம்.
மூச்சுத்திணறல் மற்றும் தலைச்சுற்றல் :
மாடிப்படிகளில் ஏறும் போது கூட மாராத்தானில் ஓடியது போன்று மூச்சிரைப்பது இதயம் சரியாக செயல்படவில்லை என்பதை குறிக்கும். மார்பில் வலி போன்ற மற்ற ஹார்ட் அட்டாக் அறிகுறிகளுடன் மூச்சுத்திணறல் அல்லது தலைச்சுற்றல் போன்ற உணர்வு காணப்பட்டால் ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.
வயிறு கோளாறு :
சில சூழல்களில் மைல்ட் அட்டாக்கை சந்திக்கும் நபர் அதிக ஏப்பம், நெஞ்செரிச்சல், வயிற்று வலி உள்ளிட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். குறிப்பாக அட்டாக்கின் பிற பொதுவான அறிகுறிகளுடன் இந்த அறிகுறியும் காணப்பட்டால் புறக்கணிக்க கூடாது. ஒருவர் ஹார்ட் அட்டாக் அறிகுறிகளை உணர துவங்கிய உடன் சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.