Home /News /lifestyle /

இந்த செக்ஸ் பிரச்சனை பெண்களுக்கு மட்டுமல்ல... ஆண்களுக்கும் இந்த குறைபாடு ஏற்படுமாம்..!

இந்த செக்ஸ் பிரச்சனை பெண்களுக்கு மட்டுமல்ல... ஆண்களுக்கும் இந்த குறைபாடு ஏற்படுமாம்..!

செக்ஸ் பிரச்சனை

செக்ஸ் பிரச்சனை

டெஸ்டிரோடோன் என்பது ஆண்களிடம் செக்ஸ் ஆர்வத்தை தூண்டுகிறது. குறிப்பாக, ஆண்கள் பருவம் எய்துவதற்கான முக்கிய காரணியாக இது விளங்குகிறது. மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆண்களுக்கு ஆற்றல் வழங்கக் கூடியதாக இது இருக்கிறது.

பொதுவாக 45 வயதை தாண்டிய பெண்களுக்கு அல்லது 55 வயதிற்கு உள்ளாக இந்த விஷயம் நடந்தே தீரும். அதாவது, பெண்களுக்கான மாதவிடாய் முழுமையாக நின்று விடும். நம்மில் பெரும்பாலானோருக்கு இந்த விஷயம் குறித்து தெரிந்திருக்கும்.

ஆனால், நம்மில் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம். ஆண்களுக்கும் இதேபோன்ற நிலை ஏற்படும் என்பது தான். மோனோபாஸ் என்பதைப் போல இது ஆண்ட்ரோபாஸ் எனப்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் மோனோபாஸுக்கும், ஆண்களுக்கு வரும் ஆண்ட்ரோபாஸுக்கும் இடையே எண்ணற்ற வித்தியாசங்கள் உண்டு என்றாலும், இரண்டுக்குமான அறிகுறிகள் ஒன்று போல இருக்கின்றன.

ஆண்ட்ரோபாஸ் என்பது செக்ஸ் மீதான உங்கள் நாட்டத்தை குறைக்கிறது. நீங்கள் பலவீனமாக உணர்வதுடன், உங்கள் எண்ண ஓட்டமும் மந்தமாகிறது. சுமார் 50 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்களுக்கு டெஸ்டிரோடோன் குறைகிறது என்பதையே இது குறிக்கிறது. ஆண்களின் விதைகளில் இருந்து டெஸ்டிரோடோன் சுரக்கிறது.

டெஸ்டிரோடோன் என்பது ஆண்களிடம் செக்ஸ் ஆர்வத்தை தூண்டுகிறது. குறிப்பாக, ஆண்கள் பருவம் எய்துவதற்கான முக்கிய காரணியாக இது விளங்குகிறது. மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆண்களுக்கு ஆற்றல் வழங்கக் கூடியதாக இது இருக்கிறது.

மோனோபாஸ் என்பதும் இதைப் போலத்தான். மாதவிடாய் நின்றுவிட்ட பிறகு பெண்களால் உடல் அளவில் செக்ஸ் உறவுக்கு தயார் ஆக முடியாது. உடல் பலவீனம் அடையும். எல்லா பெண்களுக்கும் இது கட்டாயம் நடந்தே தீரும். ஆனால், ஆண்களுக்கு ஏற்படும் ஆண்ட்ரோபாஸ் அப்படி கிடையாது. எல்லா ஆண்களும் இதை உணருவதில்லை.



அடுத்ததாக, இந்த நிலையை எட்டிய ஆண்களுக்கு பாலியல் உறுப்பு முற்றிலுமாக செயல் இழந்துவிட்டதாக அர்த்தம் இல்லை. ஹார்மோன் குறைபாடு காரணமாக ஆண்களின் ஆர்வம் மட்டுமே குறையும்.

அறிகுறிகள்

வயது அதிகரிக்கும்போது தான் இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது. உடல் அளவிலும், மனதளவிலும் இதற்கான அறிகுறிகளை நீங்கள் அனுபவிக்கக் கூடும்.

* விறைப்புத்தன்மை குறைபாடு
* செக்ஸ் நாட்டம் குறைவு
* மன அழுத்தம் அல்லது கவலை
* ஆற்றல் குறைபாடு
* கவனச்சிதறல்
* தூக்கமின்மை
* பெண்களைப் போல மார்பகம் வளர்வது
* குழந்தையின்மை

திருமணம் ஆன ஒரு மாதத்திற்குள் கருத்தரிக்க முடியுமா..? மகப்பேறு மருத்துவரின் விளக்கம்..!

ஆண்ட்ரோபாஸ் காரணங்கள் :

ஆண்கள் 30 வயதில் தொடங்கி ஆண்டுதோறும் 1.6 சதவீதம் அளவுக்கு டெஸ்டிரோடோன் குறையத் தொடங்குகிறது. இது இயற்கையான, ஆனால் எந்தவித சிக்கலும் இல்லாத ஒன்றாக நடைபெறுகிறது. எனினும் குறைபாடு அதிகமாகும்போது அதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்குகிறது.



இதை கண்டறியவது எப்படி?

35 வயதுக்கு மேற்பட்ட நிலையில், உங்கள் செக்ஸ் ஆர்வம் குறைபாடு, விறைப்புத்தன்மை குறைபாடு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால், நீங்கள் கட்டாயம் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பரிசோதனை செய்யப்படும்.

உடல் மற்றும் மன ரீதியாக தாக்கும் PTSD என்றால் என்ன..? அறிகுறிகளும்... சிகிச்சைகளும்...

சிகிச்சை முறை உண்டா?

இதனால் உங்களுக்கு பெரிய அளவுக்கு தொல்லை இல்லை என்றால், நீங்கள் சிகிச்சை பெறாமலே இதை சமாளித்துக் கொள்ள முடியும். எனினும், வாழ்வியல் மாற்றங்களால் நீங்கள் இதை சரி செய்ய இயலும்.

* ஆரோக்கியமாக சாப்பிடவும்.
* தினசரி உடற்பயிற்சி செய்யவும்.
* முறையாக தூங்கவும்.
* மன அழுத்தம் கூடாது

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Sex

அடுத்த செய்தி