முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஆணுறுப்பின் வளர்ச்சி எந்த வயதில் நிற்கும்..? வளர்ச்சியை பாதிக்கும் விஷயங்கள் என்ன..?

ஆணுறுப்பின் வளர்ச்சி எந்த வயதில் நிற்கும்..? வளர்ச்சியை பாதிக்கும் விஷயங்கள் என்ன..?

ஆணுறுப்பின் வளர்ச்சி

ஆணுறுப்பின் வளர்ச்சி

குழந்தைப் பருவத்தில் இருந்தே தொடங்கும் ஆணுறுப்பின் வளர்ச்சியை பருவ வயதில் ஏற்படும் மாற்றத்தின் மூலம் புரிந்து கொள்ள முடியும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பெரும்பாலான ஆண்களுக்கு, ஆணுறுப்பின் அளவு, வளர்ச்சி, நீளம் ஆகியவைப் பற்றி கவலை இருக்கிறது. தன்னுடைய ஆணுறுப்பு போதுமான அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளதா என்ற சந்தேகம் பெரும்பாலான ஆண்களுக்கு இருக்கிறது.

அதே போல ஆணுறுப்பு பெரியதாக இருந்தால் பாலியல் உறவில் சிறப்பாக ஈடு பட முடியும் என நினைக்கின்றனர். ஆனால், பெரும்பாலான ஆண்களுக்கு சராசரி அளவில் ஆணுறுப்பு இருக்கிறது. மேலும், ஆணுறுப்பின் அளவுக்கும், தன்னுடைய துணையை பாலியல் ரீதியாக திருப்திப்படுத்துவதற்கும் சம்மந்தம் இல்லை என்றும், ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பாலியல் உறவில் ஒருவருக்கு கிடைக்கும் திருப்திக்கும், ஆணுறுப்பு அளவுக்கும், நீளத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், பலருக்கும் அந்த புரிதல் இல்லை. ஆண் பெண் உட்பட பலரும் இத்தகைய தவறான கண்ணோட்டத்தில் உள்ளனர். அன்பு மற்றும் காதல், உணர்ச்சி, முன் விளையாட்டுக்கள், ஒரு ஜோடி எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றன போன்றவை மகிழ்ச்சியான பாலியல் உறவுக்கு தேவை.

ஆணுறுப்பின் சராசரி அளவு என்ன, எந்த வயது வரை அது வளர்ச்சி அடைகிறது போன்ற விவரங்களை தெரிந்து கொள்வதன் மூலம், பாலியல் உறவில் ஏற்பட்டுள்ள தவறான புரிதல்களை சரி செய்து கொள்ள முடியும்.

ஆணுறுப்பு எவ்வளவு காலம் வரை வளரும்?

குழந்தைப் பருவத்தில் இருந்தே தொடங்கும் ஆணுறுப்பின் வளர்ச்சியை பருவ வயதில் ஏற்படும் மாற்றத்தின் மூலம் புரிந்து கொள்ள முடியும். 12 முதல் 16 வரையிலான வயதில் உள்ள டீனேஜ் சிறுவனுக்கு, உடலில் உண்டாகும் மாற்றங்கள் வெளிப்படையாக தெரியும். குரல் மாறுதல், அந்தரங்க பாகங்களில் முடி வளர்வது, மீசை தோன்றுவது, உட்பட ஆணுறுப்பின் வளர்ச்சியிலும் மாற்றங்கள் ஏற்படும். உடலில் சுரக்கும் டெஸ்டிரோடோன் காரணமாக இந்த மாற்றங்கள் உண்டாகும். இந்த கால கட்டத்தில் தான் ஆணுறுப்பு மிக வேகமாக வளர்ச்சி அடையும், அதன் நீளம் மற்றும் அளவும் அதிகரிக்கும்.

ஆனால், ஆண்களின் விதைப்பைகள் என்பது பிறந்தபோது இருக்கும் அதே அளவில் தான் 8 அல்லது 9 வயது வரை காணப்படும். அதன் பின்பு 11 முதல் 15 வயது வரையில் அவை வளரும்.

காலை எழுந்ததும் வெதுவெதுப்பான நீர்... அதனால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரியுமா?

ஆணுறுப்பின் வளர்ச்சி எந்த வயதில் நிற்கும்?

ஆண்களின் பருவ வயது முடியும் சமயத்தில் ஆணுறுப்பின் வளர்ச்சியும் நின்று போகும். அதே சமயம், ஆண்களின் உயரத்திற்கும், ஆணுறுப்பின் வளர்ச்சிக்கும் இடையே தொடர்பு உண்டு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆண்களின் உயரமாக வளர்வதற்கேற்ப ஆணுறுப்பின் அளவும் வளர்ச்சி அடையும்.

ஆணுறுப்பின் சராசரி அளவு:

2020 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, ஒரு ஆணுறுப்பு விரைப்புத்தன்மையில் இருக்கும் போது அதன் சராசரி அளவு என்பது 5.1 இன்ச் முதல் 5.5 இன்ச் வரை காணப்படும் மற்றும் சராசரியாக ஆணுறுப்பின் பருமன் அளவு 4.59 இன்ச் வரை இருக்கும்.

ஆணுறுப்பின் வளர்ச்சியை இந்த விஷயங்கள் பாதிக்கின்றன

மரபணு கோளாறு, ஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வு, வாழ்வியல் பழக்க வழக்கங்கள் போன்ற பல்வேறு விஷயங்கள் ஆணுறுப்பின் வளர்ச்சியை பாதிக்கின்றன. ஒருவரின் உடல் வாகு, மருத்துவ பிரச்சினைகள் போன்றவை காரணமாகவும் ஆணுறுப்பின் தோற்றத்தில், வளர்ச்சியில் மாற்றம் ஏற்படலாம்.

First published:

Tags: Men Health