"நாப்கின், உறிபஞ்சுகளை விட மாதவிடாய் ’கப் ’ பாதுகாப்பானது"

இதனால் எந்தவித ஆபத்துகளோ , தொற்றுகளோ பரவாது என்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: July 19, 2019, 11:36 AM IST
மாதவிடாய் ’ கப் ’
Web Desk | news18
Updated: July 19, 2019, 11:36 AM IST
நாப்கின்கள் வந்த பிறகு பெண்களுக்கு அது வரமாகத் தெரிந்தது. இன்று அதுவே அவர்களின் உடல் நலனிற்கு சாபம் என்றாகிவிட்டது.

நாப்கின் , உறிபஞ்சுகளுக்கு மாற்று வேண்டும் என்ற விழிப்புணர்வுகளும் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த கோரிக்கைகளை ஆதரிக்கும் விதமாக தற்போது ஓர் ஆய்வும் வெளியிடப்பட்டுள்ளது. 'தி லான்செட் பப்ளிக் ஹெல்த்' குறிப்பிட்டுள்ள ஆய்வில் 70% பெண்கள் நாப்கின்களைக் காட்டிலும் மாதவிடாய் கப்புகள் சிறந்தவையாக இருக்கின்றன என்று கூறியுள்ளனர்.
அவர்கள் ஆய்வுக்கு முன்பு வரை நாப்கின்கள் பயன்படுத்தியுள்ளனர். அவர்களுக்கு கப்புகள் வழங்கப்பட்டு பயன்படுத்தச் சொல்லியிருக்கின்றனர். அதன் சௌவுகரியம் குறித்து கருத்துக் கேட்டபோது “ மிகவும் சௌகரியமாக உள்ளது. இதை வரும் காலத்திலும் தொடரலாம் என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளனர்.

பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்கள் என ஒவ்வொருவருக்கும் நாப்கின் பயன்படுத்த வேண்டிய சூழல் நிலவுகிறது. அது சுற்றியுள்ள சூழலுக்கும் சௌகரியமாக இருக்கிறது என்று பயன்படுத்துகின்றனர். ஆனால் அது அவர்களுக்கு இரத்தப்போக்கு வரக்கூடிய வெஜினாவில் தொற்று ஏற்படுவதற்கான ஆபத்துகள் அதிகம் இருப்பதாக ஆய்வாளர் கூறியுள்ளார்.

Loading...

அதன் முதல்அறிகுறி சிறுநீர் கழிக்கும் இடத்தில் எரிச்சல் உண்டாகும் என்றும் குறிப்பிடுகிறார்.உங்கள் உடலைப் பாதுகாக்கவும், நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்தவும் நாப்கின், உறிபஞ்சுகளைக் காட்டிலும் சிறந்த , பாதுகாப்பானது மாதவிடாய் கப்புகளே என்று அந்த ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.

இந்த மாதவிடாய் கப்புகள் மருத்துவத்தில் அங்கீகரிக்கப்பட்ட சிலிகான், ரப்பர் ஆகியவற்றின் மூலமாக தயாரிக்கப்படுகின்றன. இது இரத்தத்தை உறிஞ்சாமல் சேகரிக்கும். அதை உதிரத்தின் தன்மைக்கு ஏற்ப ஒவ்வொரு இரண்டிலிருந்து நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை அகற்ற வேண்டும். இதனால் எந்தவித ஆபத்துகளோ , தொற்றுகளோ பரவாது என்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...