Home /News /lifestyle /

தீவிரமாகும் மனச்சோர்வு... இதுதான் மருத்துவரை அணுக சரியான நேரம்...

தீவிரமாகும் மனச்சோர்வு... இதுதான் மருத்துவரை அணுக சரியான நேரம்...

Mental Health

Mental Health

Mental Health | நாள்பட்ட மன அழுத்தம் இதயத்தை பாதிக்கும். மேலும், தீவிரமான மன ரீதியான ஆரோக்கியத்தை பாதித்து பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும்.

பெரிய அளவில் வெளியே தெரியாதவாறு ஆனால் மிகவும் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தி வரும் ஒரு முக்கியமான பிரச்சனை மன நல பாதிப்பு! பலவித காரணங்களால் ஏற்படும் மன அழுத்தம் பற்றி அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் அந்த மன அழுத்தம் உயிர்க்கொல்லியாக மாறும் ஆபத்தை பற்றி பலரும் அறிந்திருப்பதில்லை. நாள்பட்ட மன அழுத்தம் இதயத்தை பாதிக்கும். மேலும், தீவிரமான மன ரீதியான ஆரோக்கியத்தை பாதித்து பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும்.

மன அழுத்தம், படபடப்பு ஆகியவை சரியான நேரத்தில் கவனிக்கப்படாவிட்டால் தற்கொலை எண்ணம் தோன்றும்! எந்த பிரச்சனை யாருக்கு எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று பொதுவாக கூற முடியாது. அந்த வகையில் சமீபத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற பேஷன் டிசைனரான பிரதியுஷா கரிமெல்லா தற்கொலை செய்து கொண்டது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தன்னால் சரி செய்து கொள்ள முடியாத அளவுக்கு பிரச்சனைகள் ஏற்படும் பொழுது மனநல ஆலோசகரிடம் உதவி கேட்க வேண்டும் என்பது பற்றி தெரிந்துகொள்வது அவசியம்.

பல பிரபலங்களும் தாங்கள் எதிர்கொண்ட அழுத்தம், மனநல பிரச்சனைகள் ஆகியவற்றை பற்றி வெளிப்படையாக சமீபத்தில் தான் பேசி வருகிறார்கள்.

ஃபோர்டிஸ் மருத்துவமனையின் ஆலோசகர் மற்றும் கிளினிகல் உளவியலாளரான மருத்துவர் தீக்ஷா அத்வானி கூறுகையில், மன நல பாதிப்புகள் பற்றி பல விதமான தவறான கருத்துக்கள் பரவியுள்ளன. அதற்கு தெரபி எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லது தெரபி எடுத்துக் கொள்பவர்கள் தங்கள் யை தாங்களே தீர்த்துக்கொள்ள முடியாத அளவுக்கு பலவீனமானவர்கள் என்று ஒரு கண்ணோட்டம் தோன்றி, மக்கள் மனதில் ஆழமாக ஊன்றியுள்ளது என்பதுதான் இப்போது பெரிய பிரச்சனையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.மன நல பாதிப்புக்கு மருத்துவ உதவி பெற தடையாக எது இருக்கிறது.?

தான் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மனதுக்குள்ளேயே வைத்துக் கொண்டு யாரிடமும் பகிராமல் ஏன் தவிக்கிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.?

உடல் நல பாதிப்புக்கு, இந்த பிரச்சனை இருக்கிறது என்று மருத்துவரிடம் செல்வது போல மனநல பாதிப்புகளுக்கு யாரும் அந்த முயற்சியை செய்வது இல்லை. தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை மிகவும் பெரியதா அல்லது ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு மட்டும் தான் பெரிதாக நினைத்துக் கொண்டு தேவையில்லாமல் பதற்றப்படுகிறோமோ அல்லது வருத்தமாக உணர்கிறோமோ என்ற குழப்பமே பெரும்பாலும் நீடிக்கும்.

Also Read : புற்றுநோய்க்கான சிகிச்சைகள் என்னென்ன..? யாருக்கு என்ன சிகிச்சை சிறந்தது..?

இந்த குழப்பத்தால், இந்த சிறிய விஷயத்திற்கு ஒரு மருத்துவரை அணுகுவது சரியா தவறா என்ற முடிவை எடுக்க முடியாத சூழல் ஏற்படும். இதில் சிலருக்கு என்ன பிரச்சனை என்பது புரியாமல் இருக்கலாம்; இதனால் நான் எவ்வாறு பாதிக்கப்படுகிறேன் என்பதை பற்றி சரியாக அறிந்து கொள்ள முடியாமல் போகலாம்; வேறு சிலருக்கு மனநல பாதிப்புக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் என்னை பற்றி தெரிந்தவர்கள், என்ன நினைப்பார்கள், என் குடும்பத்தினர் உறவினர்கள் நண்பர்கள் எப்படிச் சித்தரிப்பார்கள் என்று யோசிக்கலாம்;உடல் பாதிப்பு போல மன நலம் எதனால் பாதிக்கப்படுகிறது.?

* நெருக்கமானவர்களின் பிரிவு அல்லது மரணம்
* உறவு முறிந்து போவது, விவாகரத்து
* இடமாற்றம், அதிக அழுத்தமான வேலை அல்லது வீட்டுச் சூழல், புதிய திட்டம்
* உடல் ரீதியான பிரச்சனைகள், விபத்து, காயம்
* பாலியல் துன்புறுத்தல்
* நஷ்டம், சொத்து இழப்பு
* இயற்கை சீற்றத்தால் பாதிப்பு

Also Read : திருமண வாழ்க்கையில் சிலர் தங்கள் பார்ட்னரை ஏமாற்றுவது ஏன்..?

மன நல பாதிப்புக்கான எச்சரிக்கை அறிகுறிகள் :

அவ்வப்போது, வருத்தமாக ஏமாற்றமாக உணர்வது என்பது சாதாரணமானது தான். இது வாழ்க்கையில் பல தருணங்களில் ஏற்படக்கூடியது. ஆனால் தொடர்ந்து வெறுமையாகவும், வருத்தமாகவும், எதன் மீதும் நம்பிக்கை இல்லாமலும், வாழ்வின் மீது பற்று இல்லாமலும், அதே நேரத்தில் கோபம் மற்றும் எரிச்சலான மனநிலையில் இருப்பது நீங்க பிரச்சனைகளில் இருக்கிறீர்கள் என்பதற்கான அறிகுறியாகும்.

இதை தவிர தினசரி செய்யக்கூடிய வேலைகளில் கூட உங்களுக்கு ஆர்வம் இல்லாமல் இருப்பதும், சரியாக சாப்பிடாமல், தூங்காமல் இருப்பதும் இதன் எச்சரிக்கை அறிகுறிகள் ஆகும். மேலும் சிறிய தவறு அல்லது சின்ன பிரச்சனை நடந்தால் கூட அதற்கு உங்களை நீங்களே குற்றம் சொல்லி, ஏதேனும் ஒரு வகையில் உங்களுக்கு தண்டனை கொடுத்துக் கொள்வீர்கள்.எப்போது உதவி தேவைப்படும்.?

மேற்கூறிய அறிகுறிகளைத் தொடர்ந்து, ஒரு சிலர் புகை பழக்கம், மது அருந்துதல் மற்றும் போதை மருந்து பழக்கத்திற்கு ஆளாவது பிரச்சனையின் தீவிரமான அறிகுறியாகும். ஆரம்ப காலத்திலேயே இந்த அறிகுறிகளை கண்டறிந்து உரிய மருத்துவரிடம் ஆலோசனை பெற்று கவுன்சிலிங் அல்லது தெரபி மூலம் எளிதில் மீண்டு வந்துவிடலாம்.

Also Read : உங்கள் பார்ட்னர் உண்மையாக நேசித்தால் இதையெல்லாம் கட்டாயமாக சொல்ல மாட்டார்!

ஒரு சிலருக்கு மனதில் இருப்பதை எந்த தயக்கமும் பயமும் இன்றி வெளிப்படுத்துவதே மிகப்பெரிய தீர்வாக அமையும். மன நல ஆலோசகர் மற்றும் உளவியலாளர் அல்லது சைக்கியாட்ரிக் மருத்துவரிடம் சிகிச்சை மற்றும் தெரபி எடுத்துக் கொள்ளும் பொழுது, உங்கள் பயத்தில் இருந்து விடுபடலாம், வாழ்க்கை மீது நம்பிக்கை ஏற்படும், மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம், தைரியமாக செயல்படலாம், மனநலத்தை பாதிக்கும் விஷயங்களை கண்டறிந்து தவிர்ப்பது என்று பல விதங்களில் உதவியாக இருக்கும்.
Published by:Selvi M
First published:

Tags: Depression, Mental Health, Mental Stress

அடுத்த செய்தி