ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சி முடிவுக்கு வருவதையே மெனோபாஸ் என்றூ குறிப்பிடுகிறோம். இது ஒரே நாளில் நிகழ்ந்து விடாது. தொடர்ந்து 12 மாதங்களுக்கு மாதவிலக்கு நிகழவில்லை என்றால் மட்டுமே அந்த பெண் மெனோபாஸ் அடைந்ததாக அர்த்தம். பொதுவாக 40 வயது 50 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் பெண்கள் மெனோபாஸ் அடைகின்றனர்.
எனினும், ஒரு பெண்ணின் வயது, அவர் சார்ந்த இனம், மரபு மற்றும் மருத்துவ காரணங்களால் இது வேறுபட கூடும். மெனோபாஸ் அடைந்த பிறகு பெண்கள் கர்ப்பம் அடைய முடியாது. கர்ப்பப்பையில் கரு முட்டைகளின் உற்பத்தி முழுமையாக நின்றுவிடும். அதேபோன்று பெண் பாலின ஹார்மோன்கள் உற்பத்தியும் நின்றுவிடும்.
மெனோபாஸ் ஏற்படும்போது பெண்ணின் உடலில் ஏராளமான மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக ஒவ்வொரு மாற்றமும் வயதுக்கு ஏற்றாற்போல நிகழும். அதேசமயம், வயோதிகம் காரணமாக ஏற்படும் வழக்கமான உடல் மாற்றங்களுக்கும், மெனோபாஸ் காரணமாக நிகழும் மாற்றங்களுக்கும் இடையே பெரிய அளவுக்கு வேறுபாடுகளை உணர முடியாது.
ஒரு பெண்ணுக்கு எவ்வளவு வேகமாக, தீவிரமாக மெனோபாஸ் ஏற்படுகிறதோ, அதைப் பொருத்து அறிகுறிகள் மாறும். பெண்ணின் உடலில் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி குறைவதன் அறிகுறியாக இவை நிகழும். பொதுவாக மாதவிலக்கு தவறுவது, மாதவிலக்கு காலத்தில் சிக்கல் ஏற்படுவது, மாதவிலக்கு காலம் நீளமானதாக அல்லது குறுகியதாக இருப்பது, அதிகமான அல்லது குறைவான உதிரப் போக்கு, வெள்ளைப்படுதல் போன்றவை மெனோபாஸ் நெருங்குவதன் அறிகுறிகள் ஆகும். இது மட்டுமல்லாமல் வேறு பல அறிகுறிகள் மூலமாகவும் இதனை உணர்ந்து கொள்ளலாம்.
உடல் வெப்பமயமாதல்
உடலில் திடீர், திடீரென்று உஷ்ணம் தென்படும். உங்கள் முகம், கழுத்து, மார்பு போன்ற பகுதிகளில் வியர்வை கொட்டும். பொதுவாக வேலை செய்து களைத்தாலும் கூட இதே அறிகுறிகள் ஏற்படும் என்றாலும், சாதாரண சமயத்திலும் இவை நிகழ்வது மெனோபாஸ் அறிகுறியாகும்.
இரவு நேர வியர்வை
பகல் பொழுதில் உடல் உஷ்ணமாக இருப்பது எல்லோருக்கும் பொதுவானது தான் என்றாலும், மெனோபாஸ் நெருங்கி வரும் பெண்களுக்கு இரவு நேரத்திலும் வியர்க்க தொடங்கிவிடும். இந்த தொந்தரவால் அவதி அடையும் பெண்கள் இரவு தூங்கும் முன்பாக குளித்துவிட்டு உறங்க செல்லலாம்.
Also Read : நீங்கள் வெயிட் போடுறீங்க என்பதை ஆரம்பத்திலேயே உணர்த்தும் 8 அறிகுறிகள்..!
குளிர்
மெனோபாஸ் முன்பாக உடல் எப்படி உஷ்ணம் அடைகிறதோ, அதேபோல மிகுந்த குளிர்ச்சி நிலையை அடையும். உடல் உஷ்ணத்தின் தொடர்ச்சியாக இது நிகழும். உடல் குளிர்ச்சி அடைவது மெனோபஸ்கான அறிகுறி என்பதால் அதுகுறித்து பெரிய அளவில் நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை.
பெண்ணுறுப்பு வறட்சி
மெனோபாஸ் நெருங்கும் பெண்களுக்கு பெண்ணுறுப்பு வறட்சி அடையத் தொடங்கும். குறிப்பாக, பாலியல் உறவு கொள்ளும்போது அசௌகரியம் ஏற்படும். இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ளும் பெண்கள் பாலியல் உறவு வைத்துக் கொள்ளும்போது லூப்ரிகண்ட் பயன்படுத்த வேண்டும்.
சிறுநீர் பிரச்சனை
மெனோபாஸ் அடையும் பெண்களுக்கு சிறுநீர் பை மீதான கட்டுப்பாட்டை உடல் இழந்து விடும். இதனால், சிறுநீர் கசிவு ஏற்படலாம். குறிப்பாக இருமல் ஏற்படும்போது சிறுநீர் கசியக்கூடும். சிலருக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற தேவை அதிகரிக்கும்.
Also Read : கர்ப்பிணிகளுக்கும் கேன்சர் ஆபத்து... தினமும் நாம் பயன்படுத்தும் பொருட்களில் மறைந்திருக்கும் அபாயம்!
தூக்கமின்மை
நீரிழிவு, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படும் நபர்களுக்கும் தூக்கமின்மை பிரச்சினை ஏற்படக் கூடும் என்றாலும், எந்தப் நோய்களும் இல்லை என்ற நிலையில் மெனோபாஸ் அடையும் பெண்களுக்கு தூக்கமின்மை பிரச்சினை ஏற்படக் கூடும். இதைத் தவிர்க்க புத்தகம் வாசிக்கலாம்.
உணர்வு மாற்றங்கள்
மெனோபாஸ் அடையும் பெண்களுக்கு மனம் ஒரு நிலையில் இருக்காது. சிலருக்கு கவலை ஏற்படலாம். சிலர் மன எரிச்சல், மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படுவர். சின்ன, சின்ன பிரச்சனைகளுக்கு கோபம் கொள்ளும் வகையில் மனம் நிதானத்தை இழக்கும்.
உடல்ரீதியான மாற்றங்கள்
மெனோபாஸ் நெருங்கும்போது பெண்ணின் சருமம் மற்றும் முடி ஆகியவற்றில் வறட்சி ஏற்படும். அத்துடன் மெலிவடையத் தொடங்கும். சில பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்கக் கூடும். வயிற்றுப் பகுதியை சுற்றியிலும் கொழுப்பு சேரும். தடைகள் வலு இழக்கலாம். மூட்டுகளில் வலி ஏற்படலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Health Checkup, Menopause