Metabolic Syndrome இருந்தால் இத்தனை ஆபத்துகளா? ஆபத்துக் காரணிகளைத் தெரிந்துகொள்ளுங்கள்..

Metabolic Syndrome இருந்தால் இத்தனை ஆபத்துகளா? ஆபத்துக் காரணிகளைத் தெரிந்துகொள்ளுங்கள்..

மாதிரி படம்

உயர் இரத்த அழுத்தம், பலவீனமான குளுக்கோஸ் சகிப்புத்தன்மை, ஈடுசெய்யும் ஹைபரின்சுலினீமியா மற்றும் அடிவயிற்றைச் சுற்றி கொழுப்பு குவிதல் போன்ற வளர்சிதை மாற்றக் கோளாறுகள்.

  • Share this:
    வளர்சிதை மாற்ற நோய்க்குறி (Metabolic Syndrome) என்பது டிஸ்லிபிடெமியா, உயர் இரத்த அழுத்தம், பலவீனமான குளுக்கோஸ் சகிப்புத்தன்மை, ஈடுசெய்யும் ஹைபரின்சுலினீமியா மற்றும் அடிவயிற்றைச் சுற்றி கொழுப்பு குவிதல் போன்ற வளர்சிதை மாற்றக் கோளாறுகளினால் ஏற்படும் பிரச்சனைகள். மேற்கண்ட நிலைகள் காலப்போக்கில் இருதய நோய் மற்றும் வகை 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தலாம்.

    சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் படி, மேற்கண்ட நிலைமைகளில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கோளாறுகளை ஒருவர் பெற்றிருந்தால் வளர்சிதை மாற்ற நோய்க்குறி உண்டாகும். இருதய நோய் ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், வளர்சிதை மாற்ற நோய்க்குறி என்பது வேகமாக அதிகரித்து வரும் வாழ்க்கை முறை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது பொது சுகாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல, குடும்ப மருத்துவம் மற்றும் முதன்மை பராமரிப்பு இதழில் வெளியிடப்பட்ட ஒரு இந்திய ஆய்வின்படி, 11% முதல் 41% மக்கள்தொகையில் இந்த நோய்க்குறி பரவலாக இருப்பதாகவும், பெண்கள் அதைப் பெறுவதற்கான அதிக ஆபத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.இந்த நோய் பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களில் காணப்படுகையில், பாதிக்கப்பட்ட 80% மக்கள் 40 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் என்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இளைய வயதினரிடையே அதன் நிகழ்வு கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.



    வளர்சிதை மாற்ற நோய்குறிக்கான ஆபத்து காரணிகள்:

    பின்வரும் 3 அல்லது அதற்கு மேற்பட்ட வளர்சிதை மாற்ற நிலைமைகள் நீங்கள் அனுபவித்தால், அதன் மூலம் உங்களுக்கு வளர்சிதை மாற்ற நோய்க்குறி இருப்பதைக் கண்டறியலாம்.

    1. வயிற்றுப்பகுதி பருமனடைவது அல்லது இடுப்பு மற்றும் தொப்பை பகுதியில் அதிகப்படியான கொழுப்பு குவிதல், உயர்ந்த இரத்த குளுக்கோஸ் அளவு (வகை 2 நீரிழிவு நோய்), கர்ப்பகால நீரிழிவு நோய் அல்லது நீரிழிவு நோயின் குடும்ப வரலாறு.

    ஏரோபிக் பயிற்சி மேற்கொள்பவரா நீங்கள்..? இதைக் கட்டாயம் படியுங்கள்..!

    2. 120/80 mmHg-க்கும் அதிகமான உயர் இரத்த அழுத்தம், உடலில் அதிக அளவு ட்ரைகிளிசரைடுகள் எனப்படும் ஒரு வகை கொழுப்பு சேர்தல் மற்றும் ஹைபர்டிரிகிளிசெர்டேமியா.

    3. இரத்தத்தில் குறைந்த அளவு நல்ல கொழுப்பு (HDL), ஹைப்போ தைராய்டிசம், பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) அல்லது ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் போன்ற பிற நிலைமைகள் வளர்சிதை மாற்ற நோய்குறிகளை குறிக்கும்.

    நோய்க்குறியை எவ்வாறு தடுக்கலாம்:

    வளர்சிதை மாற்ற நோய்க்குறிக்கு உயிருக்கு ஆபத்தானதாக மாறும் திறன் உள்ளது. எனவே ஆரம்பத்தில் இருந்தே அதைத் தடுக்க முயற்சிப்பது மிகவும் முக்கியம். இரத்த சர்க்கரை, இரத்த அழுத்தம், இரத்தக் கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைட்களை தவறாமல் கண்காணிப்பது அவசியம்.



    பின்வரும் வாழ்க்கை முறை மாற்றங்களைக் மேற்கொள்ள வேண்டும்:

    1. உணவு மாற்றங்கள்:

    நார்ச்சத்து நிறைந்த உணவு, சர்க்கரை மற்றும் கொழுப்பு குறைந்த உணவுகளை சாப்பிடுவதால் இந்த நோய்க்குறியை தடுக்கலாம். முழு தானியங்கள், காய்கறிகள், கீரைகள், கோழி இறைச்சி, மீன் போன்றவற்றை அதிகம் சாப்பிட முயற்சி செய்யுங்கள். வறுத்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் இனிப்பு, பேஸ்ட்ரி, சாக்லேட் போன்ற அதிக சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். மேலும், அதிக உப்பு உட்கொள்வது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என்பதால் உப்பு நுகர்வை கட்டுப்படுத்துவது சிறந்தது.

    2. செயல்பாட்டு மாற்றம்:

    வழக்கமான உடல் செயல்பாடுகள் மற்றும் உடற்பயிற்சி வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். மேலும் உடற்பயிற்சிகள் அதிக உடல் எடையைக் குறைக்கவும், இதய செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது. WHO-ன் சமீபத்திய பரிந்துரைகளின்படி, பெரியவர்கள் வாரம் முழுவதும் குறைந்தது 2.5 முதல் 3 மணி நேரம் (அதாவது 150–300 நிமிடங்கள்) மிதமானது முதல் தீவிரமான ஏரோபிக் உடல் உடற்பயிற்சி செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளது.

    யோகா மற்றும் சுவாச பயிற்சிகள் இரத்த அழுத்தத்தை பராமரிக்கவும் இதய நிலைகளை நிர்வகிக்கவும் உதவுகின்றன. மன அழுத்தத்தை போக்க தியானம் செய்வதும் ஒரு சிறந்த வழியாகும். சில நேரங்களில், இதய நோய்கள் மன அழுத்தத்தால் மோசமடையக்கூடும். எனவே அதை தவறாமல் பயிற்சி செய்வதும் நன்றாக தூங்குவதும் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சில மன அழுத்தத்தைத் தணிக்கும்.
    Published by:Sivaranjani E
    First published: