ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ப்ரோஸ்டேட் கேன்சர் ஏற்படாமல் தடுக்க ஆண்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்.!

ப்ரோஸ்டேட் கேன்சர் ஏற்படாமல் தடுக்க ஆண்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்.!

ப்ரோஸ்டேட் கேன்சர்

ப்ரோஸ்டேட் கேன்சர்

அதிகப்படியான கொழுப்பு அடங்கிய உணவுகள் மற்றும் உடல் பருமன் ப்ரோஸ்டேட் கேன்சர் ஏற்படுவதற்கான குறிப்பிடத்தக்க ஆபத்து காரணிகள். எனவே பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் அடங்கிய ஆரோக்கியமான டயட்டை பின்பற்றுவதை உறுதி செய்யுங்கள். உடல் எடையை கட்டுக்குள் வைப்பது ப்ரோஸ்டேட் கேன்சர் அபாயத்தை குறைக்கிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ப்ரோஸ்டேட் புற்றுநோய் என்பது சமீப ஆண்டுகளாக ஆண்களின் ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்புகளை எற்படுத்தி வருகிறது. ப்ரோஸ்டேட் என்பது ஆண்களின் இனப்பெருக்க மண்டலத்தில் இருக்கும் ஒருவகை சுரப்பி. விந்தணுக்களை பாதுகாக்கும் திரவத்தை சுரக்கும் இந்த சுரப்பியின் செயல்திறன் 50 வயதிற்கு மேல் படிப்படியாக குறையும்.

இந்த சுரப்பியில் உண்டாகும் கேன்சர் தான் ப்ரோஸ்டேட் புற்றுநோய் என குறிப்பிடப்படுகிறது. 35 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த கேன்சரால் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது என்றாலும் பெரும்பாலும் 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்களில் தான் அதிகம் இந்த கேன்சர் கண்டறியப்பட்டு வருகிறது. உலகளவில் ஆண்களை பாதிக்கும் பொதுவான கேன்சர்களில் ஒன்றாகவும் இது இருக்கிறது. ப்ரோஸ்டேட் கேன்சர் கண்டறியப்படும் அனைத்து ஆண்களுக்கும் சிகிச்சை தேவைபடுவதில்லை என்பது இதில் உள்ள சுவாரசிய உண்மையாகும்.

இதனால் பாதிக்கப்படும் நோயாளி அறிகுறியற்றவராகவோ அல்லது குறைந்தபட்ச அறிகுறிகளை கொண்டிருக்கும் போதோ இவ்வகை கேன்சரை துவக்கத்திலேயே கண்டறிவது முக்கியம்.

என்ன செய்யலாம்.?

துவக்கத்திலே கண்டறிய 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஆண்களும் சில அடிப்படை புற்றுநோய் பரிசோதனைகளை மேற்கொள்வதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். ஃபீக்கல் அக்கல்ட் பிளட் டெஸ்ட், டிஜிட்டல் ரெக்டல் எக்ஸாமினேஷன், சீரம் ப்ரோஸ்டேட் ஸ்பெசிஃபிக் ஆன்டிஜென் டெஸ்ட்டிங் உள்ளிட்ட சில சோதனைகள் நிபுணர்களால் பரிந்துரைக்கப்படும். செயின் ஸ்மோக்கராக ஒருவர் இருந்தால் மார்பகத்தின் லோ டோஸ் CT ஸ்கேன் பரிந்துரைக்கப்படலாம். உங்களது நெருங்கிய ரத்த சொந்தங்கள் யாரேனும் கேன்சரால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தால் சிறந்த புற்றுநோயியல் நிபுணர் அல்லது மரபணு நிபுணரை சந்தித்து உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை தெளிவுபடுத்தி கொன்று அவர்களின் ஆலோசனைகளின் பேரில் செயல்படலாம் அல்லது பரிசோதனைகள் செய்து கொள்ளலாம்.

ப்ரோஸ்டேட் கேன்சர் உள்ளிட்ட சில வகை புற்றுநோய்கள் வாழ்க்கை முறை நோய் என்று குறிப்பிடப்படுகின்றன. கேன்சர்களில் பரம்பரை புற்றுநோய்களில் சில சதவீதங்கள் இருந்தாலும் ஒருசில கேன்சர் பாதிப்புகளுக்கு சுற்றுச்சூழல் காரணிகள் பங்களிக்கின்றன. 60 வயதுக்கும் மேற்பட்ட ஆண்களுக்கு லோயர் யூரினரி ட்ராக்ட் சிம்டம்ஸ் (LUTS) காணப்படுவது இயல்பு. இதில் அடிக்கடி அவசரமாக சிறுநீர் வருவது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கழிப்பதில் சிரமம் உள்ளிட்ட சில அறிகுறிகள் அடங்கும். இந்த அறிகுறிகளுக்கு என்லார்ஜ்டு ப்ரோஸ்டேட் டெஸ்டிங் தேவைப்படுகிறது, இது பெரும்பாலும் புற்றுநோயற்றது Benign Prostatic Hypertrophy). புற்றுநோய் அல்லாத இந்த நிலையில் ப்ரோஸ்டேட் திசுக்களின் அதிகப்படியான வளர்ச்சி சிறுநீர்க்குழாய் மற்றும் சிறுநீர்ப்பைக்கு எதிராகத் தள்ளப்பட்டு, சிறுநீரின் ஓட்டத்தைத் தடுக்கிறது. எனவே தான் இது தீங்கற்ற புரோஸ்டேடிக் ஹைப்பர் பிளேசியா என்றும் குறிப்பிடப்படுகிறது.

ஆனால் பல சந்தர்ப்பங்களில் தொற்றுகளை நிராகரித்து சாத்தியமான வீரியம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ரத்த பரிசோதனை செய்கிறோம். சந்தேகத்திற்கிடமான நிகழ்வுகளில் ப்ரோஸ்டேட்டின் ட்ரூகட் பயாப்ஸி மற்றும் ஸ்கேன் மூலம் கேன்சர் பாதிப்புகள் இருக்கிறதா இல்லையா என உறுதிப்படுத்தப்படுகிறது. ப்ரோஸ்டேட் கேன்சர் உறுதிசெய்யப்பட்டவுடன் ஆண்ட்ரோஜன்களின் அளவைக் குறைப்பதற்கான ஹார்மோன் சிகிச்சை அடங்கும். தவிர ரேடிகல் புரோஸ்டேடெக்டோமியுடன் அறுவை சிகிச்சை மற்றும் / அல்லது ப்ரோஸ்டேடிக் பெட் அல்லது இடுப்புப் பகுதியை உள்ளடக்கிய ரேடிகல் ரேடியோதெரபி உள்ளிட்டவையும் சிகிச்சை முறைகளின் ஒரு பகுதியாக இருக்கின்றன. கேன்சர் தீவிர நிலையில் இருந்தால் கீமோதெரபி மற்றும் பயோலாஜிக் சிகிச்சை அளிக்கப்படும்.

ப்ரோஸ்டேட் கேன்சர் ஏற்படாமல் தடுக்க என்ன செய்வது.?

அதிகப்படியான கொழுப்பு அடங்கிய உணவுகள் மற்றும் உடல் பருமன் ப்ரோஸ்டேட் கேன்சர் ஏற்படுவதற்கான குறிப்பிடத்தக்க ஆபத்து காரணிகள். எனவே பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் அடங்கிய ஆரோக்கியமான டயட்டை பின்பற்றுவதை உறுதி செய்யுங்கள். உடல் எடையை கட்டுக்குள் வைப்பது ப்ரோஸ்டேட் கேன்சர் அபாயத்தை குறைக்கிறது. தினசரி தவறாமல் அரை மணிநேரமாவது ஒர்கவுட்ஸ் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. புகை மற்றும் மதுப்பழக்கம் இருந்தால் முழுவதும் கைவிட அல்லது பெரிதும் குறைத்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. BPH சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகள் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கின்றன. ஆனால் மறுபுறம், இந்த மருந்துகளை எடுக்கும் போது கூட கேன்சர் வரலாம். வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் ப்ரோஸ்டேட் கேன்சரை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Also Read : ஆண்களே இந்த 10 அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க... அது புரோஸ்டேட் புற்றுநோயாக இருக்கலாம்..!

50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் உடல் பருமன், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்றவை அண்டாமல் தடுத்து கொள்ளவேண்டும். கொலஸ்ட்ரால், ரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து கட்டுக்குள் வைக்க வேண்டும். தைராய்டு ஹார்மோன் அளவுகள், வைட்டமின் டி, வைட்டமின் பி12 அளவுகள் கண்காணிக்கப்பட வேண்டும். வயதான காலத்தில் எலும்புகள் பலவீனமடைவது மற்றொரு பொதுவான பிரச்சனை. உடல் பருமன் ஒரு கில்லர் ஏனென்றால் இது பல தீவிர நோய்களுக்கான அபாயங்களை அதிகரிக்கிறது. குறைபாடுகளை சரி செய்வதற்கு அல்லது தடுக்க கூடுதல் மருந்துகளை எடுக்கலாம். நோய் வந்த பிறகு மருந்துகள் எடுத்து கொள்வதை விட வராமல் தடுப்பதே முக்கியமானது. எனவே ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கங்களை பின்பற்றி ப்ரோஸ்டேட் கேன்சர் உட்பட எவ்வித அபாய நோய்களின் ஆபத்தை தவிர்த்து கொள்ளலாம்.

First published:

Tags: Men Health, Prostate cancer