ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மும்பையில் திடீரென்று பரவும் தட்டம்மை : காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

மும்பையில் திடீரென்று பரவும் தட்டம்மை : காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

தட்டம்மை மாதிரிப்படம்

தட்டம்மை மாதிரிப்படம்

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத குழந்தைகளுக்கு, ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள், மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளுக்கு தட்டம்மை தீவிரமாக மாறும் ஆபத்தும் இருக்கிறது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பெரும்பாலான குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய வைரஸ் பாதிப்புகளில் ஒன்று தான் அம்மை. தட்டம்மை என்பது மிகவும் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் அம்மை நோய்களில் ஒன்று. அதுமட்டுமல்லாமல் இது எளிதில் ஒரு குழந்தையிடமிருந்து மற்றவருக்கு பரவக்கூடிய தொடராகும். மும்பையில் திடீரென்று தட்டம்மையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து, அதி வேகமாக பரவி வருகிறது.

மும்பையில் இரண்டு நாட்களுக்குள் நாட்களில் 13 மாத குழந்தை முதல் ஐந்து வயது குழந்தை வரை மூன்று குழந்தைகள் தட்டம்மையால் உயிரிழந்திருக்கிறார்கள் என்ற மன வருத்தம் தரக்கூடிய செய்தி இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. எனவே மும்பை முனிசிபல் கார்பரேஷன் ஒவ்வொரு வீடாக சென்று பாதிக்கப்பட்ட குழந்தைகள் இருக்கிறார்களா எவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தகவல் அளித்து வருகிறது.

இளம் குழந்தைகளுக்கு அம்மை நோய் ஏற்பட்டால் அது சில நேரங்களில் தீவிரமான அறிகுறிகளை வெளிப்படுத்தும். ஒரு சில குழந்தைகள் இறந்து போகவும் நேரிடும் என்ற அளவுக்கு அபாயமானது. தட்டம்மை நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு காய்ச்சல் மற்றும் உடல் முழுவதும் ரேஷஸ் உண்டாகும். தட்டம்மை பாதிப்பு எவ்வாறு ஏற்படுகிறது, தடுப்பு முறைகள் மற்றும் சிகிச்சைகள் பற்றி முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

Read More : பிறந்த குழந்தையை பராமரிக்க புதிய அம்மாக்களுக்கான கைட்லைன்..

தட்டம்மை என்றால் என்ன, அது எவ்வாறு பரவுகிறது?

ஒரு நபரின் நுரையீரலை தீவிரமாக பாதிக்கக்கூடிய வைரஸ் தொற்றுகளில் ஒன்றுதான் தட்டம்மை. அது மட்டுமல்லாமல், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த தொற்றால் பல லட்சகணக்கானவர்கள் இறந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி 2017 ஆம் ஆண்டு, தட்டமையால் கிட்டத்தட்ட 1,10,000 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் மற்றும் ஐந்து வயதுக்கு குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாராமேக்ஸிவைரஸ் குடும்பத்தில் இருந்த ஒரு வைரஸால் ஏற்படக்கூடிய இந்த அம்மை நோய், முதலில் நுரையீரல் அமைப்பு, மூச்சு குழாய்களை பாதித்து, ரத்தம் வழியாக உடல் முழுவதும் அனைத்து பாகங்களுக்கும் பரவுகிறது.

தட்டம்மை இரண்டு மடங்காகப் பரவுகிறது

தடுப்பூசியினால் தட்டம்மை பாதிப்பு வராமல் தடுக்க முடியும் என்பது ஒருபக்கம் இருந்தாலும், மீண்டும் இந்த வைரஸ் தொற்றால் தட்டம்மை நோய் அதி வேகமாக இந்தியாவில் பரவி வருகிறது. உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவலின்படி 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

Read More : பாலியல் தொல்லைக்கு ஆளாகும் குழந்தைகள் உளவியல் ரீதியாக சந்திக்கும் பிரச்சனைகள்... ஷாக் ரிப்போர்ட்

 இது மிகவும் தீவிரமாக பரவும் வைரஸ் தொற்று என்பதால், தொற்று பாதித்த நபர் அல்லது குழந்தையின் அருகில் இருந்தாலே, குழந்தையின் சளி, எச்சில், வழியே வைரஸ் பரவி நீங்களும் பாதிக்கப்படலாம்.

தட்டம்மையின் அறிகுறிகள்:

பொதுவாக வைரஸ் தொற்று ஒரு நபரை பாதிப்பதற்கு குறைந்தது ஏழு நாட்கள் தேவைப்படும். ஆனால் தட்டம்மையை பொறுத்தவரை, நாட்களில் 10 – 12 நாட்களில் அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் தென்பட்ட பிறகு, குறைந்த பட்சம் ஏழு நாட்கள் வரை நீடிக்கும். சிலருக்கு நோய்த்தொற்றின் தீவிரம் காரணமாக கூடுதலாக அறிகுறிகள் நீடிக்கலாம்.

தட்டம்மையின் முதல் அறிகுறியே தீவிரமான காய்ச்சல். காய்ச்சல் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும். அம்மை போட்டாலே உடலில் கொப்புளங்கள் மற்றும் ரேஷஸ் தோன்றும். தட்டம்மையில் உடல் முழுதும் சிவப்பு நிறத்தில் தடுப்பிகள் காணப்படும். முதலில் தலை மற்றும் முகத்தில் தோன்றிய கொஞ்சம் கொஞ்சமாக உடல் முழுவதும் பரவும்.

இதைத் தவிர்த்து, வறட்டு இருமல், தசை வலி, தீவிரமான சோர்வு, மயக்கம், தொண்டை வலி, ஆகிய அறிகுறிகளும் ஏற்படும். பொதுவாக இரண்டு மூன்று வாரங்களுக்குள் தட்டம்மை முழுவதுமாக நீங்கி விடும்.

தட்டம்மை பாதித்த குழந்தைகளுக்கான சிகிச்சைகள் :

தட்டம்மை என்பது வைரஸ் தொற்றால் ஏற்படுவதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி தானாகவே வைரஸை வெளியேற்றும் வரை இந்த இதற்கு வேறு எந்த மருந்தும் கிடையாது. எனவே நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுவதற்கு ஏற்ற மருந்துகள், அந்தந்த வயதினருக்கு ஏற்றவாறு மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.

அடுத்துக்காக வைட்டமின் ஏ குறைபாடு இருந்தால் தட்டம்மை அறிகுறிகள் தீவிரமாகும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். எனவே வைட்டமின் ஏ சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். வறட்டு இருமல், தொண்டை வலி, சளி மற்றும் காய்ச்சலுக்கான மருந்துகள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்துக் கொள்ள வேண்டும். அறிகுறிகள் குறையும் வரை தனிமையில் இருப்பது தொற்று மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க உதவும்.

Read More : சென்னையில் அதிகரித்து வரும் ‘மெட்ராஸ் ஐ’... சுய மருத்துவம் வேண்டாம் என எச்சரிக்கும் கண் மருத்துவர்

தட்டம்மை பாதிப்பை குறைக்கும் ருபேலா தடுப்பூசி :

தட்டமைக்கு தடுப்பூசி இருக்கிறது. மீசில்ஸ் ருபேலா - MR தடுப்பூசி என்ற தடுப்பூசி செலுத்திய குழந்தைகளுக்கு தட்டம்மையும் பாதிப்பு, அறிகுறிகள் தீவிரமாக மாறாது. தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் தட்டம்மையின் முழுவதுமாக தவிர்க்க முடியும். அதுமட்டுமில்லாமல் தட்ட வைரஸ் தொற்றுக்கு வெளிப்பட்டால் கூட இதனுடைய தாக்கம் குறைவாகவே இருக்கும்.

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத குழந்தைகளுக்கு, ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள், மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளுக்கு தட்டம்மை தீவிரமாக மாறும் ஆபத்தும் இருக்கிறது.

இந்தியாவில் தட்டம்மையை முழுவதுமாக நீக்குவதற்கான முயற்சி :

இந்தியாவில் ரூபெல்லாவை நீக்குவதற்காக, நாடு முழுவதுமே ஒன்பது மாதங்களில் இருந்து 15 வயது வரை இருக்கும் சிறுவர்களுக்கு 2017 ஆம் ஆண்டு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்காக தட்டம்மை தடுப்பூசி செலுத்தப்பட்டது. 2023 ஆம் ஆண்டுக்குள் தட்டம்மையை முழுவதுமாக ஒழித்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன், நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தட்டம்மையால் பாதிக்கப்பட்ட பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் நான்கு நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Chicken Pox, Kids Care