ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள் : இதை சரி செய்தாலே போதும்

ஆண்களின் பாலியல் ஆரோக்கியம்

மன அழுத்தம் நமது ஹார்மோன்கள் மற்றும் மனநிலையை நேரடியாக பாதிக்கிறது மற்றும் ஒரு நபரின் ஆண்மை உணர்விலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் தம்பதியர் உறவில் விரிசல் ஏற்படுகிறது.

  • Share this:
பரவும் பாலியல் நோய்த்தொற்றுகளை (STIs) கட்டுப்படுத்துவது, தம்பதியரிடையே பாலியல் சிக்கல்களால் ஏற்படும் மோதல்கள் மற்றும் கருத்து வேறுபாடுதொடர்பான சமீபத்திய கவலைகள், ஆண்களின் பாலியல் ஆரோக்கியம் குறித்த விவகாரத்தில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே பாலியல் மற்றும் உடல் ஆரோக்கியம் என்பது பாலியல் தொடர்பான உடல், உணர்ச்சி, மனம், சமூகம் மற்றும் ஆன்மீக பரிமாணங்களின் நிலை என பொதுவாக வரையறுக்கப்படுகிறது. பாலியல் நெருக்கம் தொடர்பான விஷயங்களை விவாதிப்பது கூட தவறான விஷயம் என்ற மனநிலை தான் நாட்டில் பெரும்பாலும் நிலவுகிறது.

பாலியல் விஷயங்களை பேசுவது பெரிய களங்கமாக நாட்டில் இன்றளவும் பார்க்கப்பட்டு வருகிறது. தங்கள் பாலியல் விஷயங்கள் அல்லது கவலைகள் தொடர்பாக வெளிப்படையாக பேச பெரும்பாலான மக்கள் தயாராக இல்லை என்பதே உண்மை. தற்போதைய பேரிடர் சூழல் பலரது மனநலம் மட்டுமல்ல தனிநபர்களின் பாலியல் சுகாதார பிரச்சனைகளையும் மோசமாக்கியுள்ளது. வேலைகள், வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இடையே இல்லாத சமநிலை, நிதி சிக்கல்கள் மற்றும் உறவு மோதல்கள் உள்ளிட்ட காரணங்களால் மன அழுத்தம் அதிகரிப்பது இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

மன அழுத்தம் நமது ஹார்மோன்கள் மற்றும் மனநிலையை நேரடியாக பாதிக்கிறது மற்றும் ஒரு நபரின் ஆண்மை உணர்விலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் தம்பதியர் உறவில் விரிசல் ஏற்படுகிறது. அதே போல புகை மற்றும் மதுப்பழக்கம் ஒருவரின் பாலியல் செயல்திறனை மோசமாக பாதிக்கும்.இவை முன்கூட்டியே விந்து வெளியேறுவது, விறைப்பு குறைபாடு, லிபிடோ குறைதல் உள்ளிட்ட பல பாலியல் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எனவே பாலியல் ஆரோக்கியத்திற்கு தேவையான அம்சங்கள் மற்றும் நிறைவான பாலியல் வாழ்க்கைக்கு என்ன தேவை என்பதைப் பற்றி எல்லாம் தெரிந்து கொள்வது அவசியம்.சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ஆய்வு ஒன்றில் இந்தியாவில் அனைத்து வயதினரிலும் சுமார் 20% ஆண்கள் Erectile Dysfunction (ED) எனப்படும் பாலியல் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 30% பேர் 40 வயதிற்குட்பட்டவர்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ED என்பது விறைப்புத்தன்மை குறைபாடு ஆகும். பாலியல் வாழ்க்கைக்கு அடிப்படையான விறைப்புத்தன்மையில் தங்களுக்கு இருக்கும் குறைபாடு பற்றி வெட்கத்தை விட்டு ஆண்களே உதவி கேட்க முன்வராவிட்டால் இதற்கு முடிவு ஏற்படுவது கடினமே.

விறைப்பு குறைபாடு என்றால் என்ன?

விறைப்புத்தன்மை குறைபாடு சிக்கலை பொறுத்து ஆண்மைக் குறைபாடு என்றும் அழைக்கப்படுகிறது. பாலியல் செயல்பாட்டின் போது ஒரு ஆணின் பிறப்புறுப்பு விறைப்புத்தன்மை பெறுவதில் அல்லது விறைப்புத்தன்மை சில நிமிடங்களுக்கு கூட நீடிப்பதில் சிரமம் ஏற்படுவது Erectile Dysfunction என்று குறிப்பிடப்படுகிறது.

இந்த சிக்கல் வயதான ஆண்கள், நடுத்தர வயது மற்றும் தற்போதைய இளைய தலைமுறையினர் சந்திக்கும் மிகவும் பொதுவான பாலியல் கோளாறாக இருக்கிறது. இதற்கு சிகிச்சை இருக்கும் போது அதனை பயன்படுத்தி கொள்ள ஆண்கள் முன்வருவதில்லை. காரணம் அவர்கள் மருத்துவரை சந்தித்து வெளிப்படையாக பேச தயக்கம் காட்டுவதே.

விறைப்புத்தன்மை குறைபாட்டை போக்க வாழ்க்கை முறை மாற்றங்கள், மருந்து முதல் அறுவை சிகிச்சை வரை பிரச்சனைக்கு ஏற்ப சரியான சிகிச்சையை மருத்துவர்கள் பரிந்துரைத்து குணப்படுத்த முடியும் என்பதை ஆண்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.விறைப்பு குறைபாட்டை எவை தூண்டலாம்?

உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய நோய் (CVD), மன அழுத்தம் மற்றும் கவலை போன்ற உளவியல் நிலைகள் போன்ற மருத்துவ நிலைமைகள் ஆண்களில் பாலியல் செயலிழப்புக்கு காரணமாக இருக்கின்றன. பாலியல் செயல்பாட்டின் போது அந்தரங்க உறுப்பு விறைப்புத்தன்மையை அடைய ரத்த ஓட்டம் அவசியம். இதில் CVD மற்றும் உயர் ரத்த அழுத்த பிரச்சனைகள் தமனிகளில் சுருக்கம் மற்றும் கடின தன்மையை ஏற்படுத்துகிறது.

இது உடல் உறுப்புகளுக்கு ரத்த ஓட்டத்தை குறைத்து விடுகின்றன. பாலியல் சிக்கல்களை ஏற்படுத்த கூடிய பொதுவான காரணியாக நீரிழிவு நோய் இருக்கிறது. ஏனென்றால் இந்நோய் ரத்த நாளங்கள் மற்றும் ஆண்குறிக்கு ரத்தத்தை வழங்கும் நரம்புகள் என இரண்டையும் பாதிக்கிறது. இவை தவிர உடல் பருமன், புகை மற்றும் மதுபழக்கம் போன்ற மோசமான வாழ்க்கை முறை பழக்கங்கள் விறைப்பு குறைபாடு ஏற்பட காரணமாகின்றன.

மகிழ்ச்சியான தாம்பத்ய வாழ்க்கைக்கு இது மிகவும் முக்கியம்

விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்பட காரணங்கள்?

* நாம் முன்பே கூறியபடி பல்வேறு உடல்நல பிரச்சனைகள் காரணமாக ஆண்குறியில் போதுமான ரத்தம் பாயவில்லை என்றால் விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்படுகிறது.

* ஆண்குறியில் ரத்தம் தங்கவில்லை என்றாலும் ஒரு ஆணால் தனது ஆண்குறியை நீண்ட நேரம் விறைப்புத்தன்மையையுடன் வைத்திருக்க முடியாது. இந்த பிரச்சனை எந்த வயதிலும் ஏற்படலாம்.

* மூளை அல்லது முதுகெலும்பிலிருந்து வரும் நரம்பு சிக்கனல்கள் ஆண்குறியை அடையாவிட்டாலும் இந்த கோளாறு ஏற்படும். இடுப்பு பகுதியில் உண்டாகும் சில நோய்கள், காயம் அல்லது அறுவை சிகிச்சை ஆண்குறிக்கு செல்லும் நரம்புகளை பாதிப்படைய செய்யலாம்.* இடுப்புக்கு அருகில் புற்றுநோய் சிகிச்சைகள் மேற்கொள்ளும் ஆண்களின் அந்தரங்க உறுப்பின் செயல்பாடுகள் பாதிப்படையும். அடிவயிற்றில் அல்லது இடுப்பில் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை அல்லது ரேடியேஷன் சிகிச்சை விறைப்புத்தன்மை குறைபாட்டை ஏற்படுத்தும். புரோஸ்டேட், பெருங்குடல் மலக்குடல் அல்லது சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கு சிகிச்சை பெரும் பெரும்பாலான ஆண்களுக்கு ED பாதிப்பு ஏற்படுகிறது.

* பிற உடல்நலப் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் மருந்துகள் விறைப்புத்தன்மை குறைபாட்டை சில நேரங்களில் பாதிக்கும். எனவே நோய்களுக்காக மருந்து எடுத்து கொள்ளும் போது விறைப்புத்தன்மை குறைபாட்டை சந்திக்க நேர்ந்தால் குறிப்பிட்ட நபர் உடனடியாக மருத்துவரை அணுகுவது பக்கவிளைவுகளை தவிர்க்க உதவும்.

இளைஞர்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு பொதுவானதா?

முன்பெல்லாம் 40 முதல் 70 வயதிற்குட்பட்ட நடுத்தர மற்றும் வயதான ஆண்களில் விறைப்புத்தன்மை குறைபாடு ஒரு பொதுவான நிலை. ஆனால் தற்போதோ 20 மற்றும் 30 வயதுகளின் பிற்பகுதியில் உள்ள இளைய தலைமுறையையும் பாதிக்கிறது. இந்த குறைபாட்டை ஏற்படுத்தும் சில காரணிகள் எந்த வயதிலும் ஆண்களை பாதிக்கும். குறிப்பாக உடல் மற்றும் உணர்ச்சி காரணிகள் ( physical and emotional factors) இதில் அடங்கும். இது தவிர வேறு சில காரணங்களும் இருக்கிறன. அவை பின்வருமாறு:

* பாலியல் செயல்பாடுகள் பற்றிய கவலை, மனச்சோர்வு, அவமானம் அல்லது குற்ற உணர்வோடு இருப்பது

* பாலியல் தொடர்பான குறிப்பிடத்தக்க மன அழுத்தம் அல்லது வேலை அழுத்தம் போன்ற பிற பிரச்சனைகள்

* அளவுக்கு அதிகமாக புகைப்பது மற்றும் மது அருந்துவது

* போதை மருந்துகளை பயன்படுத்துதல்

* உடல் பருமன் மற்றும் உடல் செயல்பாடு இல்லாமல் இருப்பது

* வொர்க் அவுட் சப்ளிமெண்ட்ஸ், டெஸ்டோஸ்டிரோன் பூஸ்டர்கள்இருக்கும் மன அழுத்தத்தின் அளவை குறைப்பது, தினசரி உடற்பயிற்சிகள் உள்ளிட்ட பல உடல்நல செயல்பாடுகள் மூலம் விறைப்பு பிரச்சனை உள்ளிட்ட உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். குறிப்பாக வாழ்க்கை முறை மாற்றங்கள் விறைப்புத்தன்மை குறைபாட்டை சரி செய்ய மிகவும் உதவுகிறது. உடற்பயிற்சியோடு, நல்ல ஆரோக்கியமான உணவு, மது அருந்துவதை கட்டுப்படுத்துவது, புகைபழக்கத்தை விட்டுவிடுவது போன்ற தேவையான வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்ய வேண்டும். விறைப்புதன்மை குறைபாடுகளுக்கு எந்த வயதிலும் சிகிச்சையளிக்கப்படலாம் என்றாலும் ஒருவரது ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் பிரச்சனையின் அடிப்படைக் காரணத்தைப் பொறுத்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

 
Published by:Sivaranjani E
First published: