உடல் பருமன் கொண்ட ஆண்கள் பெரும்பாலும் ஜிம் செல்வதும் வாக்கிங் போவது அல்லது எளிய சில உடற்பயிற்சிகள் மூலம் தங்கள் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை எரிக்க (fat-burning) தீவிர முயற்சி செய்வார்கள். இப்படி உடலில் உள்ள கொழுப்பை எரிக்க முயற்சி செய்யும் ஆண்கள் தங்களது உடற்பயிற்சிக்கு முன் ஒரு கப் ஸ்ட்ராங் காபியை குடிக்க வேண்டும். அப்படி குடிப்பது அவர்களின் கொழுப்பை எரிக்கும் முயற்சிக்கு கூடுதல் பலனளிக்கும் என்று ஆய்வு ஒன்று சொல்கிறது.
விளையாட்டு ஊட்டச்சத்தின் சர்வதேச சங்கத்தின்(International Society of Sports Nutrition) ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, ஒரு கிலோ கிராமிற்கு சுமார் 3 மில்லிகிராம் (மிகி / கிலோ) கஃபைன் உட்கொள்வது ஒரு கப் வலுவான காபிக்கு சமம். ஏரோபிக் உடற்பயிற்சிக்கு அரை மணி நேரத்திற்கு முன்பு மேற்கண்ட விகிதத்தில் கஃபைன் உட்கொண்டது ஆண்களுக்கு கொழுப்பு எரியும் விகிதத்தை கணிசமாக அதிகரிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலை நேரத்தை விட பிற்பகலில் உடற்பயிற்சி செய்தால் கொழுப்பை எரிக்கும் முயற்சியில் காஃபின் பங்கு அதிகம் பிரதிபலிப்பதாகவும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் உள்ள கிரனாடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முன்னணி ஆராய்ச்சியாளர் பிரான்சிஸ்கோ ஜோஸ் அமரோ-கஹேட் கூறுகையில், "நாங்கள் செய்த ஆய்வு முடிவுகளின் படி, ஏரோபிக் உடற்பயிற்சி பரிசோதனையை செய்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன் அதிக அளவு காஃபின் சாப்பிடுவது, நாள் நேரத்தைப் பொருட்படுத்தாமல் உடற்பயிற்சியின் போது அதிகபட்ச கொழுப்பு ஆக்ஸிஜனேற்றம் அதிகரிக்கிறது என்பது தெரிய வந்துள்ளது" என்றார்.
இந்த ஆய்வை பொறுத்தவரை, விளையாட்டு செயல்திறனை மேம்படுத்துவதற்காக உலகில் பொதுவாக பயன்படுத்தப்படும் எர்கோஜெனிக்(ergogenic) பொருட்களில் ஒன்றான காஃபின், ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கிறதா அல்லது உடற்பயிற்சியின் போது "கொழுப்பை எரிப்பதை" அதிகரிக்கிறதா என்பதை கண்டறிவதை நோக்கமாக கொண்டு ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இந்த ஆராய்ச்சியில் 32 வயது சராசரி ஆண்கள் குழு பங்கேற்றது. இந்த குழுவானது 7 நாள் இடைவெளியில் 4 முறை உடற்பயிற்சி பரிசோதனையை செய்து முடித்தது.
பற்கள் மஞ்சள் நிறத்தில் மாற என்ன காரணம்..? கறையை அகற்ற என்ன வழி..?
இந்த குழு ஒருகிலோகிராமில் சுமார் 3 மி.கி கஃபைன் அல்லது placebo எனப்படும் மருத்துவ நடைமுறைகளால் கிடைக்கக்கூடிய பலன்களை வழங்கக்கூடிய மருந்தை காலை 8 மற்றும் மாலை 5 மணிக்கு உட்கொண்டனர். ஒவ்வொரு உடற்பயிற்சி சோதனைக்கும் முந்தைய நிலைமைகள் அதாவது கடைசி உணவு, உடல் உடற்பயிற்சி அல்லது தூண்டுதல் பொருட்களின் நுகர்வு ஆகியவற்றிலிருந்து கடந்த மணி நேரங்கள் உள்ளிட்டவை கண்டிப்பாக தரப்படுத்தப்பட்டன. மேலும் உடற்பயிற்சியின் போது கொழுப்பு ஆக்ஸிஜனேற்றம் அதற்கேற்ப கணக்கிடப்பட்டது.
முடிவில் சுருக்கமாக சொல்வதானால் இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் ஆண்கள் ஸ்ட்ராங்கான அளவில் கஃபைன் சாப்பிட்டு விட்டு கூடவே பிற்பகலில் சற்று தீவிரமாக ஏரோபிக் உடற்பயிற்சி செய்யலாம். இதன் மூலம் கொழுப்பை வேகமாக எரிக்க முடியும். எனவே உடற்பயிற்சி செய்யும் நபர் தங்களுக்கு தேவையான முடிவை விரைவில் பெற நல்ல ஸ்ட்ராங்கான காபியை பருகலாம்.